வில்லிசை - வள்ளிகதை

வந்துவிட்டோம் என்று சொல்லையா (சொல்லிடுவோமே)
வந்துவிட்டோம் என்று சொல்லையா
வில்லினில் பாட
( ராகங்களோட ) வந்திருப்போர் நெஞ்சம் கூட..

குத்தாட்டம் போட்டவங்க குந்தியிங்க கேட்டிடுங்க ( ஆமா கேட்டிடுங்க)
முத்தாட்டம் பாடிடுவோம் முன்னோர்கத பாடிடுவோம்.
(முன்னோர்கத பாடிடுவோம்).

அஞ்சாறு ஏழுகட்ட எட்டிநாங்க பாடிடுவோம்
தஞ்சாவூர் கோயிலப்போல் காலமெல்லாம் கொண்டுநிப்போம்
(காலமெல்லாம் கொண்டுநிப்போம்)

காங்கேயன் கந்தனவன் காதல்கத பாடப்போறோம்
(ஆமா காதல்கத பாடப்போறோம்)
காடாளும் வள்ளிக்கத துள்ளிநாம பாடப்போறோம் (துள்ளிகிட்டு ஆடப்போறோம்)

வசன நடை :

முன்பொரு காலத்திலே மும்மூர்த்தி ஆட்சியிலே...

என்போடு நின்றநதி (பாடலசை)போலயிரு கன்னியர்கள்

வன்மேவு தவமிருந்து கந்தன் கரம்பற்றிடவே
(கந்தன் கரம்பற்றிடவே)
முன்னவள் வானையாக இந்திரனும் பெற்றெடுக்க..
துன்னேதும் இல்லாமே முருகனின் கரம்பிடிக்க

பின்னே வந்தாள் நம்ம வள்ளி (2)
மலையோர குறத்து வஞ்சி (வள்ளி வஞ்சி)

கல்யாணங் கட்டிக்கத்தான் காத்திருந்தா பார்த்திருந்தா (காத்திருந்தா பார்த்திருந்தா)
கண்ணால சேதிசொல்லும் கந்தனத்தான் பார்த்திருந்தா (கந்தனத்தான் பார்த்திருந்தா)
வந்தானே வீரன் வேலந்தான் ( பேராசையோடு பெருங்காதலோடு)
தந்தானே காதல் மனந்தான் (பேதையுமிவள் பேசாதுசெல)

வசன நடை:
புரியலையே வள்ளிக்கும் புன்னகை்கும் கள்ளிக்கும்..

தீட்டானான் திட்டமொன்றை (வேலவன் தன்திட்டமொன்றை)
கூப்பிட்டான் வேழனையே (வினைதீர்க்கும் நாயகனை)
செய்திட்டான் திட்டபடி (வள்ளியிப்போ இட்டம்படி)
மாலையிட்டான் மணந்திட்டான் காதலொடு அணைத்திட்டான்

ஏற்காத குறவர்கள் கூட்டங்கூடி தாக்கவர (கூட்டங்கடி தாக்கவர)
வேல்காரன் வித்தையிலே வீழ்ந்தனரே மொத்தமுமே (வித்தையிலே வீழ்ந்தனரே)
அங்கேயே கேயில் கொண்டான் (அருளைத் தான் அள்ளி தந்தான்) 2

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post