கடவுள் என்பது என்ன 5 - கணிதம்

இதுவரை: 
    இதுவரைக்கும் நாம் அறிமுகம் அப்புறம் அகம் பிரிவுல மூளை மனம் உயிர் ஞானம் இதெல்லாம் பார்த்தோம் அத்துடன் அகம் பிரிவு முடிகிறது இனி புறம் பரிவில் முதலாவதாக கணிதம்.

நாம் கடவுளை தானே தேடுகிறோம் கணிதத்திற்கென்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம் அதற்கு தான் இந்த கட்டுரை . என் ஆசிரியர் ஒருவர் இருந்தார் கணித ஆசிரியர் தணிகாசலம் அவரது பெயர் அவர் கணிதத்தில் ஆச்சிரியமான பக்கங்களை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் சமீபத்தில் அவரை சந்தித்த போது அவரது ஆய்வுகளை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

சரி நாம் கட்டுரைக்கு போகலாம்.. கணிதம் எப்படி எதற்காக உருவானது தேவைபடுகிறது ? தெரியுமோ? . முதலில் எண்ணிக்கைகளுக்காகவும் அளவீடுகளுக்காகவும் தான் கணிதம் உருவானது அதாவது ஆதிகால மனிதர்களால் சங்கேதமாக உருவாக்கபட்டது . கணிதத்தின் வளர்சச்சிக்கு காரணமே இந்த இரண்டாவது பயன்பாடுதான் . யோசியுங்கள் ஆதிமனிதன் முதன்முதலில் யானையை எப்படி விவரித்திருப்பான்  பத்து மரங்களை போல 50 புலிகளை போல பெரிதாக என்று தானே. அப்படி தெரியாத ஒன்றை விவரிக்க கணிதம் தேவைபடுகிறது பின்னாளில் அதன் தேவைகள் வளர்ந்து மேட்ரிக்ஸ் , லாப்லஸ் , போன்ற தத்துவங்களாக ஸ்திரபட்டன .

ஆச்சரியம் என்னவென்றால் மனிதன் உண்டாக்கிய கணிதத்தில் மனிததன்மைக்கும் மீறிய தன்மை ஒன்று உறவாடுகிறது. சரி அனைத்து கணக்குகளையும் விடுங்கள். இந்த 0த்தை பாருங்கள் . இதற்கு எந்த ஒரு மதிப்புமில்லை ஆனால் இதை சேர்த்து கொண்டால் அதன் மதிப்பு மடங்குகளாய் அதிகரிக்கிறதே . உதாரணமாக வெறும் 0 மதிப்பில்லை 1 சேரத்தால் 01 அதே மதிப்பை தருகிறது . 10 என்றால் 1ன் பத்து மடங்கு அது அட இப்போது தானே சொன்னோம் 0 மதிப்பில்லை என்று ஆனால் இதை சேர்த்ததால் வெறும 1 பத்தாகிறதே .

இது கடவுளுக்கும் பொருந்தும் , வெறும் கடவுள் மட்டுமே இருந்தார் மதிப்பில்லை . பிரபஞ்சத்தை படைத்தார் பிரபஞ்சம் மதிப்பை பெற்றது . பிரபஞ்சத்துடன் கடவுளை ஒப்பிட்டால் மடங்குகளாக பெருகுகிறார்.

சரி இப்படி பார்க்கலாம் இந்த 01 இதை பைனரி என்று சொல்வர் கணினி குறியீடுகள் நிச்சயமாக இந்த இரண்டு எண்கள் தான் . ஏன் என்று தெரியுமா? 10, 100, 1010, என மடங்குகளாக பெருகும் எண்கள் 0,1 மட்டும் தான் மேலும் இதனால் குறைந்த இடத்திலேயே அதிக ஆற்றலை செயல்படுத்த முடியும் ஒருவேளை 0,1,க்கு பதிலாக 13,7 என்று வைத்து பாருங்களேன் ஒவ்வொரு 13க்கும் இரண்டு இடம் தேவைபடுகிறது மேலும் 13,7 பெருக்கினாலோ வகுத்தாலோ மீண்டும் அதே விடை வருவதில்லை . 0,1 பெருக்கினாலும் வகுத்தாலும் இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் விடை இதனை ஆக்ஸியம் எனலாம் . அதாவது  எத்தனை பெரியதாக கணக்கிட்டாலும் அதனை எத்தனை முறை எப்படி மாற்றி னாலும் ஆரம்பித்த இடத்திற்க்கே வருவது ஆக்ஸியம் என்பர்.

கடவுளும் கூட ஒரு ஆக்ஸியம் தான் நாம் எப்படிதான் தேடி விவரிக்க முயன்றாலும் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்துவிடுகிறோம். மேலும் விஸ்வரூபமாகவும் துரும்பாகவும் இருப்பதை புராணங்கள் சொல்கின்றனவே இது கூட 0,1 போலதான் குறைந்த இடத்திலும் செயல்படும் ஆற்றல்.

இன்னும் கூட இந்த 0ன் ஆற்றலை நாம் முழுதாக அறியமுடிவதில்லை . இந்த 0 எல்லை எதுவரை என்றால் அதை முடிவிலா நீண்ட தொடராக இருபுறமும் சொல்கிறது அறிவியல் . the effective limit of zero is greater than any other number . because its limit extends to the infinity of the both sides .. என்கிற கணிதவியல் தத்துவத்தை பார்க்கும் போது நிச்சயமாய் 0 தான் கடவுள் என்று சொல்லிடலாம்.

வழக்கமாக பள்ளிக்கூட கணக்கில் ஏதாவது ஒரு எண்ணை 1 ஆல் பெருக்கவோ வகுக்கவோ சொன்னால் ஏதோ அற்ப கேள்வி போன்ற தொனியில் சொல்வர் அதே ஏதாவது ஒரு எண் தான் என்று . அதுவே ஏதாவது ஒரு எண்ணை 0 ஆல் பெருக்கசொல்லங்களேன் 0 என்பர் இதை ஆக்ஸியம் என்றே வைத்து கொள்ளுங்கள் . வகுக்க சொல்லிபாருங்கள் உங்களை கேவலமாக ஒரு பார்வை பார்ப்பர் இன்னும் அட்வான்ஸாக போய் சிலர் எத்தன வருசமா கோமால இருந்தீங்கனு கூட கேட்கலாம். ஆனால் யாரும் விடை சொல்ல போவதில்லை . மேற்கத்திய பழமொழி ஒன்று உண்டு zero Always being hero coz it always being Zero என்று இதனை கேலியாகவும் சொல்வதுண்டு , பாராட்டாகவும் சொல்வதுண்டு . ஆம் 0 எப்போதும் 0மாகவே உள்ளது .

ஆனால் அத்தனை எண்ணும் 0யத்தால் வகுபடும் . அவை 1 ஆல் வகுபட்ட பலனை தரும்.

இதுவும் கூட கடவுளின் குணம்தானே ,

அழுது புலம்பிட வேண்டாம், ஆகமங்கள் ஓதிட வேண்டாம்!
மருண்டு மகிழ்ந்திட போதும், மந்திரங்கள் சொல்லிட வேணடாம்!
இருந்து இவனடி போற்றிட, இவையனைத்தும் தத்தம் பலன்தரும்!

என்கிற பாடலை கண்டால்...

(தேடல்கள் தொடரும்......)

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post