பிரபஞ்ச நதியில் ஒரு பாறையாம் பூமிமேல் ஒரு நாற்காலியில் அமர்ந்து பிரபஞ்சத்தை பார்த்தபடி.. பாரதியின் கவிதைகளையும். ஓஷோவின் தத்துவங்களையும். ஐன்ஸ்டீனின் தியரிகளையும். வெனின் கடிதங்களையும். படித்து சிலாகித்திருக்கிறேன் நான். அட அற்பமே கண்ணெதிரே பிரபஞ்சமே விரிந்துகிடக்கிறதே அதில்...
அதில் அறிவியலும். ஆன்மீகமும். இயற்பியலும் வேதியியலும். உயிரியலும். எண்ணற்ற புதிய தகவல்களும் ஞானங்களும் இறைந்துகிடக்க போயும் போயும் கவிதைகளை படித்துகொண்டிருக்கிறாயா? என்கிறது மூளை..
ஆம் மனித குணமாயிற்றே குரங்கினமாயிற்றே. தாவாதோ! ஆனால் பல மனிதர்கள் இப்படித்தான் கண்முன் பேரறிவின் சாரமே இருந்தும் அதை அறியாமல் காதலில் உலவுகின்றனர்.. எண்ணத்தில் அயர சற்றே என்னை முறுக்கிட நாற்காலியிலிருந்து தவறிவிழுந்தேன் விழுந்ததும் விழுந்தேன் பூமியிலேயே விழுந்திருக்க கூடாதா? இப்படியா பிரபஞ்ச சூன்யத்தில் விழுவது. இனி என்ன செய்வேன் ? எப்படி பூமி சேர்வேன். காத்திருப்பதைவிட என்ன வழி? ஒரு பெரும் நதியில் எல்லைகளற்ற நதியில். நான் நானாகவே தேங்கிவிட்டேன் . என் பூமி தன் கடமையை செவ்வனே செய்து என்னைவிட்டு தூரத்திற்கும் தூரம் சென்றுவிட்டது..
தேங்கிகிடப்பதை விட முயன்று சாவதென முடிவு செய்து. அசைகிறேன் அலைகளில் விழுந்த மழைதுளியென அதன் ஆற்றலில் சிக்கிட்டேன். என்ன விதியிது பிரம்மனுக்கு ஆங்கிலபடங்களை யார் போட்டுகாட்டியது?.. விதியென்ன விதி கர்ம கருமங்கள் . தன்னை தானே ஏமாற்றும் காரணங்கள் . சுதந்திரத்தின் முழு பரிமாணத்தை உணர்கிறேன் . பயமில்லை. அழவில்லை. ஆனந்தமா தெரியவில்லை. உணரவேண்டியதெல்லாம் ஞானம் மட்டுமே. இந்த சூன்யவெளியில் வேறேன்ன உண்டு உணர்வெல்லாம் வாழ்வதற்கு . ஒரு டீக்கடை கூடயில்லா காட்டில் பழங்களில் மவுசென்னவோ அதே போல் உணரவேண்டியவைகளுக்கு தேவையற்றபோது அறியவேண்டியது மட்டுமே ..
அதோ அண்டமே தெரிகிறது என் கண்களுக்குள் தென்படும் தூரம் வரை சுதந்திரமான இயக்ககளேதெரிகிறது. மக்களாட்சியோ மன்னராட்சியோ இல்லையே. நான் நேசிக்கும் மழையில்லையே என்று வருந்தலாம் தான். போகுமிடத்திற்கெல்லாம் மழை வருமா? எனக்கு இங்கு மழைதான் நீரில்லையே தவிர ஔியில் செய்த மழை எத்தனை குளிர் தெரியுமா?
காற்றில்லை என்று சொல்லவேண்டாம். காலம் மாறிவிட்டது. அத்தனை விண்துகள்களும் காற்றை உமிழ்கின்றன.. நம் அறிவியல் வளரவேண்டியது அதிகம்.. உண்மையில் அறிவியல் எனக்கு தேவையில்லை ஆராயும் மனநிலையில் இல்லை கடந்தாக வேண்டும் என் பூமியில் நுழைந்தாக வேண்டும். அட மறந்துட்டேன் உயிரியல் பற்றி சொல்லாமல் செல்லவதா? பூமிக்கு எத்தனையோ லட்சம் ஆண்டுக்கு முன் வந்த விண்வெளி பார்சல் இப்போது மீண்டும் உருவாகிகொண்டிருக்கிறது. புதிய உயிரின வகைகளுடன் . அதன் அடிப்படை செல்கள் அல்ல. செக்ட்ரான்கள். செல்லின் கால்பகுதி எனகொள்ளலாம். மரபணுதொடர்புக்கு பதில் மரபணுபெட்டகங்கள் உள்ளன. சற்று வித்யாசமான அடிபடையிது ஒவ்வொரு செக்ட்ரான்க்கும் ஒரு பெட்டகம் என உள்ளது அதில் மாறுபட்ட குணங்களும் செயல்பாடுகளும் உள்ளன . இயறக்கையின் வேற்றுமை படைப்பில் இதுவெர்சன் 2 . எப்படியும் இந்த பார்சல் வந்து சேர 2லிருந்து 3லட்சம் ஆண்டுகளாகலாம் என நாசா சொல்லலாம் பட் அது 1லட்ச ஆண்டுகளுக்குள் வந்துவிடும். சரி நான் பூமிக்கு கிளம்புறேன் . வேண்டாம் இந்த சுதந்திரம் அங்கு இல்லை . காத்திருக்கலாம் பூமி மீண்டும் என்னிடம் வரும் அதுவரை காத்திருக்கலாம். என்ன சூரிய மைய கொள்கையில் ஒன்று மட்டும் மாற்றம் சூரியன் நிற்பதில்லை அதுவும் நகர்கிறது ஒரு நேர்கோட்டில் . சமீபத்தில் நாசா அதை ஹீலியோ சென்ட்ரிக் கொள்கையாக அறிவித்தது .
சரி நான் ஏன் பிறந்தேன் இந்த நதியில் விழத்தானா? இக்கறை என்கறை திரும்புவேனா? இல்லை அக்கறை ஒதுங்குவேனா ? எதுவரை நீந்துவேன்? என் வாழ்வின் சாரமெது? காரணமெது? பெருங்கடல் கருங்கடல் இந்த அண்டம் இதில் இன்னும் எத்தனை ரகசியம் உண்டோ? வாழ்க்கை அர்த்தம் என்ன? கீதைசொல்வதை போல் இறைவனை அடைவதா? அங்கிருந்துதானே வந்தோம் அங்கேயே சேர ஏன் இத்தனை நீண்ட பயணம்? எல்லாம் மாயைதான் என்றால் உண்மையும் மாயைதானா? மாயை என்றால் அதில் லயிப்பதா விலகுவதா? என்னதான் வாழ்க்கை வழுக்கை தலையில் முடி தேடுவது போல .. தேவையற்றதா ? என்னமோ மர்மம் போ...! என்றேனும் புரியும் என்கிற நம்பிக்கை எதுவரை தாங்கும்? எப்போதாவது மாறிடும் என்று நினைத்தபடி இதுவே பழகிடும் போல....
Post a Comment