அணுவின் அண்டம் - பிரபஞ்சத்திற்கு முன்

முதலில் பிரபஞ்சம் தான் உருவானது அதன் பின் அதன் இயக்கத்தால் காலமும் தூரமும் பிறந்தது. பின் ஒன்றிலிருந்து ஒன்றாக அண்டங்களும் அதற்குள்  வளிமண்டலங்களும் அதனுள் ராட்சத மற்றும் சிறிய நட்சத்திரங்களும் அதிலிருந்து கோள்களும் விண்கற்களும் உருவாகின. அனைத்தும் ஒரு சீரான / சீரற்ற இடைவெளியில் உருவானது.

இது தான் அன்றிலிருந்து ஆன்மீகம் மறைமுகமாகவும் தற்போதைய நவீன விஞ்ஞானம் வெளிபடையாகவும் நிச்சயமில்லாமலும் ஒப்புக்கொள்ளும் பிரபஞ்ச வரலாறு.

ஒன்றை பாருங்கள் பலநூறு ஆண்டுகளாக ஆன்மீகம் இதை சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறது. விஞ்ஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் ஆகாது சந்தேகத்தினால் ஆராய்ந்து பின் ஏற்றுகொள்ளுமே தவிர நம்பாது ஆகையால் தான் காலத்திற்கேற்ப வெவ்வேறு சித்தாந்தங்களை சொல்லி பார்க்கிறது இந்த விஞ்ஞான காற்றலைகள் .

கடந்த நூற்றாண்டில் அல்லது அதற்கும் முந்தைய சில நூற்றாண்டுகளின் விஞ்ஞான சித்தாந்தங்கள் அதே விஞ்ஞானத்தால் அறுத்து வீழ்த்தபடுகிறது. இந்த விஞ்ஞான ராஜ்ஜியத்தை குறிப்பிடும் அளவிற்கு ஆண்ட சித்தாந்தங்கள் இன்றளவும் இல்லை.

ஆன்மீகத்தில் ஒருவித முடிவு மனோபாவத்தை அடைந்துவிடுகிறது இந்த தேடல் . அதற்காக இங்கு மாற்றமே நிகழவில்லை என்றில்லை காலங்காலமாய் மாற்றமலைபாம்பின் வாயில் சிக்கியும் இது பிழைத்துள்ளது.

சொல்லபோனால் கடந்த நூற்றாண்டில் கூட இந்த சித்தாந்தம் விஞ்ஞானத்தில் இல்லை. ஆனால் 6 நூற்றாண்டுகளாக இந்த தேடல் காட்டுதீபோல் எரிந்துகொண்டே இருந்திருக்கிறது.

அதுவிருக்கட்டும் அடுத்த வேளை பசிக்கு அலையும் இந்த மானுடம் நாமிருக்கும் பால்வெளி அண்டத்தை அறிந்ததே பெரிய ஆச்சிரியம் ஆனால் பல நூற்றாண்டுளாக பிரபஞ்சத்தை அறிந்து அதன் வரலாற்றை அறிய முற்படுவது எத்தனை பெரிய அதிசயம் தெரியுமோ?

கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் ஏற்றுகொண்ட சித்தாந்தம்  பெருவெடிப்பு கொள்கை என்பதாகும் . அதனடிப்படையில் பார்த்தால் மேலே சொன்ன வரலாற்று சித்தாந்தம் சுத்த பொய்.

ஆம் பெருவெடிப்பு கொள்கை சொல்வது ஓர் ஒருமித்த கணத்தை அந்த கணத்தில் ஏற்பட்ட பெரும் அணு வெடிப்பினால் தான் இந்த பிரபஞ்சம் உருவானது அதன் அக்னி துகள்களாக தான் நட்சத்திரங்களும் இன்னபிற கோள்களும் கனன்று கொண்டிருக்கின்றன. அதற்கு முன் பிரபஞ்சம் முழுதும் வெறும் வெளியாக ஏதுமின்றி இருந்தது என்பதுதான்..

கவனியுங்கள் தூரமில்லையேல் காலமில்லை என்றொரு சித்தாந்தம் ஐன்ஸ்டினின் விதிபடி அதே நூற்றாண்டில் ஏற்றுகொள்ளபட்டது. பின்னர் அடு்த்த கட்டுரையிலேயே ஐன்ஸ்டினே அது தவறு என்றார் காரணம் நடப்பவனின் காலமும் ஓடுபவனின் காலமும் ஒரே தூரத்தை பொருத்து மாறுகின்றதால் இந்த விதியில் வேகத்தையும் சேர்த்துக்கொண்டார் .

