இராவணனின் ராமவதம்...

விரல் நூறிருந்தும் சீதையின் மேலொரு
விரல் படாவண்ணம் நிலம்பிளந்து கவர்ந்தேன்
குலமோ குணமோ முகமோஅறியாதுநீ
யுகங்களாய் எரித்தும் மீண்டும் எரிகிறேன்

இதோ இன்று இராவணன் கேட்கிறேன்..
அரக்கனெனப் பாவியென எனை எரித்தீரே
அரக்கனித்து மாண்பை குழைக்கும் இவரை
அரக்கனெனச் சொல்லாதீர்.அவமானம் சுடுகிறது..

பிள்ளையை பெண்டாளும் சண்டாளர்கள் மீது
ராமா பாயாதோ உம்பானம்..பானமடித்துளாயோ..
இலக்கின்றி அழைகிறானோ இலக்குவன் லஞ்சமோ
வாலிக்குபோல். மறைவிடம் கிடைக்கலையோ..காவிக்கோ
விட்டாய் கண்ணய மற்றவனை அடநீயும்தானே...

எங்கேயுன் தாசனனுமன் அவனுக்கும் பழக்கியதோ.
இன்னும் கூடக்கேட்பேன் என்கௌரவம் தடுக்காவிடின்...

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS