No title

வெம்பி யழுதிடும் பிள்ளை - கண்டு
தேம்பி குழையுது உள்ளம்
வம்பில் விடிந்தது வானம் - தோட்டா
அம்பினில் தைத்தது நேசம்
வாழ்வில் பெருந்துன்பம் தந்தாரே
உலகன்பைக் கொன்றாரே
மனமே யிங்குப் பிணமே.

முல்லை மலரனைப் பிள்ளை - தன்னை
முள்ளில் மிதிதனை கண்டு
கல்லின் கடினனை யள்ளம் - கொண்டார்
துள்ளித் துளைத்தனை கண்டு
புவியில் யினியேனும் வாழ்கில்லை
பெருந்துன்பம் காண்கில்லை
அரணே வேண்டும் மரணே.

அலையுங் கடற்கரை யோரம் - மழலை
தவழ்ந்திடு மழகினை கண்டு
கண்டு ரசித்தென துள்ளம் - பின்னே
விண்டு வெடித்த னதுள்ளம்
வையம் பிளந்திங்கு கொள்ளாதே
மனிதரை கொல்லாதே
உலகம் எங்கும் கலகம்..

எண்ணெய் விற்பனைக்கு முதலாய் - இங்கே
இத்துனை மழலையர் பிணமே
கண்ணை பிடிங்கினர் போலும் - வையம்
எத்திசை யறியாமல் ஓடும்
கொள்ளைப் பிரியத்தை கொன்றாரே மழலையைத் தின்றாரே
அழிவும் இம்முன் ஒழியும்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post