ஆக மேலே நாம் சொன்னபடி பிரபஞசம் பிறக்கும் முன் எதுவும் இல்லை பெரு வெடிப்பு கொள்கையின் பின் பாதியும் இதே . இப்போது யோசியுங்கள் தூரமில்லை அதனால் காலமில்லை காலமே இல்லாத போது எப்படி ஒருமித்த கணம் தோன்றும்?

ஆக பெரு வெடிப்பு கொள்கை பிழையென்றானது. விஞ்ஞானமட்டுமல்ல ஆன்மீகத்திலும் இதுபோன்ற தேடலாட்கள் இருந்தனர். அவர்களும் இவர்களை போலவே ஆளுக்கொரு சித்தாந்தமாக கநை்திருந்தனர் பின் தோன்றிய ஆன்மீக குருக்கள் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் தேடலை கிளப்பினர் அதன் விவாதத்தில் பிழைகள் களைந்து  அனைவரும் ஏற்றுகொண்ட ஒரு முடிவினை வெளியிட்டனர் . அதன்படி பிரபஞ்சத்தை படைப்பாகவும் கடவுளை படைத்தவனாகவும் சொல்லினர் பின் தோன்றிய தேடலின் முடிவுகள் ஒரு வித குழப்பமற்ற தன்மையை ஆன்மீகத்திற்கு வழங்கியது.

கடவுள்களை தவிர்த்து படைப்பிற்கு ஒரு மூல பொருள் தேவை என்றனர் அந்த பொருளே கடவுளையும் படைத்தாய் கொண்டனர் காரணம் காலமில்லாத போது எப்படி ஒருவன் ஜனித்து வாழந்திருக்க முடியும் ? ஆக அந்த மூல பொருளை பரமம் என்றனர் பின்னாளில் சமஸ்கிருதத்தில் பிரமம் எனப்பட்டது அம்மொழியில் பிரம்மசூத்திரம் என்ற ஒரு நூலும் உண்டு.

ஆக இருவரும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளை அறியதான் எண்ணினர். பிரம்மசூத்திரம் அதனை ஓரளவு நெருங்குகிறது. அந்நூல் பரமத்தை அது என்றுதான் சொல்கிறது அங்கே அவனோ அவளோ அல்ல . மேலும் அந்நூல் ஒருசில குணங்களை சொல்கிறது

அது , குறையில்லாதது , இழிவுஇல்லாதது , அழியாதது, மாறக்கூடியது, உயர்வானது,வடிவமில்லாதது  நிரந்தரமற்றது முதலியன

இப்போது சொல்கிறேன் கேளுங்கள், பிரம்மசூத்திரம் பரமம் என சொல்வது ஓர் அணுவை அந்த அணு மிகவும் ஸ்திரமானது, பிரியக்கூடியது முந்தைய கட்டுரையில் சொன்னது போல அந்த அணுவின் இனப்பெருக்கத்தினால் பிரிந்த அணுக்களும் அதன் துகள்களும் ஆற்றலும் வெளிப்பட்டதால் தான் இப்பிரபஞ்சம் தோன்றியது  .

முதலில் பேரண்டம் உருவாகி சிதறின துகள்கள் வெற்றுவெளியாகவும் அணுக்கள் பெருவெளியில் புலப்படாத துகள்களாகவும் பரவின . அந்த அணுக்கள் பல்வேறு ஆற்றல்களை தன்வசம் ஈர்த்துகொண்டன. அந்த அணுக்களின் இயக்கத்தாலும் ஆற்றலின் வெளிப்பாட்டாலும் ஒருவித  மின்காந்த புலம் ஏற்பட்டு ஈர்ப்பு விசையினாலும் எதிர்விசையாலும் ஒன்றை ஒன்று சுழன்றன . அதன் தொய்வினாலும் தேய்வனாலும்  உராய்வினாலும் ஏற்பட்ட இழப்பினால்  வலுவிலப்பு நிகழ்ந்து ஓர் இயல்பற்ற ஒருநிலைபட்ட பொழுதினில் மற்றொரு வெடிப்பை நிகழ்த்துகின்றன . மீண்டும் இதே நிகழ்வுகள் தொடர்கின்றன .

ஆகவே  மொத்த பிரபஞ்சமும் ஓர் அணுவின் துகளே இப்போது அது போன்ற அணுக்கள் பல கோடிகணக்கில் விண்வெளியின் இருளடர்ந்த பகுதிகளில் சாந்தமாக இயங்கி கொண்டிருக்கின்றன ஒளிபடராத பகுதிகளில் இன்னொரு வெடிப்பு நடக்கலாம் என்பதும் அநுமானிக்கபடுகிறது .

சொல்லபோனால் அந்த அணுக்களின் தன்மை தான் ஒளியை ஊடுருவாமல் தடுக்கின்றன ஆகவே இருளாக இருக்கின்றன...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post