எழுதபடாத கவிைதைகள் - தமிழின்பம்

அணுவுடை அண்டமெல்லாம்
அன்னை தமிழ் மொழியே..
அன்பின் இசை கொண்டு ஒலிக்க வேண்டும்...

அருகுள்ள கிரகமெல்லாம்
அதன் குரலில் என்தமிழ்
அழகு கவிதைகள் பாட வேண்டும்..

கால் பதியும் இடமெல்லாம்
காப்பியங்கள் முளைத்திட
காலமெலாம் காகிதமாகிட வேண்டும்...

தரணி எல்லாம்
தாரைதாரையாய்
தமிழ் கவிதைகள் பரவிட வேண்டும்...

நித்திரைகள் மறந்து
நினைவுகள் கடந்து
நிலவை ரசித்திட வேண்டும்...

உலகம் உயந்திட
உண்மை உயர்ந்திட
உடனே மலர்தல் வேண்டும்...

கனவை நினைவாக்க
காலம் என் கையில்
காகிதம் போல் புழங்கிட வேண்டும்...

வெனிலும் வாடையும்
தமிழ் மொழி பொழுந்திட
வெளிற் மேகத்துள் தமிழேற்ற வேண்டும்...

மைதீட்டும் பெண்ணினைபோல்
மைஎம்மெய் பிண்ணுதல் போல்
மையெழுதிய என் கவிதைகள் இருந்திட வேண்டும்

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS