புதிதாய் சிந்து எழுத முனைவோர்க்கு...
சிந்து எப்படி? என்க்கு வாராது .. என்பவர்கள் எல்லாம் இங்க வாங்க.. பேசிக்க நான் சொல்றேன்.. நெக்ஸ்ட் ஸ்டெப் எல்லாம் ஜாம்பவான்கள் சொல்வார்கள்...
பேசிக்கா சிந்து என்பது லோக்கல் சாங்... வயல்காட்டுல. ஏரிகரையிலனு வர கேரக்டர்கள் பாடுற மாதிரியான சாங்.. இதுல ட்யூன் தான் முக்கியம்..
அந்த சிந்துக்கு ட்யூனும் வகையும் வாலிசார் எழுதுன ஒரு சினிமா பாட்டுல இருந்து விளக்கமா புரிஞ்சிக்க போறோம்...
சிந்து பாட்டுல சில வகைங்க இருக்கு.. பெரும்பாலான பாட்டு எல்லாம் குறிப்பிட்ட சில வகையில மட்டுமே இருக்கும்
1) சமநிலை சிந்து:
வானம் அழுதாத்தான் - இந்த
பூமியே சிரிக்கும்
வானம்போல் சிலபேர் - சொந்த
வாழ்க்கையும் இருக்கும்.
- க்கு பின்னாடி வரசொல் தனிச்சொல்னு பேரு. அதுக்கு முன்னாடி வர அறையடி பின்னாடி வர அறையடியும் சமமா இருந்தா சமநிலை சிந்து..
2) வியநிலைச் சிந்து
கொட்டும் மலைக் காலம் - உப்பு
விற்கப் போனேன்
காற் றடிக்கும் நேரம் - மாவு
விற்க்ப் போனேன்.
தனிச்சொல்லுக்கு முன்னாடி பின்னாடி வர அறையடி சமமா இல்லாதது வியநிலைச் சிந்து.
.3) காவடிச் சிந்து :
இது தனி ராகவகையில வரது.. காவடிசிந்துனு யூட்டூப்ல பாத்தா நிறைய இன்ஸ்ட்ருமண்டல் வீடியோ இருக்கு.. இதுக்கு அமைப்பும் உண்டு.
மேகம் உரசிய காற்று - வந்து
தேகம் உரசிது பாத்து
நெஞ்சம் உள்ளுற புண்ணாக
உலகத்தோர் காணாத
நிலைதான் இது கொலைதான்...
(மீதம் பின்னொருநாள் தொடர்வோம்)
சில சிந்து மெட்டுகள் சினிமா பாடலிலிருந்து....
உன் கண்ணில் நீர்வடிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி #வியநிலை
என்கன்னிப் பாவையன்றோ - கண்ணம்மா
என்னுயிர் நின்றதன்றோ. #சமநிலை
சின்னச் சின்ன - ஆசை
சிற கடிக்கும் ஆசை..
முத்து முத்து - ஆசை
முடிந்து விட்ட ஆசை.
#வியநிலை
நீ பாதி நான் பாதி கண்ணே - அருகில்
நீயின்றித் தூங்காது கண்ணே
#சமநிலை
என்னவளே அடி என்னவளே - எந்தன்
இதயத்தை தொலைத்து விட்டேன்.
#வியநிலை.
கோகிலமே நீ குரல் கொடுத்தால் - உன்னை
கும்பிட்டு கண் அடிப்பேன்
கோபுரமே உனை சாய்த்துக் கொண்டு - உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்
#வியநிலை
சுத்துதே சுத்துதே பூமி - இது
போதுமடா போதுமடா சாமி
#சமநிலை
முதன் முதலில் - பார்த்தேன்
காதல் வந்தது
என்னை மறந்து - எந்தன்
நிழல் போனது
#சமநிலை
நான் ஆணையிட்டால் - அது
நடந்து விட்டால்
#சமநிலை
Post a Comment