முக்கண் கொண்டாய்

தீயாய் நின்றாய் -ஈசா
முக்கண் கொண்டாய்
சேயைக் கேட்டாய் - தேவா
தாயைப் பெற்றாய்
அன்பைக் கொண்டாய் - கண்ணால்
காமம் கொன்றாய்
நேசர் தம்முள் - நீயும்
தேனாய் நின்றாய்
பாசம் வீசக் - காலன்
தன்னைக் கொன்றாய்
சூலம் கொண்டாய் - தானே
தாயும் ஆனாய்
ஆணும் பெண்ணும் - ஒன்றாய்
தேகம்  காட்டி
கர்வம் கொன்றாய் - உள்ளம்
தன்னை வென்றாய்.
கற்றை கூந்தல் - தன்னுள்
கங்கை வைத்தாய்
ஒற்றை காலில் - ஆடி
அ(ண்)டம் செய்தாய்.
வீறு கோபம் - தன்னில்
பிள்ளை கொன்றாய்
மாறு வேடம் - வந்து
பாவம் தீர்த்தாய்
தேவர் எல்லாம் - போற்றும்
ருத்ர கோலம்
கொன்றை சூடி - நீயும்
கூத்தும் காட்டி
வானம் கொண்ட - நீல
கண்டம் கொண்டாய்
ஈகை தந்து - நின்றாய்
எந்தை ஈசனே..



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post