உடலென்னும் இயந்திரம் 1 நமது மூளை - ஆற்றல்

ஆற்றல் அரசே அரசே வாவா ... சமீபத்துல வந்த காலம் என் காதலியோ பாட்டு வரியிது. அது போல ஆற்றலின் அரசனே நம் மூளை தான். கற்காலம் தொடங்கி கணினிக்காலம் வரை நடந்த வாழ்வை வளர்க்கும் செயல்கள் எல்லாமே மூளையின் ஆற்றலில் சிந்தியவையே.

கடல் தந்த பரிசு நம் மூளையும் அதை சூழ்ந்துள்ள நீர்மண்டலமும். நம் உடலை முழுவதுமாக கட்டுபடுத்தும் தலமைசெயலகம் மூளைதானே.

சற்று யோசியுங்கள், கற்பனைகள். கனவுகள், ஏன் கவிதைகள் கூட மூளையின் ஆற்றலின் அகர முதலவைகள் தானே . சரி கொஞ்சம் தெளிவாக பார்ப்போம்.

டெலகினஸிஸ் என்றொரு கலை அதாவது 10 அடி தூரத்திலுள்ள ஒரு  நாற்காலியை எந்தவித  தொடுதலோ தொடர்போ இன்றி நகர்த்துதல் அக்கலையின் அம்சம். வேணும்னா ஏழாம் அறிவு படத்துல நோக்கு வர்மம்னு வரும் எக்ஸ் மேன் படத்துல மியூட்டன்ல ஒருத்தருக்கு ஸ்பெசாலிட்டியா இருக்கும்.

இது முழு கவனத்தையும் அப்பொருள் மீது வைத்து செய்வதாகும் . இது மூளையின் ஆற்றலில்லையா ஏன் சிந்தனைகள் அதை விட முடியுமா?

பின்பு இப்படி வைத்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு மைதானத்திலோ ரயில் நிலையத்திலோ, ஏதாவது கூட்ட நெரிசல் நிறைந்த சாலையில் அப்படியே பாருங்கள் .பின் ஓரமாய் ஒரு இடத்தில் அமர்ந்து யோசியுங்கள் உங்களால் இரண்டு பரிமாணங்களில் சொல்ல முடியும். ஒன்று மொத்த நிகழ்வையும் அதன் அழகு அழகற்ற விதங்களையும் சொல்ல முடியும் அதே வேளையில் , தனித்தனி மனிதரும் என்ன செயதார் என்றும் சொல்லமுடியும்.. அதிலும் குறிப்பாக நீங்கள் அதிகம் கவனம்செலுத்தாத ஒருநபரை பற்றியும் சொல்ல முடியும்.. இந்த ஆற்றல் அனைவருக்குமே உண்டு..

சற்றுசத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ ; இது "என்னமோ ஏதோ "பாடலின் வரிகள்  . இதில் சொல்லபடுவதும் ஒருவித ஆற்றல்தானே.

செக்மென்டேஷன் ; ப்ராக்மெண்டேஷன் , போன்ற செயல்கள் நம் மூளையில் தானாகவே நிகழ்கின்றன , உதாரணமாக நிருபர்களின் சார்ட் ஹேண்ட் விசயம் இந்த செக்மெண்டேஷன் சமாசாரம் அதாவது எதையோ கிறுக்கி விட்டு வந்து அங்கு அவர் பேசியதை இந்த கிறுக்கள்கள் மூலம் நினைவுகொள்ள முடிகிறதே இது செக்மெண்டேஷன்..

ஐம்பது புத்தகங்கள்இருக்க ஒற்றை கவிதை மட்டும் நினைவில் நிற்கிறதே அது ப்ராக்மெண்டேஷன் தேவையின் பாற் நினைவில் கொள்ளுதல்.

குறுகிய கால நினைவுகள் ஒன்று உண்டு  முந்தாநாள் இரவின் நிகழ்வுகள். போல அடுத்த 10 நாட்கள்வரை நினைவிலிருந்தால் அதிகம் . நீண்ட கால நினைவுகள் ஐஸ்வரியா ராய் குழந்தை பிறந்த தினம் போல இன்னும் 3 வருடமாவது நினைவிலிருப்பது.

தனக்கு தெரியாத விசயம் என்பதை பற்றி யோசித்து விவரித்து புரிதல் என்னும் ஆற்றல் ஆக சிறந்தல்லவோ? உலகம் யாவிலும் தேடி கடைசியில் ஒரு போதிமரத்தில் கிடைத்த அறிவின் ஆற்றல் என்னென்று சொல்வது.

கண்ணை கட்டிக்கொண்டு சரியாய் நடக்க நாம் படும் பாடு என்பது அனைவரும் அறிந்ததே அதே வேளையில் நம் மூளை செய்யும் செயல்கள் எத்தனை ?

பழகின பாதையில் பார்வைகள் தேவைபடுவதில்லையே ஒரு ஓட்டுனரிடம் கேளுங்கள் தினப்படி அவர் செல்லும் சாலையில் வேகத்தடைகளை தானாகவே பார்க்காமலேயே கட்டுபடுத்துகிறார். ஆற்றலல்லவா இது?

ஊரை அழிக்கும் பீரங்கி செய்ததும் ஒரு மூளைதான் . உலகை காக்க மருந்துதனை செய்ததும் ஒரு மூளைதான்.

ஆச்சரியமான ஆற்றல் என்னவென்றால் , நல்ல தியானத்தில் நமக்குள்ளிருந்தே நம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறதே அதுதான்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post