கூகை. - கவிபுக்

உள்ளொன்று குடியமர்த்தி
உலகொன்றாய் திரிவாய்..

சூழல் கண்டுகொள்ளா குருடாய்.
சூழிருள் தனிமையில் சுதந்திரம் காண்பாய்.

பகலில் ரகசியம் நீ இரவில் அதிசயம் நீ
இயல்பின் திரிபுநீ வேற்றுமை உருபு நீ.

பயனேதும் தாராய் பயன்மட்டும் கொள்வாய்
பரிவோ பிரிவோ உணராய் உணர்த்தாய்.

தனிமையில் வெம்புவாய் மனம் பிதுங்கியே
உரப்புவாய் அலறுவாய் மருகுவாய் மறப்பாய்.

மெல்ல மெல்ல நீகாணா சூழலை
கொல்லக் கொல்ல இன்புறுவாய்

ஏகாந்தம் ஏற்பாய் அழிவினை தின்பாய்.
மாவளி தன்னில் தனித்து இனிப்பாய்

ஆளில்லா தீவினில் குடியுருவாய் வாழ்வாய்.
மகரந்தம் இல்லா மனமில்லா மலர் நீ..

துறவியும் நீயும் சிலவற்றில் ஒன்று
அசுரனும் நீயும் இணையினில் ஒன்று

பிணங்களின் சதையள்ளி கொண்டாடுவாய் பண்பாடுவாய்
பிணங்களின் கண்களை காணாய் குற்றவாளி..

#கூகை - ஆந்தை , கோட்டான் , பிதுங்குதல் , குரங்கு முகம் கொண்ட வெளிர் மஞ்சள் பறவை.. குரங்கு முகங்கொண்ட மலர்..




0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS