இருபுற வெண்பா உத்திகள்

 வணக்கம்..

இருபுற வெண்பாவிற்கான உத்திகள் சில...

நுழைவதற்கு முன் சில வெண்பா விதிகளை நினைவூட்டல் சிறப்பாகும்..

வெண்பா என்பது தமிழ் மரபுநடையில் பெரிதும் மதிக்கதக்க ஒரு வடிவம்...

அசை சீர் தளை என ஆரம்ப கற்றலை தாம் அறிந்திருப்பீர்..

இருபுற வெண்பா என்பதில் சிக்கலே ஈற்றடி முச்சீரை நாற்சீராக மாற்றுவதிலும்.. பின்வரிசையில் தளை தட்டுவதும் தான்..

வெண்பா எதுகை பொருத்து பெயரிடப்படுவது..

நான்கடிக்கும் ஒரே எதுகை.. என்பது ஒரு விகற்பம்
இரண்டடிக்கு ஒரு எதுகை என்பது இரு விகற்பம்.
நான்கும் தனித்தனியான எதுகையற்ற என்பது பலவிகற்பம்..

இதில் முன் வரிசையில் ஒரு விகற்ப வெண்பா எழுதிட .. பின் வரிசையில் அதுவே பல விகற்பமாக மாறுதலால்.. சில உத்திகள்.

1)  ஈற்றுச்சீர்  பிறப்பு என்னும் வாய்பாடில் மட்டுமே முடிய வேண்டும்

2) மோனை பொழிப்பு மோனை இருத்தல் சிறப்பு.. (முதல் மற்றும் மூன்றாம் சீர்..) அதிலும் முதல் மற்றும் மூன்றாம் சீரினில் எதுகை அமைத்தல் பின்வரிசைக்கு ஏதுவாகும்.. ஓசைநயம் தரும்..

3) மாச்சீரினில் புளிமா.. மட்டுமே பயன்படுத்துதல் நலம்.. புளிமாவை மட்டும் பயன்படுத்துதல் சிறப்பு.. பின்வரிசைக்கு தடையின்றி அமையும்..

4) முடிந்தவரை புணர்ச்சி மற்றும் பிரித்தெழுதும் சொற்களை தவிர்த்தல் நன்று..

5) முதல் சீரானது புளிமாவில் உகரத்தில் முடிய வேண்டும்..

களவு புரிக கயலாள் மனதை
உளவு புரியும் உயவு வலியின்
அளவு புரியா அயலான் எனையும்
களவு அதுவும் தயவு.. #பெண்பால் #விரகதாபம்

தயவு அதுவும் களவு எனையும்
அயலான் புரியா  அளவு வலியின்
உயவு புரியும் உளவு மனதை
கயலாள் புரிக களவு.. #ஆண்பால் #விரகதாபம்..
..

2 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post