கடவுள் என்பது என்ன ? 7- இயற்பியல்

இயற்பியல் இன்றைய அறிவியலின் இரண்டாம் தந்தை. ஒருவேளை இயற்பியலை அறிந்திருந்தால் கடவுளை எளிதில் நெருங்கிடலாம் என்பது இன்றைய அல்லது பண்டைய அறிவியல் ஆன்மீக் சித்தாந்தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பார்க்கலாம் அதுவும் உண்மையா என்று. இந்த குறளை பாருங்களேன்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி     சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இந்த குறளின் அர்த்தங்களை பலர் பலவிதமாக சொல்லிடுவர். ஆனால் வள்ளுவர் இதில் சொல்லவரும் இயல்பை பாருங்கள். கடவுளின் இயல்பை உரைக்க எண்ணியவர் சூசகமாய் சொல்கிறார். வேண்டுதல் வேண்டாமை  இலானடி. இப்படி  படிக்கையில் வேண்டும் தேவையும் வேண்டாமை தேவையும் இலானடி என்று அறிகிறோம்.

வேண்டுதல்; வேண்டாமை; இலானடி. வேண்டிட வேண்டாம். இலான்(இல்லாதவன் ) அடி சேர்ந்தார்க்கு. இந்த பத பொருளை பாருங்கள். வேண்டிட தேவையில்லை இல்லாதவன் தாள் சேர். என்பதாக படுகிறதா. அதைவிடுங்கள். இங்கே வேறோன்று இருக்கிறது. நமக்கு தேவையானது.

வேண்டுதல்  / வேண்டாமை. இலான். வேண்டுதலும் இல்லை வேண்டாததும் இல்லை. வேண்டுமென்று கேட்கவும் எதுவும் இல்லை. வேண்டாம் என்று விலக்கவும் எதுவும் இல்லை. இந்த மனநிலையையே ஜென்நிலை என்கிறது ஜெய்னமதம்.

ஆனால் இயற்பியலில் இந்த விசயம் கட்டுபடுகிறதே. அத சொல்வதற்கு முன் இயற்பியல் என்றால் என்ன? னு பார்வை .

இயல்பு = ஒரு பொருளோ அல்லது உயிரின் குணங்கள். மனிதனின் கேரக்டர் போல பொருள்களின் கேரக்டர் என்று வைத்துக்கொள்வோம்.. இயற்கை குணங்கள் என்பதே சரியான விளக்கம். டேய் இவன் பரம்பரையே இப்படிதான் என்பதுபோல குணங்கள்.

ரூதர்போர்ட் , ஐசக் நியுட்டன், போர், கெல்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற மேலைநாட்டு இயற்பியல் அறிஞர்களும். சர்.சி.வி.ராமன். போன்ற இந்திய இயற்பியல் அறிஞர்களும். ஒரு பொருளின் அல்லது உயிரின் இயல்பை அறிந்து அதன் மூலக்கூறுகளை அறிந்து அதன் காரணத்தை விளக்குகின்றனர். இவர்கள் அனைவரும் அணுவைப்பற்றியும் காந்தவிசை பற்றியும். ஔிக்கற்றை பற்றிய ஆய்வுகளையே பொதுவாக நிகழ்த்தினர்.

ஓர் அணு. அதன் உட்பிரிவு என பிரிக்கயில். நியூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரான் போன்ற நுண்துகள்கள் கொண்ட பெரும்பாலும் காலி இடமாக உள்ளதென அவர்கள் நிரூபித்தனர். பின் இந்நுண்துகள்களின் இயல்பையும். ஆற்றலையும். செயல்பாடுகளையும் சொல்கின்றனர்.

ஆன்மீகமும் கிட்டதட்ட அதையே சொல்ல முயல்கிறது. உதாரணமாக. பிண்டத்தில் இருப்பதே அண்டத்திலும் என்கிற வரி ஒன்றை உணர்த்த விழைகிறது. மறைமுகமாக அணுவை தொடுகிறது.

ஓர் அணு எப்போது ஸ்திரமாக இருக்கும் தெரியுமா?. இந்த வேண்டுதல் வேண்டாமை இலானடி நிகழும் போதுதான்.

எப்படி சொல்கிறேன்?. பாருங்கள். உங்களுக்கு பெருவெடிப்பு கொள்கை (பிக் பாங்க் தியரி) பற்றிய அறிமுகம் இருந்தால் அடுத்த இரண்டு பத்திகளை தாண்டி செல்லுங்கள் மற்றோர் அந்த இரு பத்திகளை படிக்க.

