பாசம் அறுந்ததென்ன - நேயம்
நைந்துதான் போனதென்ன
பாரினில் அழிவுமுண்டோ - இதுபோல்
பேரழி வேதுமுண்டோ
தேசம் துடித்திடவே - வருகும
காலத்தை கொன்றதென்ன
போரினி வேண்டுவதோ - இனிமேல்
போவது ஏதுமுண்டோ
சிறியர்கள் பிணத்தை கண்டு - என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
மென்மேனி பூக்களன்றோ - துடிக்கையில்
என்னுயிர் நின்றதடி
ஊர்கண்டு வாயடைத்து - நின்றிட
உள்ளம் பொங்குதடி
நோய்கொண்டு போகவில்லை - பணமாம்
பேய்கொண்டு போனதடி.
காலம் நினைத்திருந்தால் - காட்சியை
மாற்றிட செய்திருக்கும்
காலன் நினைத்துவிட்டான் - உலகை
காரிருள் ஆக்கிவிட்டான்
பேசிய பிள்ளை யின்று - போரதன்
வேதனைத் தீயிலென்று பார்த்திட பதறுதடி - உயிர்கண்
நீர்வழி சென்றதடி..
Post a Comment