எழுதபடாத கவிதைகள் - காத்திருக்க கற்றேன்

காத்திருக்க கற்றேன் காதலைப் பயின்றதால்
பார்த்திருக்கு காரணம் பாவியுன் அழகென்றால்
யார்மறுப்பார் மறுப்பின் யாதவர் ரசனை
போர்நிமித்தம் போய்வரு வேன்னென் சத்தியம்

காத்திரு காவலாய் காத்தும் இருக்கும்
காத்திரு ஆவலாய் காதல் இனிக்கும்
காத்திரு ஆசையாய் காலம் பிறக்கும்
காத்திரு ஆர்வமாய் காண்பது நிலைக்கும்.

மாலை ஒருவேளை விரகம் வாட்டினால்
மாலை இடவேறு ஒருவன் கிட்டினால்
மாது நீயும் எதிர்பார்க்காமல் மாறிடு
மாலைகள் எனக்கு மரணத்திலும் விழும்..


தேசங் காக்க அரணாய் நிற்கிறேன்
நேசங் காக்க வேண்டாம் மணந்துகொள்
பாசம் எஞ்சிடின் பிள்ளைக்கென் பேரிட்டுக்கொள
நாசம் கொண்டபோயின் என்பெயராவது வாழட்டும்

ஊரார் கேட்டால்சொல் மாவீரன்தன் பெயரிதுயென
ஊடுவார் கேட்டால்சொல் மாய்ந்தவன் பெயரிதுயென
ஊட்டிடும் வேளையிற் நின்பிள்ளை கேட்டிடசொல்
ஊர்காத்தான் உன்பெயரான் எனவேசொல் உய்யுமென் ஆன்மம்.

போரில் விழுந்திடல் பேரோ புகழோ
பாரில் இதுவோர் அடிமைக் கடமை
ராணுவமோ தீவிரமோ மாறுவது இல்லை
ஆணவமோ கர்வமோ தீருவதே இல்லை.

எனக்கோர் நன்மையும் உண்டிச்சாவில் கர்வமே
உனைச்சூழ் உற்றார் தனையும் காத்திடவே
எனைவிட்டேன் எனும் பெயர்மொழி அஃதே

ஆம் காத்திருக்க கற்றேன் காதலைப் பயின்றதால்
நினை பிரிந்து பிறிதொரு காதலடைந்தேன்
நானே நீயும் அவ்விதம் மாறிடு
நற்கணவன் பெற்று பிள்ளையும் உற்றுவாழ்
நான் தேசக் காதலிக்காக வாடுகிறேன்.

ஆம் காத்திருக்கு கற்றேன் காதலைப் பயின்றதால்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post