நடுநிசி கனவுகள் 2 - நான் ஒரு குற்றவாளி

அந்தி மயங்கி அடுத்த சில மணிகடந்து. தந்தியடித்தார் போல் நித்திரை என்ற ஒரு ராக்காதலி என்னை அரவனைத்து . கொண்டிருந்த வேளையில் நடுநிசி நச்சென துவங்கிட...
அறைக்குள் நானுறங்க நடுநிசியும் துவங்க எழுந்துவிட்டேன் என் உடல் விட்டு ... சிறகுகளின்றி பறக்கும் மாயம் செய்கிறேன்... அறைவிட்டு வெளியேறி .. அணைத்தடை உடைத்தெறிந்து வெளிவந்தன்... விளையாட்டாய் துவங்கி விசித்திரமாய் நடந்துகொண்டிருக்கிறது..
மிதக்கும் நேரத்தில் ஓர் பெரும் கதவினை கண்டேன் பரந்த இருள் பிரதேசத்தில் துண்ணளவு இருளற்ற வெளிச்சம் அடைத்த கதவின் சுற்றுபுற நுண்துவாரங்களில் கசிகிறது...
ஒரு பிரம்ம நினைவில் சலனமற்ற நிலையில் கதவின் ஸ்பரிசம் உணர தொடுகிறேன் இம்மெல்லிய தீண்டலில் ஒரு பிரம்மாண்ட கதவு திறக்கபடுகிறது... என்னே விந்தை ...
மகா வெளிச்சம்சில நூறு சுடா சூரியனின் கிரணங்களில் வெண்ணிற பனிமண்டலம் பூசிய ஒரு மலை சரிவை போல மேலேறிகிடக்க அடி எடுத்து வைக்கிறேன் ...
தூரத்து ஓசையாய் சில பெண்களின் ஒருமித்த குரலோசையில் கர்னாடக சங்கீதத்தின் ஆலாபனைகள் கேட்கின்றன .. இவ்வித ரசவாத உணர்வினில் தொடர்ந்து செல்கிறேன் .. அக்குரலோசைகள் நீலாம்பரி ராகத்திலிருந்து பார்கவி ராகத்திற்கு மாறிட முயன்று சுழன்று கொண்டிருக்கின்றன....
முன்னேற முன்னேற தனியொரு பெண் கச்சேரி பாட  பிண்ணனி இசைகளாக மிருதங்கமும்... வயலினும் வீணையும் ஒலி ஊற்றிகொண்டிருக்க... மன்னிக்கவும் அது வீணையல்ல மேண்டலின் பெரும்பாலுமான வீணையொலிகள் இன்று மேண்டலினால் தான் இசைக்க படுகின்றன...
கச்சேரி பெண்குரல் மெல்ல மெல்ல கரைவது போல் குறைய என் முன்னேற்றம் காரணம் ஆம் அவளை கடந்து சென்று கொண்டிருக்கிறேன்..
இப்போதும் ஆலாபனைகள் கேட்கின்றன முன்பைவிட தெளிவாகவே கேட்கிறது... ஆயினும் இன்னும் பார்கவியை தொடவில்லை மீண்டும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றனர் என் எதிரிருக்கும் 20க்கும் குறைவான வயதுள்ள 20 பெண்கள் .. 
பயணம் தொடர தொடர மீண்டும் ஓர் பிரம்மாண்ட கதவு இம்முறை கதவிடுக்குகளில் மணல்சிந்துகின்றன ஒருவேளை பூமிக்கான வாயில்தானோ சற்று முயன்று திறக்க ..
தென் கொரிய காட்டுவாசிகள் போல சில கும்பல் ஆணும் பெண்ணும் கலந்துதான் ஆண்கள் நாகரீகத்தை எட்டிபார்க்கிற நிகழ்வாய் ஆண்மையை மறைக்க ஒரு இலையாடை அணிந்திருந்தனர் பெண்கள் இன்னும் சுதந்திர பட்சிகளாகவே இருந்தனர் சில மணி போன்ற ஆபரணங்களை அணிந்திருந்தனர்...
அவர்களுக்கு கொண்டாட்ட காலம் போல கலிம்பா வகை இசை போன்ற ஒன்றை இசைத்து கொண்டிருந்தனர் அதன் தாளங்கள் ஒழுங்கற்ற முறையிலிருந்தன... தொடர்ந்து செல்கிறேன்..
மீண்டும் ஒரு பிரம்மாண்ட கதவுஅதன் சுற்றுதுவாரங்களில் இருளும் ஒலியும் மாறி மாறி வீசின..  தொட கைநீட்டிய போதே திறந்தது.. இருந்தது ஒருபப் கிளப் டான்ஸ் .. அதன் இசையில் இரச்சல் போதவில்லை போல டீஜே என்றவன் நல்ல பாடலை கடித்து குதறி துப்பினான் எனக்கு வந்த ஆத்திரத்தில் அவன் கழுத்தைகடித்து துப்பியிருக்கலாம்... செய்யவில்லை..
மேலும் முன்னேற  அய்யோடா அவ்வளவு அழகான பெண் எடை போட்டால் குட 48 கிலாதாஜ்மகால் தான்.. என் கண்கள் அவள் கண்களிலிருந்து கீழிறங்கின ... அடடா எழுதிடவா வேணாம் ஸ்கிப் ஆகிறலாம் ஆசையாய் அவளை அணைக்க போய் கொன்றுவிட்டேன் ..
ஏன் என்று தெரியவில்லை கொன்றுவிட்டேன் அய்யோ பாவமிழைத்தேனே ஓடி சென்று கதவு திறக்க எதிரே அதே பெண் உயிருடன் திகென்று எழுந்துவிட்டேன்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post