கொற்றவை - தொடர்கதை 2

ஆமாம் அப்பார்ட்மெண்டை பொறுத்தவரை அந்த 27 ம் நம்பர் வீட்டின் கதை சுமார் ஆறு வருசம் முன்ன தொடங்குது..

ஆறு வருசத்துக்கு முன்ன இங்கயிருந்த ஒரு பொண்ணு பேரு கனிமொழி . நல்ல கலர்தான் அப்பார்ட்மெண்ட் மட்டுமல்ல . பல ஏரியா பசங்க எல்லாம் இவ பின்னாடியே சுத்துவாங்க அவ்வளவு அழகு..

ஒருநாள் இவள இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பாத்துருக்கான் . பேசிருக்கான் . ஒன்னும் செரிவரல . அன்னைக்கு ஒரு ரெண்டு போலீஸ் வந்து கூட்டிட்டு இல்ல கைது பண்ணி இழுத்துக்கிட்டு போனாங்க .. அப்ப தான் அவள அந்த அப்பார்மெண்ட் எல்லாரும் பார்த்தாங்க.

சில பசங்க வந்து தடுக்க பாக்க போலீஸ்காரனுங்க அவனுங்கள அடிச்சு தள்ளிவிட்டு கொண்டு போனாங்க . அப்படி என்ன பிரச்சனை? என்ன கேஸ்? னு கேட்டதுக்கு போலீஸ்காரங்க அவள் முகத்துல காரிதுப்பி அவமானப் படுத்த ஒட்டுமொத்த அப்பார்ட்மெண்டும் எதிர்க்க தொடங்கியதும். போலீஸ்காரங்க அவள் கஞ்சா விக்கிறதா பொய்யா ஒரு விசயத்த சொல்ல..

அந்த இடமே ஒரே கலேபரம் ஆகி கலெக்டர் வரை போக தான் இதுக்கெல்லாம் காரணம் இன்ஸ்பெக்டர் னு தெரியவருது.. அப்புறம் கலெக்டர் இன்பெக்டர வேற ஊருக்கு மாற்றிட இவங்கள சன்ஸ்பென்ட் பண்ண. பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது..

சரியா ஒரு வாரம் ஒரு ஞாயிறு மாலை மறுபடியும் அதே போலீஸ்காரர்கள் அவளை இழுத்துச் செல்ல மறுபடியும் அப்பார்ட்மெண்ட் முழுக்க திரண்டுவர . இம்முறை காரணம் கலெக்டர் என்று தெரிய கலெக்டர் மீதும் நடவடிக்கை பாயந்தது ..

இத்தனைக்கும் அவளுக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் சனங்களுக்கும் இருந்த பழக்கமும் பிரியமும் தான் காரணம்.  மூனு மாசந்தாண்டி ஒருநாள் பக்கத்து கடைவீதிக்கு போனவள அந்த நாட்டு ராணுவம் வந்து பிடிச்சுட்டு போனத பார்த்து சில பசங்க அவளுக்காக போய் பேச அவள திரும்ப அனுப்பிட்டதா ராணுவம் சொல்ல . ஆனால் அவளோ வரவில்லை  ஆளும் காணவில்லை. அன்றுதான் அவளை கடைசியாக பார்த்ததாக அப்பார்ட்மெண்டில் பலரும் கூறினர்..

அந்த கலெக்டர் தான் எதாவது பண்ணிருப்பான் . இல்ல இந்த இன்ஸ்பெக்டர் தான் அவள கொன்னுருப்பான் அதான் அவ ஆவியா சுத்துறான்னு ஆளாளுக்கு ஒரு கதை சொல்கின்றனர்..

இதை முழுக்க விசாரித்த காந்தன் அவளை தேடி வந்தவன்.. இன்று வரை அந்த வீட்டிற்கு அவளிருப்பதாய் எண்ணி வாடகை கொடுத்திருந்தவன்.. அவனும் கனிமொழி இறந்துட்டதா தான் முடிவு செய்தான்.. காரணம் அவன் தேடல்கள் எதுவும் துளியும் ஔிகாட்டவில்லை. அதன்பின் அவனும் அவளுக்கான ஈமக்காரியங்களை செய்து அவளின் நித்தியத்துக்கு உதவினான்..

ஆனால் காந்தனுக்கு கனிமொழி எந்தவகையிலும் உறவில்லை.. நாளடைவில் தானும் அவளை மறந்து போனான். அவ்வபோது வரும் நினைவுகளில் அந்த ஒற்றை கேள்விதான் அவனுக்கு பதில் தரவே இல்லை..  ஆம் இன்ஸ்பெக்டர் கலெக்டர் வரை மட்டுமே இருந்த பிரச்சனையில் ஏன்? எப்படி? எதற்கு? ராணுவமே வரனும்?  என்பது தான் அவனை மிகவும் குழப்பியது..

இப்படித்தான் கனிமொழி ஒரு புரியாத புதிராகிப் போனாள். அந்த புதிருக்கு ஆளுக்கொரு பதிலும் பொழிப்புரையும் தீட்டிக்கொண்டு மன அமைதி கொண்டிருந்தனர். ஆனால் சிலருக்கு அவள் ஆவியாகஅந்த வீட்டில் இருப்பதாக  ஒரு எண்ணம் இந்த எண்ணமும் அங்கு நடக்கும் சில ஆமானுஸ்யங்களால் தான்.

அந்த அமானுஸ்யங்களை மீறித்தான் அந்த 27ம் நம்பர் வீட்டை அந்த காவலாளி முத்துச்சாமி தன் குரூர எண்ணங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.. அதற்கு அவர் அவருக்குள் சொல்லும் பதில் பாதுகாப்பு என்பது தான்..

ஆனால் நடப்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, கனிமொழிக்கு நடந்த கதையோ வேறு..

(தொடரும்)

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post