மரணத்தின் இன்பம்..

இறைவ வழியை யானுமே எய்தினேன்...
இறையாய் மண்ணில் நன்னுடல் வீழ்த்தினேன்..
கறையில் வாழ்வை கரைத்தேன் கடந்தேன்.
முறையில் பேதம் கடந்தே இறந்தேன்..

மறையை மறந்து மடமை ஔிந்து
இறையை மறந்து நிறைவை அடந்து
துறையை மறந்து துயரம் கடந்து
அறையை திறந்து அகிலம் புகுந்தேன்..

அலங்கள் போயின அமிலம் போயின
மலங்கள் போயின மந்தம் போயின
கலங்கம் போயின கவலை போயின
கலக்கும் போனபின் கபிலம் மலர்ந்ததே.

வெளியேற்றினன் வெளிக்கேகினன் ஔியாகினன் ஒலியறுத்தனன்.
களிப்பெய்தனன் உவப்பெய்தனன் கனியுள்ளம் நீங்கினன்.
ஔிப்பொத்த உடலிழந்து ஔியானன் விடுதலையே.

விலகியதே யாவும் விடையறு வாதம்.
துலங்கியதே ஞானம் துயரறு ஞாதம்
விலங்கினம் விட்டுவந்த விந்தையான் வெற்றியே.
கலங்கிய சுற்றம் கணிக்காத இன்பமே..

அண்டமிருந்து வந்தபொருள் ஆதிசேர் காலமிதே.
பிண்டமடை பட்டபொருள் பிதுங்கி வெளியேறியதே
தண்டமென ஓர்பிறவி தண்டத்தது படைத்ததே
விண்ணிப்புகழ் மற்றிங்கே விழைந்தாலும் நிலையாதே.

அகமென்பார் புறமென்பார் அறமென்பார் புறம்பென்பார்
அகவைகள் தன்னில் ஆயிரம் நினைவிருப்பார்.
நகக்கணுவில் உயிர்வைப்பார் நருக்கியே உரப்புருவார்.
அகக்கணக்கில் அமைந்துளதே அழிவின் ரகசியமே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post