தேவை இந்த வார்த்தை இன்னும் என்னை விடவில்லை, அதனாலே இன்னும் சிலஒப்பீடுகள் , பொருத்தங்கள் கருதி இன்னொரு பகுதி எழுதுகிறேன்.
ஒருமுறை ஒரு பெரிய மனிதர் தன் செல்வங்களை எல்லாம் விட்டுவிட்டு சாமியாராகிறேன் என்று கிளம்பினார் . நாளடைவில் அவர் ஞானம் வளர்ந்ததோ இல்லையோ ? முன்பைவிட அதிக செல்வம் சேர்த்திருந்தார் , காரணம் ஆசை .
ஆனால் தேவை அப்படியல்ல கற்கால மனிதம் , நல்ல உணவை அறிந்துகொள்ள எத்தனை விஷ பொருட்களை உண்டிருக்கும் தெரியுமா? தம் உயிரயே இழந்தாலும் பரவாயில்லை நல்ல உணவை கண்டிறிய வேண்டும் அதை மனிதம் உண்டு வாழவேண்டும் என்கிற தேவையால் தானே ?
சரி அதே கற்கால மனிதன் இன்று நளிந்துவரும் விவசாயத்தை எப்படி அறிந்தான் உணவின் தேவையால் தானே?
இன்றைய குடும்ப கட்டுமானம் உருவானதெப்படி >? அவரவர் தனி மனிதனாக வாழ்ந்திருக்கலாமே? எதற்கு குடும்பம் ? காரணம் ஓர் அரவணைப்பும் அதனூடான பாசமும் தேவைபட்டது தானே?
சரி கடவுள் பற்றிய தேடல் தானே ? முன் பகுதியின் இறுதியில் குறிப்பிட்ட பாடல் நினைவுபடுத்தி பாருங்களேன் கடவுள் சும்மா இருந்துருக்கலாமே ? அவர் மட்டும் தனியாக , இருந்திருக்கலாமே? எதற்கு இத்தனை பெரிய அண்டம் அதனுள் உயிர்கள் வளர்ந்து தேய்ந்து அழியவேண்டிய சக்கரம் என எதற்கு இதெல்லாம் ? தேவை என்பதால் தானே ?
கடவுளில்லை என்றொரு பார்வைக்கு வந்தால் அனைத்தும் இடர்படுகிறதே ? என்னவழி தேவை தான் இதற்கெல்லாம் காரணம் என்றபடி சொல்லமுடிந்தால் தேவை என்பதும் கடவுள் தானே?
கண்ணறியா கைபடா உணர்வன்றோ
கண்ணிமைக்கும் நேரமும் ஓயா இயக்கமன்றோ
கடவுளென புகழ்ந்தாரும் அல்லென புரிந்தாரும்
கண்டறியும் காலமெதோ?
வேறென்ன சொல்வது தேவை என்பதே கடவுள் என்றால் ? என்றாலும் இங்கும் சில குறையுள்ளதே !
(தேடல்கள் தொடரும்.....)
Post a Comment