என்றன் வாயயர முத்தமிடுவேன் நாளும்
நின்றன் நாணம் வெகுண்டோட செய்கவே
ஆலம் விழுங்குவேன் நீயும் நன்மொழி
காலம் சென்றுவிடின் யானும் அக்கனம்..
மாயம் புரிவேன் மதனும் பயிலும்படி
காயம் நீயும் தருவாய் என்றால்.
ஆயம் கடந்து ஐந்தாறு கலைகள்
பாயமிட்டு கற்பிப்பேன் பைந்தமிழ் பாசில..
ஆசில் பலவேசம் அணிவேன் யானும்
மாசில் பலநேசக் காட்டி அன்பொடு
பூசில் மலருன்னை அணைப்பேன் என்றன்
வாசில் வாழ்சுவாசம் எனக்காப்பேன் நின்னை..
மய்யமோ ஆன்மீகமோ இல்லையடி ஆசை
தையலே தவழ்ந்திடும் பேறொன்று மட்டுமே
மையமே என் சூழலழித்த புயலே
ஐயமே அழகே அறிவே நீீயே...
நதியில் விழுந்த இலைபோலே நாளும்
விதியில் வதனம் மெலியுமடி அதுனுள்.
அதிவிரைவாய் அகம் நுழைவாய் ஆசைக்கு
மதியவேளை விருந்தனினை படைப்பாய் பேரியே...
Post a Comment