அறிவொளியில் சில கிறுக்கல்கள் -6- நாளும் நடத்தும் நாடகம்

இங்கும் அங்கும் அலையும் அமரம்
இங்கிருந்து அங்கினை ஆளும் அரசம்
இவனை தேடி தேடி இங்கு என்னையும்
இழந்தேன் இன்னும் இதற்கு விடையில்லை!


இழந்தும் இல்லாதவன் இன்றியுமில்லை
இருந்தும் இங்கென் இயலாமை அறியவுமில்லை
நதியினில் நடக்கும் நீரும் கூட
நிலவதன் பிரதியை இழுத்தே நடக்கும்





நிலத்தினில் நிற்கும் நினைவிலா நானும்
நிஜதினை நம்பி நிற்பதும் ஏனோ
காலம்வரும் காத்திரு என்றோரெல்லாம் தன்னை
காலம் கொண்டு போனதாய் கூறினாரே

காலம் எது கடக்கும் தூறும் எது
காணா அது காணும் போது
காத்திருக்க காத்திருக்க காலம் வீணாகுதே
கடும்வெயில் காலத்தில் காத்திருந்த கரையினில்
கண்டேன் ஞானம் ஞாலத்தின் கானம்

நதியினில் நீருமில்லை நீரின்றி நிலவுமில்லை - அங்கீனிருந்து
நம்மை நாளும் நடத்தும் நாடகம்....


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post