ரொம்ப தயங்கி யோசிச்சி தான் இப்படி ஒரு முயற்சி எடுக்குறேன்... பிழைகளை மன்னித்து விடுங்கள்...
மீண்டும் வந்தார் சுஐாதா....
மெரினா கடற்கரை ... கடல் விட்ட கழிவு.. கரை .. கரையிருந்து கடல் கண்டு களித்திருந்தேன்.. எத்தனையோ எண்ணங்கள் புத்திக்கூட்டில் பட்டாம்பூச்சி சிறகடிபாய் அதிர மண்ணிலிருந்து நான்கடி உயரத்தில் நான் மிதப்பது போன்ற உணர்வில்....
வைரமுத்துவின் தண்ணீர் தேசம்... வாலியின் பாடல் வரிகள்... கடல் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் என என் மூளையின் நியூரான் கற்றைகளின் ஆழபடிமத்தில் ஈரப்பதத்துடன் மேலேழும்ப.. ஆணிவேராய்.. அனாமிகா வின் கதை தோன்றிய தருணம்...
கடல் அலை கரையை வருடும் இடத்தில் சில பாத சுவடுகள் படித்து என் பார்வை நகர்ந்து ஓர் உருவத்தை பிடித்தது... முன்னாளில் ஒரு முறையேனும் பார்க்க முடியாதோ என்று ஏங்கிகிடக்க.. நடுவில் பார்க்கவே முடியாதென்று முடிந்துவிட.. ஆழ்மனதின் ஏக்க துவாரங்களில் எல்லாம் நிறைந்த ஓர் உருவம்... என் மூளை நம்பவில்லை தான்..
மாண்டாரும்மீள்வாரோ மீண்டாலும் தன்னிலை அடைவாரோ என்று பாடியதுதான் ... என்றாலும் என் இதயத்தும் ஆவல் அவற்றை முற்றுமாக வீழ்த்திவிட நம்பினேன்... அவர் சுஜாதா தான்... நம்பிக்கைகள் வீணாவதில்லை...
அவரது எழுத்துகளில் சில தீராத சந்தேகங்கள் எனக்குண்டு ... நண்பர்கள் யாவரும் என் கண்ணில் படாமல் ஓடுவதன் காரணமும் அதே.... இனியென்ன அவரே இருக்கார் கேட்டுவிடலாம்...
அறிமுகபடுத்தி கொண்டு .. அவர்தானா என்று உறுதி செய்து கொண்டேன்...
நிறைய பேசினோம்.. எங்கள் பேச்சு துவங்கியதே அனாமிகாவிலிருந்து தான்... சார் அந்த கதைய ஏன் திடீரென முடிச்சிடீங்க.. எனக்கு அதுவே நீளமா தெரிஞ்சதே.. என்றார் . (அவ்ளோ தான் நான் ஆப்)
சார் உங்க கதைகள்ல மறைமுகமா உங்க சாயல் தெரியணும்னு நெனைச்சதுண்டா? ... (இத நிறையபேட்டிகள்ல கேட்டாச்சி) நிச்சயமானு சொல்லமுடியாது .. இருக்கலாம்...
நான் நீங்க விரும்பிய கேரக்டராத்தான் கணேஷயும் வசந்தயும் உருவாக்குனீங்க நினைக்கிறேன் அது ?
அத.. அவங்க தான் சொல்லனும்..(பதில் விசித்திரம் தான் அதுலயே சொல்லிடாரே அவர்கள் தனினு).
நீங்க கமல் சார் நண்பர்ங்கிறத இப்படி பதில் சொல்லிதான் நிரூபிக்கனுமா சார் என்றேன் .சிரித்தார்.
ப்ரயோகத்துல ஒரு வசியம் அவசியம்.. என்றார்..
கையோட என் சிறுகதைகள ஒரு ஸ்பைரல் பைண்டட் புக்க அவர் கைல குடுத்தேன்... வாங்கிட்டு நீங்களும் எழுதுறீங்களா என்றார் (காரணம் என்னனு எனக்கு தெரியல)
முதல்ல ஆறாவது பக்கம் பாரத்தார்... இப்படியும் ஒரு நாள் சிறுகதையோட க்ளைமாக்ஸ் அது ... என்னால ரொம்பவே பாதிக்க பட்டுருக்கீங்க போல ( அவர காப்பி அடிச்சேன்னு சூசகமா சொல்றார்)...
நிச்சயமா சார்.. என்கிற போது கையெழுத்து போட்டு அந்த சிறுகதை தொகுப்ப குடுத்துட்டு சரி நான் கிளம்புறேன்னாரு....
எப்புடி விட முடியும்.. சார் நானும் உங்களோட வரட்டுமா? .. விடமாட்டேன்ங்கிறீங்க சரி வாங்க...
இருவரும் கிளம்பினோம் அவர் யாரோ ஒரு நண்பர சந்திக்க போறதா சொல்லிட்டிருந்தார் ... இப்போதைக்கு எனக்கு தெரிஞ்சி அந்த நண்பர் ஒரு லாயர்...
(தொடரும்....)
Post a Comment