சென்சாருக்கும் உண்டோ சென்ஸ் ஆறும்

We are adults Mr. மரார் என்கிற உன்னைபோல் ஒருவன் வசனம் போல். நாமும் அடல்ட்ஸ் தானே. அதிலென்ன சந்தேகம் என்போர் தொடர்க. மற்றோர் அடுத்த பதிவிற்கு தாவுங்கள்..
முதலில் சினிமா என்பது மக்களுடைய நேரடி தொடர்பிலிருப்பது. சென்சார்களின் பிரதான வாக்குறுதிகள் சில உண்டு. ஆபாச காட்சிகள் கூடாது. வார்த்தைகளும் கூடாது. வேண்டுமாயின் அந்த இடத்தில் பீப் போட்டுக்கொள்ளலாம்.
அவதூறுகள் கூடாது. அரசாங்கத்தை எதிர்க்க கூடாது. வன்முறைக் காட்சிகள் கூடாது என  மொத்தம் 30 கட்டளைகள். சில காட்சிகளை வெட்டிவிட்டால் கதைக்கு வன்முறை தேவையென்றால் A அதிலும் குறைத்துக்கொண்டால் U/A கதையே வராட்டியும் பரவாயில்லைனு அவங்க சொன்ன சீன் எல்லாம் வெட்டிட்டா U. வெறும் கரும்பு சக்கையை பார்க்கத்தான் ரசிகனா.
அன்றுமுதல் இன்றுவரை சினிமாதான் பாமரனின் பள்ளிக்கூடம். பாடல் வரிகள் தான் சங்க இலக்கியம். ஆக யாரோ பத்துபேர் வந்து படத்திற்கும் ரசிகனுக்கும் இடையில் படத்தை முடிவு செய்வது எந்தவித நியாயம். நம் ரசனையை அவர்கள் தீர்மானிப்பதா?.
பீப் போட்டுக்கொண்டால் டைலாக் தொடரலாம். பீப் என்பதே இப்போதெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்புக என்கிற மாதிரி நமக்கு தேவையானதை போட்டுகொள்க என்கிற கேப் போல..
ஆரண்ய காண்டம்  ஒரு முழுக்க முழுக்க லோக்கல் ரவுடிகளின் படம்.  அதில் வார்த்தைகளும் சரி காட்சிகளும் சரி வன்முறையாகவே இருக்கும். எப்படியும் A தான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? 67 சீன்களை கட் செய்தால் A என்றனர். பின்னர் ட்ரிப்பூனலில் 9 கட்டுடன் படம் வெளியானது.
விஸ்வரூபம் படத்தில் வரும் அந்த வேர் ஹவுஸ் சண்டை காட்சியை வெட்டசொன்னது சென்சார். படத்தில் விஸ்வரூபமே அந்த காட்சிதான் அதை வெட்டிவிட்டால்? பின்னர் மத்திய அரசு தலையிட்டு சட்ட திருத்தமே கொண்டுவந்து மாற்றபட்டது.




இப்போது தரமணி க்கு A சான்றிதழ். A சான்றிதழ் பாதி ஊர்களில் திரையிடவே மாட்டார்கள். சொல்லபோனால் படத்தில் வசனங்கள் மட்டுமே . அதுவும் நாகரீக ஆபாசத்தை கொணர்கிறது. உதாரணமாக.
நீச்சல் குளம் ஒன்றும் குளியலறை அல்ல. தனியே குளிப்பதற்கு.
கிட்டதட்ட கவிதை மாதிரி இருக்குல்ல.. ஆங்கிலத்தில். Erica johng . Silvia போன்ற பெண் கவிஞர்களின் கவிதைகளை படித்திருந்தால். நமது சென்சார் போர்டை வதம் செய்யும் அளவிற்கும் வந்துருப்பீர்கள்.
விட்டா " விசும்பின் ஆற்றல் வளியழல் அன்ன " ங்கிற வரிகளுக்கு கூட சென்சார் வெப்பாங்க போலது...
- இப்படிக்கு - பவிதரன் கலைச்செல்வன் ...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post