தேமாச்சிந்து

நேயக் காதல்  - சொல்லி
மாயப் பாவை
மேயுங் கண்ணில் - என்னை
ஓயச் செய்தாள்

தேன்சொல் தன்னைச் - சொல்லி
யான்கொள் பெண்ணே
மான்போல் சென்றாய் - மற்றோர்
யான்போல் நின்றாய்

யாழ்போல் மீட்ட  - நெஞ்சில்
ஊழ்செய் காயம்
வாழ்வாய் வந்தாய் - பின்னே
தாழ்தான் ஏனோ

மால்போல் மார்பில் - வைக்க
வால்போல் வந்தேன்
கால்போல் நின்னை- தாங்கி
தோல்போல் காப்பேன்

வாவி மீனாய் - நீயும்
ஆவி உள்ளே
தாவி துள்ளும் - இன்பம்
தூவி னாயே.

காற்றை போலக் - காதல்
ஆற்றும் ஆற்றும்
ஊற்றை போலக் - உள்ளம்
மாற்றும் மாற்றும்

நேற்றில் இல்லை - நெஞ்சத்
தாற்றில் இன்பம்
மாற்றும் இல்லை - பெண்ணே
மாண்புக் காதல்..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post