வணக்கம் 
ஒரு வரலாற்றை தேடி அறிவது அத்தனை சாதாரணமல்ல என்றறிந்த தருணங்கள் இவை.. உண்மையில் தருணங்கள் என்பதைவிட நாட்கள் என்பது சாலசிறந்தது.. 
முன்பே நான் முன்னரையில் சொல்லியிருந்தேன் ... நாம் பார்க்கும் அல்லது நம்பும் விசயம் எதுவும் நிச்சயமான உண்மையல்ல . உண்மையாகும் சாத்தியங்களில் அதிகம் கொண்டவை.. அதிலும் வரலாறுகளில் கற்பனை இல்லாத உண்மையை கண்டறிவது நிச்சயம் தவமிருந்து வரம் பெறுவது போலதான்.. 
ஆலகால கண்டன் அல்லது ஆலகாலம் உண்டோன் என்று சிவனுக்கு சிறப்பு குறிப்பு பெயருண்டு இது அனைவரும் அறிந்ததே...  கடவுளாக ஏற்றபின் யாவும் நிச்சயமான உண்மையே.. ஆனால் சரியாக இன்றைய இலக்கியங்கள் சொல்லும் கதைபடி பார்த்தால் வாசுகி விஷமுண்டோன் என்றுதானே சொல்லவேண்டும். அது என்ன வாசுகி ஆலகாலம் என்கிற விஷத்தினை வெளியிட்டது அதை சிவன் உண்டார் என்று.. அப்பா பாம்பு விசமும் ஆலகாலமும் தனித்தனியானதா? எப்படி  தாமாக ஆலகாலம் என்று பெயரிட்டு கொள்ளலாம்?. 
தர்க்கவியலாக அந்த சொல்லை எடுத்து ஆய்ந்தால் அடேங்கப்பா எனும்படியான விசயங்களும். எப்படி ஏமாற்றி அல்லது திரித்து தந்துளனர் என்று புலப்படும்.. 
ஒரு சொல்லின் மீது சந்தேகம் வந்தால் அனைவரும் என்ன செய்வோம். அகராதியை பார்ப்போம் அல்லவா.. அப்படி தான் நானும். முதலில் ஆலகாலம் என்பதை இரு சொல்லாக பிரித்தேன்.
ஆலம் + காலம் - இப்படி பிரித்து பார்க்கையில்.. புராண கதைகளின் நூல் தொடர்பு சிக்கியதாக நம்புகிறேன்.. 
சரி ஆலம் என்றால் என்ன? அனைவருக்கும் இரண்டு பொருள் தெரியும் ஒன்று விசம் மற்றது மரம். 
விசம் என்கிற கதை அனைவரும் அறிந்ததே மரம் என்கிற கதை உங்களுக்கு தெரிகிறதா? ஆதிகுரு என்று சொல்லப்படும் தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் பல ஆண்டுகளாக மௌனதவம் இருந்தார் என்பது புராணம்.
விசம் என்கிற கதை அனைவரும் அறிந்ததே மரம் என்கிற கதை உங்களுக்கு தெரிகிறதா? ஆதிகுரு என்று சொல்லப்படும் தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் பல ஆண்டுகளாக மௌனதவம் இருந்தார் என்பது புராணம்.
சரி ஆலம் என்பது அவ்வளவு தானா?.  இல்லை அகராதி அப்படி முடிக்கவில்லை.. 
ஆலம் என்பது. - நீர் , கடல், மழை, மரம், ஈயம், அகலம் , கலப்பை , உலகம் , ஆகாயம், மலர். 
இப்போது முந்தைய நீலகண்டம் என்னும் கட்டுரையினை நினைவு செய்து கொள்ளுங்கள். 
இனி பொருத்தி பார்ப்போம்... 
காலம் - என்பது நாள் கிழமை திதி பகல் இரவு வருடம் என நீள்வது.
இவை அனைத்தும் கண்டறிந்தவர் சிவனே என்கிறது சிவபுராணம்.. இன்றும் பல்வேறு சோதிடங்களில் பஞ்சாங்கங்களில்.  தலையாயது வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் சிதம்பர நாடி சோதிடம் என்பது அறிவியல் உலகே ஒப்புக்கொண்ட விசயம்.. 
