சென்ற கட்டுரையில் சில அடிப்படைகளை பார்த்தோம்.. அவ புதுகவிதை ரகத்தின் அடிப்படை .. மறபு கவிதைகளுக்கு இன்னும் சில உப அடிப்படைகள் உண்டு.. முதலில் புதுகவிதையை முழுதாய் சொல்லிட்டு அப்புறம் மறபு கவிதை போலாம்...
புதுகவிதைக்கு சில வகையறாக்கள் உண்டு..
1) எழுதுகவிதை
2)கவியரங்க கவிதை
3)நடையற கவிதை
4) ஹைக்கூ
5) சென்ட்ரியூ
6) சன்னட்ஸ்..
1) எழுதுகவிதை .. வரிவடிவ ரைமிங் இருக்கனும்..
உதாரணமா..
நிலயென்ன நினைவுகள் என்ன
நிலவென்ன நீலவான் என்ன
இதில் நி நீ .. என்ன என்ன ரைமிங் ..
2)கவியரங்க கவிதை...
பேசுமொழி கவிதை எனவும் சொல்லலாம். மேடை ரக கவிதைகள் இவை சொல்லும் விதத்தில் வேறு வேறு சொற்களிலும் ரைமிங் வைப்பது..
உதாரணமாக..
அன்றில் அந்த பறவை பறக்க
ஆயினும் இந்த நெஞ்சம் திறக்க..
அன்றில் ஆயினும் ரைமிங்க்
3) நடையற கவிதை...
இது எந்த ரூல்ஸ்ம் இல்லாத ப்ரீஸ்டைல் கவிதை.. கட்டுரைய வரிவரியா மடிச்சு குடுத்தாலும் இந்த கவிதை வரும்..
உதாரணமா....
உள்ளம் ஊறிட ஊருக்கு
கேணி ஆகிட தெருக்கு
தேவை தீர்ந்ததே..
இதுல ரைமிங் இருந்தாலும் இல்லைனாலும் பிரச்சனை யில்ல..
4) ஹைக்கூ
இது 3 வரி நாலு வரி கவிதை .. சப்னு இருக்குற மாதிரியான சூப்பர் கவிதைகள்.. இதுக்கு ஒரே ஐடியா தான்... சப்தம் .. சிலபல் அடுக்கு படி இருந்தா போதும்..
575, 5552 இந்த சிலபல் இருந்தா ஹைக்கூ..
உதாரணமா..
தூரத்து கதவு
இழுத்து சாத்தபடுகிறது.
ஆழ்ந்த இரவினில்...
இது 575 சிலபல் (அசை)
அடைமழை தூறல்
இடியின் தாளம்
குடைக்கு உள்ளே
இன்பம்...
இது 5552 சிலபல் ..
5) சென்ட்ரியூ...
இது கொஞ்ச நீண்ட ஹைக்கூ.. இதுவும் சிலபல் தான்.. 7,5,12 .. 5,12,7 போல பத்து வரி அதுக்கும் மேல..
உதாரணமா...
சில நேர கனவுகள்
சில்லென்ற காற்றுபோல்
மெல்ல மெல்ல வீசிடும்..
7,5,12 இது..
அவள் பேசுகிறாள்
காற்றில் அலையும் கையசைவில்
லயிக்கிறேன் நான்...
இது 5,12,7
6)சன்னட்ஸ் / சோனட்ஸ்...
அங்கில மறபில் வந்த கவிதை நடையிது.. நம்ம ஸ்கூல் போயம் எல்லாம் சன்னட்ஸ் தான் .. ஓ காட் ப்யூட்டிபுல்.. என்பதெல்லாம்...
உதாரணமாக...
ஒரு ஆங்கில போயம் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து பாருங்கள் .. சன்னட்ஸ். கிடைக்கும்..
இன்றைய கவிதை ரகங்கள் இவைதான்.. இதை தொடர்ந்து இதற்குட்பட்டு எழுதபடும் வரிகள் எல்லாம் வரிவரி கவிதைதான்..
இன்னும் ஒரே ஒரு கட்டுரை தான் நீங்க கவிஞனாக... அடுத்த கட்டுரையில் தொடர்வோம்...
Post a Comment