மெய்வழி இன்பம் உதறியபின் மெய்ஞானமோ?.
மெய்தனை மறைத்து இயல்பறுத்து துறவறமோ?
ஐதனை தேடியே ஆனவை விடுவதோ?
ஐவிரல் விடுத்தே எஞ்சியது நிறையோ?
மதமோ தர்மமோ நியாயமோ நலமோ?
வதமே அதர்மமே அஞ்ஞானமே இழிவே..
தையல் விலக்கின் தேவன் வருவனோ?
தேகம் ஒடுக்கின் ஞானம் விழையுமோ?
இயல்பினை விடுத்தே இன்பம் விழைகுதோ?.
இல்லறம் விலக்கின் இறைவன் அருள்வனோ.?
இயக்கம் தடைபடுமெனின் இறைவன் ஏற்பனோ?
இவற்றுள் ஏதுசரி இருப்பின் உரைப்பீரே ?..
படைத்தோன் தன்திறங் கொண்டு படைத்தான்
படைப்பொருள் யாவும் பெருகும் வித்தையை.
தடையிட்டு நீருமவனை சேருதல் எங்கனம்.?
மடையிட்டு தடுத்தீர் சந்ததியினை ஞானியரே!..
#திருக்குறள்_கவிதை...
#குறள்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய் பெறுவ எவன்...
#46 #இல்வாழ்கை..
Post a Comment