A.R.Rahman 25 years

ரஹ்மான் ஒரு சகாப்த நாயகன். தான்... இளையராஜா மாதிரி ஒரு இமயமே நிக்குற இடத்துல ராஜா சார் ஸ்டைல் இல்லாம அதே தமிழர் மனசுல நிக்கிறது சாதாரணமில்ல தெரியுமா?. முதலில் கேள்வியே 25 ஆண்டு எப்படி என்பதுதான். 1990 ல முதல் தமிழ் படமான ரோஜா வந்தது அப்ப 2017 ல 27 வருசமாச்சே. சரி எப்படியோ கணக்குவெச்சிக்கங்க இப்பவாவது கொண்டாடனும்னு தோணிச்சே..


புன்னகை மன்னன் படத்துக்கான ட்யூன் டிஸ்கஷன் நடந்தது ஒரு ஸ்டார் ஓட்டல்ல. இளையராஜா கங்கை அமரன் மணிரத்னம்னு எல்லாரும் இருக்க ஒரு சின்ன வயசு பையன் முடியெல்லாம் சடைபிண்ணுற அளவுக்கு வச்சிக்கிட்டு வரார். இளையராஜா டிஜிட்டல்ல ட்யூன் பண்ண மணிரத்னமின் வேண்டுகோள் தீம்மியூசிக்கு வாசிச்சு காட்ட வந்த பையன் தான் ரஹ்மான். அப்ப மணிரத்னமை பார்த்து மரியாதையுடன் செய்த புன்னகை . இன்றும் மாறாத புன்னகை மன்னனை . கொண்டாட வேண்டாமா?..
சில பல நாட்களுக்கு பின் மணிரத்னம். எழுத்தாளர் சுஜாதாவுடன் ரோஜா பட கதைபத்தி பேசி கொண்டிருக்க . எதர்ச்சியாய் மியூசிக் யாருனு சுஜாதா கேட்க . ஒரு சின்ன பையன் தான் நல்லா வாசிக்கிறான். சுஜாதா சொன்னது வாசிச்சா மட்டும் போதுமா?.உடனே மணிரத்னம் அழைத்துகொண்டு பாண்டிபஜாரின் குறுகலான தெருகளில் சென்று ஒரு ஜீலேபி கடைக்கான இடத்தில் ஒரு பையனை காட்டி இவர் தான் நம்ம படத்துக்கு மியூக்னு சொன்னார். ரஹ்மானிடம் மணிரத்னம் ஒரு ட்யூன் கேட்க. வந்தது சின்ன சின்ன ஆசைக்கான ட்யூன். பின் சுஜாதா சென்னது. "புகழுக்கு காத்திருங்கள்" . காத்திருந்தார் ரஹ்மான்..
ஆரம்ப கால கஷ்டங்களை பொருத்து கொண்டதால். அவையே தூக்கி வந்தது வாய்ப்பினை. அப்படி வந்தவர் தான் பரத்பாலா. வந்தே மாதரம் ஆல்பம்னு வந்தார். அந்த ஆல்பம் அடிச்ச ஹிட்டுக்கு அளவுலாம் தெரியாது. இன்றும் சுதந்திர தின குடியரசு தின கொண்டாட்டங்களில் அப்பாடலில்லாமல் இல்லை..





