212 - குட்டிகதை

வெண்கலத்து வெண்ணிற விண்கலம் இறங்கியது.
வந்துவிட்டேன் ..  நான்தான் விணகலப் பயணி
212...212... என்று விண்கலம்

அது சொல்லும்போதே தொலைதூரம் சென்றேன்..

தூபங்களின் திவ்யமனம். தீபங்களின் ஔிவடிகால்..

மார்டன் வாத்தியங்களின்..கர்நாடக சங்கீதம்..
தூரத்தில் சிலவழிபாடுகள்... பலியாடுகளின் செல்லக்கனைப்பு...

சற்றுநடக்க ஒருஜோடின் காதல்முறிவு வாதங்கள்
யுகங்களானாலும் மாறுவதாயில்லை போலும்..

வெள்ளி பாத்திரத்தில் நன்னீர் போல
தெளிந்த குளத்தில் துள்ளும் மீனினங்கள்.

ஆங்காங்கே மயில்கள் அங்கங்கே மலர்கள்..
நடக்க நடக்க... மயூரம் நிறைந்த வனச்சோலைகள். .

தூரத்தே
மெல்லின மெல்லிடை
வல்லின மாரப்புடை
இடையின தொடயுடை
தொன்ம காலக் கலாச்சார பெண்டிர்..

தொலைதூரத்தில் 212...212...212 அலறல்...

நெடிந்துயர்ந்த மலைதனில் மருவிவழியும் அருவி..
சிற்றோடை அதில் ஓடம்...

நானும் வரவா என்றாளொருவள்.
வந்தால் தப்பில்லையே என்றேன்.

கண்மை கலைந்தால் மீன்களெத் தெரியும்
செம்மை கலைந்தால் இதனெப் படும்
எம்மை உரைப்பேன் வேண்டாம்..
உம்மையாவது விட்டு வைக்கட்டும் அவளழகு..

ஓடம் நகர்ந்தது ஓய்வறியா ஓடையில்
கரைவரும் வரைபேசினோம் பழகினோம்
அன்னோம் இன்னோம் எல்லாம் சொன்னோம்
பண்ணோம் பகர்ந்தோம் பலவென் றறிந்தோம்..

212.....212....  என்றது இரைஞ்சிட..

அடடா மறந்தேன்  .. அடுத்த கிரகத்தில் இறங்கனும்...

அதனால் என்ன நெடுநாள் ஆசை பூமியைகாண..

பரவாயில்லை திரும்பியாவது என்ன?.

டூரோவுக்கும் ஆன்டரமீடாவுக்கும் ஆட்கள் அதிகமுளர்..

(212... தவறான இடம் இங்கு சென்றால் திரும்ப முடியாது என்பது விண்கலத்தின் சுருக்கு அறிக்கை)...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post