பெருவெடிப்பு கொள்கையென அகில விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளபட்ட பிரபஞ்சத்தின் பிறப்பைபற்றி சொல்ல விழைந்தால். ஒரே ஒரு அணு ஆதியும் மூலமும் அறிந்திடாத அணு அதன் எதிர்ச்சையான வெடிப்பில் பிறந்ததே பல்வேறு கேலக்ஸிகளும் நட்சத்திரங்களும். இன்னபிற கிரக துணைக்கிரக விண்கற்கள் போன்றன .

ஓரணுவின் உள்ளிருந்து மெல்ல மெல்ல பரிணமித்து முன்னேறி வந்ததே பூமியும் இன்னபிற கிரகங்களும் சூரியனும். ஆகவே அணுவின் மூலாதார சூத்திரத்தை பின்பற்றுகின்றன இவைகள்.

என்ன? ஒரு அணுவிலிருந்து இத்தனை கோடானகோடி அணுக்களா ? அப்படியானால் அந்த அணு எத்தனை பெரியது எத்தனை நுண்துகள் கொண்டிருக்கும்? அது எப்படி உருவானது ஏன் வெடித்தது ? போன்ற கேள்விகள் எழாமலில்லை. வேறுவழியின்றி இந்த கொள்கை ஏற்றுகொள்ள பட்டது.

வேண்டுதல் வேண்டாமை . இலா நிகழ்ந்தது அப்போது தான். நுண்துகள்கள் ஒன்றுக்கு ஒன்று ஈர்த்துக்கொண்டும் எதிர்த்துக்கொண்டும் இருக்க. அணுக்கருவான நியூட்ரான். இந்த தேவை இல்லாத ஒன்று. ப்ரோட்டான் போல வேண்டாமையும் எலக்ட்ரான் போல வேண்டுதலும் இல்லாத நியூட்ரான் தான் இரட்டிப்பாகும் தன்மையுடையது.

ரொம்ப குழப்பிட்டனோ? சரி சுருக்கமா. நியூட்ரான் இரட்டிப்பா மாறும். அதுபோல. எலக்ட்ரானையும் ப்ரோட்டானையும் ஈர்த்து வைத்திருக்கும். இதுவே அதன் இயல்பு. புரிஞ்சதா.

சரி இயற்பியலோ அல்லது இயற்பியலின் அம்சமோ தான் கடவுளா?.

நியூட்ரான் எலக்ட்ரானையும் ப்ரோட்டானையும் ஈர்த்து வைக்கிறது. கடவுள் தேவர்களையும் அசுரர்களையும் ஈர்த்துவைக்கிறார்.

நியூட்ரானுக்கு ப்ரோட்டானின் குணமும் உண்டு எலக்ட்ரானின் குணமும் உண்டு. கடவுளுக்கும் அதே.

நியூட்ரான் இரட்டிப்பாகும் பன்மடங்காகும். கடவுளும் அவதாரங்களாகிறார்.

இயற்பியல் ஆற்றல்கள் சில. ஔி ஆற்றல் . மின் ஆற்றல் .காந்த ஆற்றல். ஒலி ஆற்றல். கதிர் ஆற்றல். போன்றன கடவுளுக்கும் பொருந்துகிறது . அதுவும் சூப்பர்டீசியஸாக .

ஆனால். சில குறைகளும் உள்ளது. இயல்பாக ஒரு அணு மற்றொன்றை மாற்றிடாது. ஆனால் கடவுள் மாற்றலாம். பொருளின் நம் கண்ணுக்கு புலப்படும் டைமென்சன்கள் 4 மட்டுமே. அதுவும் நான்கு திசைகளில் மாற்றி மாறி நின்றால் மட்டுமே. ஆனால் அதற்கு அப்பாற் பட்ட டைமென்சன்களும் உள்ளது.

ஒலிகற்றையியல் ஆன குவான்ட்டம் தியரிபடி  நாம் அறியும் ஒலியின் ஆற்றலுக்கும் வேகத்திற்கும் அப்பாற்பட்டுவிடுகிறார் கடவுள்.

இது இன்னது என்று விவரிக்க முடியாத பொருளாகிறார் கடவுள். இயற்பியலில் . பொருளின் மூலக்கூறுவரை நிரூபனமாகிட வேண்டும். இதையே ஒரு பாடல் சொல்கிறது.

இத்துனை இதுவென இயல்பு இலான்
எத்துனை பெரிதினும் எடுக்க இயலான்
உத்தமாய் உயிருமாகி உயிரற்றது ஆகினான்
வித்தமாய் வீற்றிடும் வினையேது மிலான்..





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post