வீடு தனைசேர விளைந்தோம் - தாமும்
வீடு பேறைதரக் குழைந்தோம்
நாடு மிதுயென விருந்தோம் - நின்னை
நாடு திலையென கொன்றீர்
கொள்ளை யடித்தது போதும் - கொஞ்சும்
பிள்ளையை கொன்றதும் போதும்
உள்ளம் பதைத்தது போதும் - யாமும்
உயிரினை வைத்தது போதும்
மண்ணின் வளத்தினை அள்ள - நீங்கள்
மனிதம் அழித்தது போதும்
பேருக்கு தானங்கள் என்றும் - நீங்கள்
ஊரில் நடித்தது போதும்
அண்டிப் பிழைப்பிது வென்று - எம்மை
அண்ட மனுப்பிய தெய்வம்
கொண்ட கருணை போற்றி - நாங்கள்
போய்வரோம் போய்வரவோம் போதும்
கொன்று குவித்த தனாலே - நீங்கள்
கொண்ட பயனதை கொள்வீர்
வந்துவிடும் ஒருநாளும் - அன்று
வருந்திட ஏதிங்கு லாபம்.
மாந்தர்க் கொன்றை யானும் - சொல்வேன்
வேந்தர் பிடிக்கெல்லாம் ஆடும்
மதியாளர் எனவுனை பாடும் - புவி
விதியென இதைக்கூறும் கேவலமே.
Post a Comment