சிரியா சிந்து

பணமொய்த்த பேரவா  - வையம்
பணயமெனக் கொய்ததே

பிணமொய்த்த போரினை - நன்றாய்
பிணக்கின்றி செய்ததே.

மரணத்தின் நகரமாய் - சிரியா
மரணிக்க செய்ததே.
மரணத்து சேதியை - சிறியர்
கிரணிக்க செய்ததே.

பனியொத்த போர்வைக்குள் - வெடித்து
அனிச்சத்தை கொன்றதே.

மணியொத்த புன்னகை - மறித்து
பிணிபெற்று போனதே.

பொழிகின்ற மேகமும் - இங்கே
பொய்யென்று போனதே.

மெய்யான அன்பும் - இங்கே
தைய்யாமல் போனதே

கேட்பாரும் இல்லை - தட்டிக்
கேட்பாரும் இல்லையே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post