திருக்கோயில் வலப்பா - கொடிமரம்

தாளில் சதுரமாய் நான்முகன் சாயலாய்
தாளின்மேல் பல்கோணப் பாற்கடலோன் சின்னமாய்
தாளின் தலையெனவே வட்டமாய் லிங்கமாம்
தாளில் பணிந்தால் தலையும் --அருளுமே
தாள்மேல் தலைமேல் உறைசக்தி போற்றியோர்
தாளதுவும் சேரும் மறுமையிற் செர்க்கமே
தாளது கூறும் நெறியறிவீர் மாந்தரே
தாள்மேல் அரிமேல் அரண்மேலுள் - சக்தி
அவள்தாள் பணிந்தே தரிசிக்க வானம்
அவளருளால் தாழ்ந்து வசப்படுதல் காணும்
அவளடியுள் ளீசன் அருள்கிற வாறே
அவனடியுள் மாலும் பரனும்  -அருள்வர்
அருள்வர் அவர்தம் துணைவியர் தாமும்
அருள்வர் அவர்போல் அமரர் அனைவர்
அருள்வர் அவர்போல் கணங்களும் நாளும்
அருளுள் கொடிமரத்தைக் காண்.

#கலிவெண்பா.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post