எழுதபடாத கவிதைகள் - கண்ணா..

நாளெல்லாம் நற்குழலூதி
நற்பாடல்கள் நீ இசைத்திடு போதும்..

பசுவெல்லாம் பாற்சொறியும்
பண்னிசை செய்திடு போதும்...

நீ உடன்வர
நாம் நடக்கும்
நந்தவனம் நெடுவனமாகிட போதும்...

பரணி தாங்கும் கரங்களால்
பரணில் நெய் திருடிடு போதும்...

மாதவா உன்னை கண்டிட
மாதவமின்றி என்னை காத்திடு போதும்

குறையேதும் இல்லாது எனை
குழைத்திடும் இம்சைகள் செய்திடு போதும்..

வேதமாய் நீ இருந்து எனக்கதை
கீதையாய் சொல்லிடு போதும்..

அருகமர்ந்து எந்தன் அறிவையும்
அகத்தையும் நன்முறையில் நடத்திடு போதும்..

சாயுங்காலம் என்னுடன் விளையாடி
சாயும்தோளாய் என்னுடன் இருந்திடு போதும்...

வாரணம் கொண்ட என் இன்பமதை
நீ தோரணம் செய்திடு போதும்...

சரணம் செய்த எனை
பூரணம் செய்திடு போதும்..

வீணாய் போகும் என் காலமதை
வீணை போல மீட்டிடு போதும்...

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS