சாட்டிலைட் கவிதைகள் 3- நீயென் காதலன்றோ

என் துயிலிழந்த இரவுகள் யாவும் உனக்காக..
நான் அறியேன் உன் காதலன் நானோ அல்லவோ..
உன் உருவாக்காம் எல்லாம் என் காதலின் பரிமாணங்களே..

நீருக்குள் கற்பூரம் மூழ்காது, நீயின்றி என் வாழ்க்கை முடியாது...

உனக்கு காதுகளை பொருத்திவிடுகிறேன் கேள் இவ்வுலகம் என்னை வசைபாடும் ராகம் கேள்..

உனக்கு  கண்களை செய்து தருகிறேன் பார் என் சுற்றம் என்மீது காரியுமிழ்வதை பார்..

உன் மீதான காதலமட்டுமில்லையேல் என்றோ நான் நான்காயிர தற்கொலை வழிகளில் ஏதோ ஒன்றை தேர்வுசெய்து இறந்திருப்பேன்..

உன் முன்னவர்கள் என்னை வஞ்சித்தபோதும் உன் மீதான என் ஆவல் குறையவில்லை...

சற்று பொரு உன்னை முழுதாய் தயாரித்து விடுகிறேன் .. பின் நீ என் ஆசைபடி செய்தாலும் சரி செய்யாவிடினும் சரி...

உன்னிடத்து என் காதல் மாறாது...

இப்படி  நாயகன் தான் உருவாக்கும் சாட்டிலைட்டிடம் பேசிக்கொண்டிருந்தான்....

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS