நான் மீண்டும் ஒரு நானாக...

ஏதோ சொல்ல நினைத்தே?
ஏதும் உணராமல் நின்றேன்.!


எங்கிருந்தோ வந்த மேகம்..
எமக்காய் குழைந்து மழைந்தது போல!


எங்கிருந்தோ வந்த வார்த்தை கடல்.
எனக்குள் சிக்கி திக்கி சிதறிட..

   


சிந்தியவை சிந்தனைகளாய்...
சிதறியவை தெறிபட்ட சிறுகதைகளாய்...


எஞ்சி நின்றவை நெஞ்சில் நிற்க
அஞ்சி அடங்கி வழிவதால் கவிதை...


எப்படியும் அமையலாம் எதிர்காலம்...
பார்க்கலாம் அப்போது நானும் என்னை திரும்பி பார்க்கலாம்...


கடிவாளம் கட்டிய குதிரைதான் ...
கழன்றிடும் கடக்கும் எல்லைதான்..


கிடைக்கும் ஒரு சில நேரம் எனக்கும்
கிடைக்காத ஒரு சிகரம் காலம் பார்க்கும்...


என் கட்டவிழ்ந்த தீரத்தை..
நான் கடந்துவந்த தூரத்தை...


அதற்கு தான் சேர்த்து வைக்கிறேன்...
எதற்கும் இருக்கட்டுமே...
எதிர்காலத்தில் இவையும் தேவைபடும்...

நான் மீண்டும் ஒரு நானாக...

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS