எழுத்து என்பதை சமஸ்கிருதம் மற்றும் தமிழில் அட்சரங்கள் என்ற சிறப்பு பற்றி சொல்வர். அட்சரம் என்றால் கண்..
மொழிக்கு கண்ணாக அமைவது எழுத்துக்கள்..
அதே போல மனிதர்கள் வகையில். இரண்டு விடையங்கள் பொது. அறிவு சார்ந்த விடயங்கள் . மற்றொன்று உணர்ச்சி சார்ந்த விடயங்கள்..
அறிவுக்கு - எண்கள்
உணர்ச்சிக்கு - எழுத்துக்கள் என்பர்..
ஆனால் எண்களுக்கு உணர்ச்சிகளை வார்க்கத் தெரியாது
எழுத்துக்கு உணர்ச்சியையும் அறிவையும் வடித்துக் கடத்தும் திறமை உண்டு..
எழுத்தாளர் ஆவதற்கோ . கவிஞர்கள் ஆவதற்கோ. இந்த உணர்ச்சி சார்ந்த எழுத்தறிவு என்பது அவசியம்..
உதாரணமாய். . ஒருவர் வலியை இன்னொருவருக்கு புரியச் செய்வது . எழுத்தின் அதிமுக்கிய காரணம் என்று பலர் கருதுகின்றனர்..
ஆனால் வலியை என்பதில் தான் அவர்கள் தவறு செய்கின்றனர். அனைத்து உணர்ச்சியையும் எழுத்தால் கடத்த முடியும்.
எழுத்து என்பது காலத்திற்கு கடத்தும் செயல். நாம் பேசும் விடயங்கள் ஓசையால் மனங்களில் நிற்கும் என்றாலும் மனங்களை கொண்டவர் காலம் சிறிது.. எழுத்துக்கு காலம் பெரிது..
இவை எல்லாம் எழுத்தின் சிறப்புகள். இதில் அதிசயங்களை செய்ய முடியும். அதற்கு எழுத்தோசை பற்றி தெரிந்தால் போதும்..
உங்களில் பலர் வாசிப்பவர்கள் . வாசிப்பின் போது எழுத்துக்களால் ஆன சீரான ஓசைத் தன்மையை கவனித்திருக்கிறீர்களா.. ஏனோ தமிழறிவு முழுதும் கவிதை பாக்களாக இருக்கிற காரணம் அறிவீர்களா?.
சரியான பதில் தல . ஆனா அது மட்டுமில்ல காலம் கடந்து நிக்கனும் ஒன்னு. இன்னொன்னு பலகோணங்கள்ல இந்த சுருக்கம் யோசிக்க வைக்கும்..
இந்த பலகோணங்கள்ல யோசிக்கிற விசயத்த தமிழ் மொழி தர்க்க நூல்கள் னு ஒரு வரிசையா வைத்திருக்கு..
அதேபோல மேல இன்னொரு கேள்வி வெச்சிருந்தேன். வாசிப்புல சீரான ஓசை இருக்குறத கவனிச்சீங்களினு..
: இந்த ஓசை நம் பேச்சு வாசிப்புங்கிற அனுபவத்துல வர பழக்கம்..
உதாரணமா.
நீடிச்சி இருக்கனும்..
இருக்கனும் நீடிச்சி.
ரெண்டுமே பழகுன வரிதான்..
இதுல நீடிச்சி இருக்கனும்ங்கிற வரிசை சீக்கிரம் பிடிக்கும்.. அப்படியான வரிசைகளும் உண்டு.. அந்த வரிசைகள் தான் இசையிலும் பாடலிலும் பேச்சிலும் எழுத்திலும் . ஒருவரை ஈர்க்கக் கூடியது..
இந்த சரளநடையானது முதன்முதலில் நினைவுகொள்வதற்காகவே கையாளபட்டது.. அதன் வழிதான் செய்யுள்கள் பாடல்கள் எல்லாம்..
ஒருகொடிய மலரதனை ஒருமித்த சுவையோய் . ங்கிற இந்த சரள நடை..
ஒருமித்த சுவையானாய் ஒருகொடிய மலர்போலே. .. ங்கிறது பிறழ்சி நடை
அர்த்தம் ஒன்றுதான் அடக்குதல் தான் வேறு.. இதை புரிந்து பயன்படுத்தினால் எல்லா எழுத்தும் மனதில் நிற்கும்.
எழுத்து என்பது ஒரு இசைக்கு ஒத்திருக்க வேண்டும் என்பது கட்டாய விதி இல்லை என்றாலும். இசைக்கு ஒத்து வருவது சிறப்பாக இருக்கும்.
தமிழில் நாம் தொனி என்று கேள்விபட்டிருப்போம் .. கோபம் அழுகை சிரிப்பு எல்லாம் வசனத்தை கேட்கும் போது . நாம் உணர முடிகிறது . அதே எழுதும் போது குறிக்க வேண்டியிருக்கு..
அவள் தன் நண்பன் தன்னை விட்டுவிட்டு போனதை எண்ணி அழுதாள். என்று குறித்து சொல்கிறோம்..
என்ன அநாதையா விட்டுட்டு போயிட்டியே.. என்கிற வரியில் ஒரு அழகை வருகிறது புரியும்.. இதுவே உணர்வுகளை பகிரும் முறை..
பெரும்பாலும் எழுத முன்வருபவர். இந்த விசியத்தை கவனத்தில் வைத்திருக்க வேண்டும்..
ஆத்தா . நான் பாஸாகிட்டேன்.. னு எழுதுவதில் என்று ஆனந்தமாய் கத்திக்கொண்டு ஓடினான் சரத். என்கிற வரி நீட்சி தேவைப்படுகிறது ..
அதே விசயம்..
ஏடி , பேச்சாயி ஒம்புள்ள பத்தாங்கிளாஸு பாசாகிட்டாண்டி... என்றாள் செல்வி. என்பதில் வரி நீட்சி தேவைப் படுவதில்லை.
இந்த வேற்றுமை தான் எழுத்தாளருக்கும் மற்றவருக்குமான மாறுபாடு..
இந்த சுருக்கம் தான் மொழியின் ஆளுமை எனப்படுகிறது. அதில் இசைக்கோர்வு. எளிய புரிதல் . எதுகை மோனை இயைபு என்பன முக்கிய பங்கு..
இதை கவனியுங்கள்.. இந்த கவனத்தில் நீங்கள் பார்க்கும் பக்கங்கள் விளம்பரங்களில் அவரவர் பயன்படுத்தும் நடைகள் புரியும்..
உதாரணமாய் இரு வரிகள்..
இன்று சமயபுரத்து மாரியம்மன் ஆலயத்தில் சிம்ம வாகனக் கோலத்தில் தேரில் பவனி.. (கேலண்டர்ல பாத்தேன்)
இன்று சமயபுரத்தாள் சிம்மவாகனத்தில் தேர்பவனி. ..
கருத்தில் எதாவது மாற்றம் இருக்கிறதா பாருங்கள்.. ஆனால் வசனம்?. ..
இத்துடன் எழுத்து பற்றி தகவல்கள் முடிந்தது.. இதனை மனதில் வைத்து சிந்திக்க சிந்திக்க புதிய தகவல்கள் தோன்றும்.
Post a Comment