உடலென்னும் இயந்திரம் - 1- நமது மூளை

இந்த மனித மூளை இருக்கே அது அறிவியல் ரீதியா எவ்வளவு அதிசயம் தெரியுமா?

மனித மூளை மிகவும் இலகுவான சுமார் 80 டிகிரிக்கும் குறைந்த வெப்பத்தில் கரைந்துவிட கூடியது . ஆனால் மூளை நன்றாக வேலை அதாவது கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னாருங்கிற மாதிரியான அதி அவசிய தீவிர யோசனையின் போது நம்ம மூளையின் பவர் எடுத்தா ஒரு வாரம் சென்னை போன்ற சிட்டிக்கு தடையில்லாம சப்ளை செய்யலாம் (தமிழக அரசுக்கு தேவையான ஐடியா!) .  அப்போது நம் மூளையில் உண்டாகும் வெப்பமானது 300 டிகிரிக்கும் மேல ஆனா அந்த வெப்பத்தை அதனை சுற்றியுள்ள பகுதிக்கு கடத்திவிடும் .

நம்ம மூளை ஒரு எஞ்சின் ஆயில் மாதிரியான திரவத்தால பாதுகாக்கபடுது எப்பவாவது ஜுவாலஜி லேப் போயிருந்தா அங்க ஒரு தவளையோ பாம்பையோ கெடாம இருக்க தண்ணிமாதிரி ஒரு அமிலத்துல வச்சிருப்பாங்களே அது மாதிரி . இந்த திரவம் மூணு முக்கியமான வேலை செய்யுது  என்னனா முதல்ல மூளையோட வெப்பத்த கடத்தி அத ஒரே வெப்பநிலையில வைக்கிறது . அதனால் கடத்திவைக்கபட்ட வெப்பம் கொஞ்சங் கொஞ்சமா நம் மூக்கின் சுவாசத்தால் தணிக்கபடுகிறது. வேணும்னா நீங்களே சோதிச்சு பாருங்க தலை வலிக்கும் போது மூக்கால் நன்றாக ஆழமாக மூச்சையிழுத்து விடுங்கள் தலைவலி குறைவதை உணரலாம் . இதனால் தான் ஜலதோஷம் பிடித்தால் தலைவலி வருவதும் கூட; அதாவது அந்த திரவம் தன் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் தன்னிலேயே வைத்திருப்பதால் முளைக்கும் வெப்பம் அதிகரிப்பதால் தலைவலி வருகிறது.. அப்படி அதிக வெப்பம் உண்டாகி தன்னால் சமன்செய்ய முடியாவிட்டால் அந்த வெப்பத்தை உடல் முழுதும் பரவவிடும் இதனால் காய்ச்சல் வரும். ஆகையால் மூளையை கூலாக வைக்க வேண்டியது அவசியம் .. இந்த திரவத்தின் இரண்டாவது வேலை சோபா போல குஷன் செய்வது நீங்கள் தீடீரென திரும்பினாலோ அசைந்தாலோ மூளை செல்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குழம்பாமல் இருக்க கைத்தாங்கலாக பிடிப்பது அப்படியில்லைனா நம்ம எல்லாருக்குமே நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் தான்.

மூணாவது வேலை தன்னை ஒரு ரெப்ளிகேட்டரா பயன்படுத்துறது அதாவது ஒரு பொருள போட்டா அதே மாதிரி நூறு பொருள தர ஜிகினா மாய வேலை ஆம் மூளை ஒரு ஹார்மோனை சுரந்தால் அதை சூழ்நிலைக்கேற்ப பண்மடங்காக்கி நரம்புகளில் பாயசெய்வது . இதனால் தான் போதையில் மிதக்கும் உணர்வினை அடைய முடிகிறது.

இது போன்ற ஆர்மோன்கள் சில லட்ச கணக்கில் உண்டு நமது மூலையில். மேலும் நம் மூளையின் செயல்பாட்டை பாருங்கள் ஆச்சிரியம் . நமது மூளையானது மெல்லிய திசுக்களால் ஆனது மேலும் அம்மெல்லிய திசுக்கள் நியூரான் கட்டமைப்புகளால் பிணைக்கபட்டுள்ளது . இந்த நியூரான் இணைப்புகளின் வழியாகதான் தகவல்கள் பரிமாற்றபடுகின்றன இந்த திசுக்களனைத்தும் ஒரு மொட்டை தலையில் விக் வைத்தது போல படர்ந்துள்ளன . அதனை லிம்ப் என்று கூறுகின்றனர் குழந்தை பிறந்தபோது இந்த லிம்ப் காலியாக அதாவது வழுவழுப்பாக இருக்குமாம் பின்னர் நமது அறிவின் வளர்ச்சி அதாவது அனுபவம் கல்வி கேள்வி ஆகியவையால் பெற்ற தகவல்கள் நமது நினைவுகளென அந்த லிம்பில் விரிசல் கோடுகளைபோல் பதியுமாம் , நாம் மறக்க இந்த கோடு சரியாய் பதியாமல் தேய்வதால் தானாம் நவீன அறிவியலில் அந்த லிம்பின் விரிசல் கோடுகளை கொண்டு மனித நினைவுகளை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர் .

நம் மூளையின் ஒரு திசுபடலத்திலிருந்து நியூரான் வழியாக கடத்தபடும் தகவல்கள் அனைத்தும் மின்னூட்டமாகவே அனுப்பபடுகின்றன அதிலும் அதிவேகமாக அனுப்ப படுகின்றன . ஒரு புதிய பொருளை நிகழ்வை நாம் காணும் வேளையில் நம் ஆர்வம் அதிகரிக்க காரணம் நம் மூளையானது நமது லிம்பில் இதுவரை இல்லாத தகவல்களை தேடும் வேளையில் நம்ம 12வது கேமிஸ்ரியில் சால்ட் அனலைஸ் செய்தோமே அதுபோல அனலைஸ் செய்ய துவங்குவதால் நமக்கு உதாரணங்கள் நன்கு புரிகின்றன . மலையளவு உயரம் என்றபடி ஒரு விநோத பொருளை அறிவதற்கு காரணம் இதுவே. மேலும் அப்புது பொருளின் விவரம் நமக்கு கிடைக்காததால் நமது மூளை டோபமின் , அட்ரினலின் , ட்ராக்னாமலின் , போன்ற ஹார்மோன்களை சுரப்பதால் நமக்கு ஒரு வித சிலிர்ப்பு , பயம், துடிப்பு போன்றன நிகழ்கின்றன.

இப்போது ஓரளவு மூளையின் வடிவத்தை  உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் . இல்லையென்றால் ஒன்றுமில்லை மூளையானது எப்படி இருக்குமென்றால் நீங்கள் பழைய ட்ராண்ஸ்பார்மர் , வெல்டிங் மெஷின், டூவீலர் எஞ்சின் போன்றனவற்றை பிரித்து பாருங்கள் ஓர் அநுமானம்  கிடைக்கும்
. மீண்டும் அடுத்த கட்டுரையில் மூளையின் ஆற்றலை பற்றி அலசலாம் அதுவரையில் (தொடரும்...)

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS