சிரயா சிந்து - வியநிலை

பிஞ்சு குழந்தையை கொன்று - அக்
குருதியில் வாவி செய்து வைத்தாரே
நெஞ்சு பதறுதடி கண் - பார்த்து
மிஞ்சி அழுதிடவே செய்த பழியோரே
துஞ்ச முடிகிற தோநீ  - ரும்மை
தஞ்சம் புகுத்திட செய்த பலியிதே

கச்சம் கொண்டிடவே - நீரு
மச்சம் தொலைத்தே செய்த பாவமிதே
துச்சம் பார்த்தீரோ - பசிக்
கெச்சம் தின்றீரா பார் இகழுமே
வெக்கம் இழந்தீரோ - இலை
துக்கப் பட்டீரோ தீயர் வழியோரே

பாவம் பார்க்கலை - யினி
பாரில் மனித மிலை யெனவோ
ஏவம் இதுவென - சொல்லி
ஊரில்  சேரப் பொய் யுரைப்பீரோ

யாவும் போனபின் - புவி
ஏகாந்தம் உணரவே சேவை புரிவீரோ
தவழும் பிஞ்சினை - புசித்த
தவறான மிருகங்களே இனியும் வாழ்வீரோ..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post