சிவனின் குன்றுபோன்ற சடைமுடியில் முடியபட்டிருக்கும் பிறை சந்திரனை யோசியுங்கள்..  எதற்கு அது அங்கே வந்தது? ஏன் சிவாலயங்களில் பெளர்ணமி பிரசித்தம்?. ஏன் சூரியன் இல்லை. சந்திரனுக்கே சூரியன்தான் ஔிதருகிறது .. ஆரியர்கள் என்னும் பசுபதி வழிபாடு உடையோர் இதற்கு ஒரு மகா மட்டமான கதை வைத்திருந்தனர்.. அதனை வந்தாரை வாழவைக்கும் தமிழ் என்று அதே கதையை ஏற்று உண்மையென வாதிடுபவர்கள் உண்டு.. 
ஒரு முறை பஞ்சாங்கத்தை நினைவில் வைத்துப்பாருங்கள்.. தமிழர் நாள்கணக்கே சந்திரனை சுற்றி தான்..  பௌர்ணமி அமாவாசை இடைப்பட்ட தேய்தலும் வளர்தலும். கொண்டு நாட்களும் ஔியின் ஓரைகள் கொண்டு திதிகளும் திசைகளை கொண்டு மாதங்களும் உண்டாயின. சிவனே இந்த கணக்கை உண்டாக்கியவர் என்பதால் சிவனை முதலாக வைத்தே சோதிட கிரகங்கள் நியமனமாக வைக்கப்படும்.. அதனாலே ஈசன் அல்லது சிவவழி ஆலயங்களில் மட்டுமே நவகிரகங்கள் இருக்கும்.. 
இன்னொரு வகையில் காலம் என்பது நிகழும் நேரம் என்றும் கொள்ளல் வேண்டியுள்ளது.. இந்த நேரத்தில் இது நிகழும் என்கிற காலக்குறி அறிதல் சிவனுக்கு இருந்தது என்பதே இப்பெயரின் குறியீடாக இருக்கிறது. எப்படி வாருங்கள் பார்ப்போம்..
ஆலம் என்பது மழை என்கிற பொருளில். ஆலகாலம் கண்டன் என்பது மழைவரும் காலம் அறிந்தவன் என்றாகும்.
ஆலம் என்பது கடல் என்கிற பொருளில் . நீலகண்டன் கட்டுரையில் சொன்னது போல் நீலநிற மான கடலினை கடந்தவன் காலத்தினை உருவாக்கியவன். 
ஆலம் என்பது ஆகாயம் என்கிற பொருளில்.  ஆகாயத்தை கொண்டு காலத்தை உருவாக்கியவன். அல்லது ஆகாயத்தில் வரும் நட்சத்திரங்கள் நிலவு முதலியனவற்றின் காலத்தை அறிந்தவன்.. அதாவது இந்த நேரம் பௌர்ணமி வரும் என்று அறிபவன்.. இப்படி தான் சோதிட புராணம் கூறுகிறது..
ஆலம் என்பது கலப்பை என்கிற பொருளில் . பட்டீஸ்வரம் அறிந்தவர்க்கு தெரியும்.. சிவன் வேளாண்மையை கண்டுபிடித்தவர் என்கிற விடயத்தை தருகிறது..
ஆலம் என்பது உலகம் என்கிற பொருளில்.  உலகத்தையும் காலத்தையும் நன்கறிந்தவன் என்கிறது.. 
இன்னும் ஒன்று வாதிட வேண்டியுள்ளது. உண்டோன் என்கிறபோது என்கிற கேள்வி எழலாம்.. 
உண்டோன் என்பது குறிப்பளவில் உணர்ந்தவன் . என்றும் உண்டாக்கியவன் என்றும் பொருள்படும்.. 
கண்டு  களித்து உண்டு உயிர்த்தனர்.. 
இதனை தனித்தனி சொல்லாக பார்க்கின் தனித்தனி பொருள்தரும்.. சேர்த்து புரிகின் கண்டு உணர்ந்தனர் என்று சொல்லும்.. 
இப்போது சொல்லுங்கள்.. வாசுகியின் விசமுண்ட கதை நிஜமானது தானா?. 
(தொடரும்)


0 Comments