வாட்டும் துயரினை - இறைவா
வாரித் தந்தாயோ
கேட்டுப் பெற்றதெல்லாம் - இறைவா
கேளாமல் கொல்வாயோ
கருணை கடலென்பார் - இறைவா
கதிரவன் விழிங்கியதோ
அருளை தருவாயென்பார் - இறைவா
அருளும் இத்தகயதோ
ஆசை கொண்டாயெனில் - இறைவா
பூமி வந்திருக்கலாமன்றோ - இறைவா
பூமிக்கு வழிதெரியலையோ
பூவை கொன்றபழிக்கு - இறைவா
பாவம் எத்தனையறிவாயோ
ஆவி துடிக்குதய்யா - இறைவா
ஆசைப் பிள்ளையய்யா..
ஆசைக் கொன்றதய்யா - இறைவா
மூர்ச்சை ஆனாயோ.
மூர்க்கம் தந்திட்டு - இறைவா
விளையாட்டு என்றிடுவாயோ
பள்ளிக் குழந்தையடா - இறைவா
பாவம் செய்திட்டாயடா..
சின்னஞ் சிறியரெல்லாம் - இறைவா
போட்டி எனக்கொண்டழித்தாயோ.
மழலைக்கு மரணமிட்டாய் - இறைவா
செய்கையில் இறந்திட்டாய்..
Post a Comment