ரஹ்மான்னு சொன்னதும் இவரும் சேர்ந்துதான் ஞாபகம் வருவார். யாருனு யோசிச்சி வைங்க.. அதுக்குள்ள ஒரு சிங்கிள் ட்ராக். சொல்லிடறேன்..
2012 நம்பர் 14 குழந்தைகள் தினத்திற்காக ரஹ்மான் இசையமைத்த சிங்கிள் பாடல் "எக் ராக்ஹென் எக் ஜாரியா " என்கிற பெயரில் வெளிவந்தது அந்த பாடலை எழுதியது பாரத ரத்னா அப்துல்கலாம்..
2007 ல் முக்தி குழுமத்தின் சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ரஹ்மான் நிகழ்த்திய லைவ் கான்சர்ட் தான் அவரது முதல் லைவ். மும்பையில் நடந்த லைவ் சோவின் பெயர் ."ஜிந்தகி சே ப்யார் கரோ."
2007 ல் பரத்பாலாவுடன்  சேர்ந்து "ப்ரே பார் மீ ப்ரதர் " என்கிற சிங்கிள் ஆல்பமாக வந்தது.. இந்தியாவின் முதல் சிங்கிள் ஆல்பம் இதே..
அதே வருடத்தில் ரகீப் உடன் சேர்ந்த ரஹ்மான் ஓன் லவ் என்கிற ஆல்பத்தில் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடா இந்தி பெங்காலி என 6 மொழிகளில் ஒரே பாடலை வெளியிட்டார்..
2012 ல் பஞ்சதன் ஹாலிவுட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ.ல் பதிவு
செய்த ஆஸ்கர் சங்கமம் என்கிற சிங்கிள் மூலம் ரஹ்மான் தயாரிப்பாளராக ஆனார்..
மேலும் சூப்பர் ஹெவி. ராக் த தபலா. குன்னக்குடி வைத்தியநாதனுடன் கலர்ஸ். அந்தி மாலை. வந்தே மாதரம். நியாஸ் சுப்ரம் . கன்னக்ஷன் . கோக் ஸ்டுடியோ .போன்ற ஆல்பங்களையும் வெளியிட்டு வெற்றி கண்டார்..
இப்பா சொல்லுங்க கூடவே ஞாபகம் வரும் நபர் யார்.?  யெஸ் வைரமுத்து.. ஆனால் முக்கியமாய் வாலிசார் ஐயும் சொல்லபட வேண்டும்.  வைரமுத்து கூட்டணியில் . என் சுவாச காற்றே. ரிதம். கடல். ராவணன். ரோஜா . பம்பாய். இன்னும் பல படங்களின் ஆல்பமே காலகாலத்தும் நிற்கும் இலக்கிய ரசனைக்கும் இசை ரசனைக்கும். நறுமுகையே பாடல்மாதிரி எவர்கிரீன் கலக்ஷன் தான் .
அதே போல. சக்கர இனிக்கிற சக்கர. நியூ. அதிரடிகாரன். நியூயார்க் நகரம்.ரோமியோ ஆட்டம் போட்டால். முஸ்தபா. முக்காலா. போன்ற ஸ்பெசல் பாடல்களை தந்ததில் வாலிசார் தனியிடம் ரஹ்மான் கேரியரில்.
வாலிசார் ரஹ்மான் என்றவுடன் சொல்ல நினைப்பது.  கோக் ஸ்டுடியோவின் நான் ஏன்பிறந்தேன். என்னிலே மகா ஔியோ . என்கிற பாடல்கள்..
சிங்கர் செலக்ஷன்ல ரஹ்மான் காட்டிய இன்வால்மண்ட் தான் இன்றுவரை அவரை சிகரத்தில் நிற்க செய்கிறது.  மனோ  எஸ்பிபி. சித்ரா சுஜாதா. சொர்ணலதா. சுக்வந்தர் சிங் முதல் இன்று சித் ஸ்ரீராம் வரை . பெரும் பட்டாளமே இருக்கிறது.






அதற்கெல்லாம் சிகரமென. இளம் இசை திறமையாளர்களை வளர்க்க. நப்ஸ் எனும் இயக்கமும். ஜாம்மின் என்கிற யூட்டியூப் சேனலும்.  ரஹ்மானால் செயல்படுத்த பட்டு வருகிறது..
ஆஸ்கர் முதல் அத்தனை விருதுகள் பெற்றும் இன்றும் அந்த புன்னகை மன்னன் இளமையோடே இருப்பது மெர்சல் தான்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post