இல்லறவியல் - பிறனில் விழையாமை

சமூகத்தை நாடி வாழும் இல்லறத்தார் சில நற்குணங்களை கொண்டமை வேண்டியவை பற்றி பேராசான் விளக்கம் செய்கிறார்.   இங்கு இல் என்பது செல்வம் என்று பொருள்படும் என்பதை கொண்டு ஆசான் இரண்டையும் சில இடங்களில் ஒரு குறள்பட சொல்லியிருப்பார்..


141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

உரை: உலகில் அறம் என்பதின் உண்மை அர்த்தம் அறிந்தவர்களிடம் பிறரது பொருள் மற்றும் பிறர் மனைவியையும்  எண்ணி ஆசைகொண்டு வாழும் மூடத்தனம் இல்லை. 


142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

உரை: 
பிறரது மனைவியை அடைய விரும்பும் இழிந்தவன். அறவழியில் இல்லாத இழிபிறவிகளின் கடைசியில் கூட இல்லை. 

அறவழி வாழாத இழிந்த மக்கள் தமக்குள் கடைசியில் இருக்கும் இழிவானவரில் கூட பிறரது  மனைவிமேல் காமம் கொள்பவன் இல்லை.. 



143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.

உரை: 
சந்தேகிக்காமல் நம்பி வீட்டில் அனுமதிப்பவன் மனைவியை அடைய எண்ணுபவன் மனம் அறிவு ஆகிய செத்தவன் தான் . 

தன்னை நம்பியவர் வீட்டில் புகுந்து தவறு செய்பவர் மனம் அறிவு முதலியன செத்தவரே அன்றி வேறாருமில்லை .

144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

உரை: 
எத்தனை  பெருமையுடைவன் என்றால் என்ன? பிறன் மனைவி மீது காமம் கொண்ட நொடியில் மொத்தம் போனது. 


எத்தனை புகழுடையவன் ஆனால் என்ன? எல்லாம் கெடும். ஒருவன் தினையளவும் யோசிக்காமல் பிறர் பொருளுக்கு எண்ணுவான் என்றால். 



145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

உரை : 
அடைதல் சுலபம் என்றெண்ணி இன்னொருவன் மனைவியை சேருபவன் எப்போதும் அழியாத அவபெயரை பெறுவான்


எளிதாக அடையலாம் என்று பிறர் பொருளை அடைபவன் எப்போதும் அழியாது நிற்கும் பழியை(பாவம்) பெறுவான். 


146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

உரை: 
இன்னொருவன் மனைவியை அடைவானிடம் பகை பயம்பாவம் பழி ஆகிய நான்கும் நீங்காது . 

பகை . பாவம்.பயம் . பழி என்ற நான்கும் பிறரது பொருள் பறிப்பானிடம் இருந்து நீங்காது. 


147. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

உரை: அறன் செய்து இல்லற வழியில் வாழ தகுதி உள்ளவன் எனவென்றால் பிறரது மனைவியிடம் மோகம் கொள்ளாதவன்

பிறர் செல்வத்தை விரும்பாதவனே இல்லறம் செய்து வாழ தகுதியானவன்


148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

உரை: பிறரது மனைவியை ஆசையாய் பார்க்காத பேராண்மை என்பது சான்றோருக்கு அறம் மட்டுமல்ல ஆகச்சிறந்த ஒழுக்கம். 

பிறர் இல்லம் எட்டி பார்க்காத பேராண்மை என்பது புகழுடையவரக்கு அறம் மட்டுமல்ல ஆகசிறந்த குணம் ..


149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

உரை : நலம் குன்றாதவர் யாரெனக் கேட்டால் கடல்நீர் கொண்ட உலகில் பிறர்க்கு உரிய மனைவியின் தோள் சேராதவர். 


150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று.

உரை : அறம் செய்யாவிடினும் பரவாயில்லை பாவமே செய்தாலும் பரவாயில்லை  இன்னொருவன் மனைவியை மோகிக்காமல் இரு.. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post