சாரு... எஸ் பாஸ் என்றது சாரு எனவழைக்கப்படும் 22 வயது அவள் .. சாரு மேக்னா...
வாட்ஸ் மை செட்யூல் டுடே.. என்று வினவியது அவளின் பாஸ் மித்யுன். முன்னாள் காதலியான சாருவை உதவியாளராக்கி.. ஹர்ஷா உடன் வாழ்கின்ற பணம் விரும்பும் யோக்கிய வேடதாரி..
நத்திங் ஸ்பெஷல் பாஸ் ஜஸ்ட் 10 -5 ஆபிஸ் சீட்டிங்.. அண்ட் மீடிங் சம் அபிசியல் பர்சன்ஸ்.. என்று ஒப்பித்தவாறே மித்யுன் வீ்ட்டிருந்து காரில் ஏறினாள் சாரு...
வாசலை தாண்டியது கார்..் வார்த்தை மாறின..
சாரு இந்த ட்ரஸ் உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு.. மித்யுன் இது நம்ப கம்பனி யூனிபார்ம். ட்ரஸஸ் பழசாயிருச்சு. பாதி உன்னால ஆபிஸ் லான்ட்ரிக்கு போய்டுச்சு.. ஈவ்னிங் சாப்பிங் போலாம்னு இருக்கேன்..
சரி.. ராகேஷ் கிட்ட பணம் வாங்கிக்கோ.. சரி மித்யுன் அப்ப நீ வரலயா.. சொன்னா கோச்சிப்ப.. அங்கயும் ஷாப்பிங் வரதா சொல்லிருக்கேன் என்றவளை மார்புக்கூட்டில் புதைக்கப் பார்த்தான்..
அலுவலகம் அதிகபடியாக இயங்கிக் கொண்டிருந்தது.. வேளையாட்களின் வணங்கங்களை கண்டும் காணாமல் உள்நுழைந்த மித்யுன்.. டையலர் போனில். R&D ல இருந்து ராகேஷ வரசொல்லுங்க.. என்றான்.
ராகேஷ்.. ஏழ்மையின் ஏளனங்களுக்கு மத்தியில் போராடி படித்து போட்டிகளை கடந்து ஆர் அண்ட் டி க்குள் நுழைந்தவன் அசாத்திய திறமைசாலி.. வேதியியல் நிபுணன். .. சிறுவயதின் சிலகாலம் பின் பெற்றோரை இழந்தவன்.. சித்தியின் சீரிய கொடுமைகளால் இளைத்தவன்.. பின்னே எப்படியோ தப்பிவந்து பிழைப்புக்கு மேலே படித்து மித்யுனிடம் வந்து சேர்ந்தவன்.. ஒரு மனைவி ஒரு பிள்ளையென சராசரி மனிதன்..
ஸாரி பாஸ் ராகேஷ் இஸ் இன் லீவ்..
ஓ யெஸ் ஐம் ஒன்லி சென்ட் ஹிம் அவுட் ஆன் லீவ்.. ஒகே கேன் யூ சென்ட் அருண் டூ மை கேபின்..
அருண் வந்து நின்றான்.. சர் ஒருத்தர் உங்கள பாக்க வந்துருக்காங்க.. ஏதோ முக்கியமான விசயமாம்.. பேர் ஜானவினு சொன்னாங்க.. சொல்ல சொன்னாங்க..
ஓ அந்த பூச்சி மருந்து ஆர்டர்.. இந்த ராகேஷ் வேற இல்லயே.. சரி நீ முதல்ல சாருவ வரசொல்லு..
நுழைந்த சாரு சொல்லு மித்யுன் என்றாள்.. சாரு நானிப்ப என்ன பண்ணுவேன். இந்த ராகேஷ் வேற இப்ப இல்ல .. ரொம்ப பெரிய ஆர்டர்.. கவர்மெண்ட் டென்டரே இவங்க இஷ்டபடி தான்.. அவசர பட்டு ராகேஷ லீவ்ல அனுப்பிட்டேன்..
கவல படாத மித்யுன் நானிருக்கேன் என்றணைத்தாள்.. இப்ப நீ பேசி சமாளி அதுக்குள்ள ராகேஷ வர வெச்சிடலாம்.. நாளைக்கு ஆபிஸ்க்கு வரவெச்சிடலாம்..
வருவானா?..
உனக்கு தெரியாதா அவன் சின்சிரயாரிட்டி பத்தி.. அவன் சின்சியருக்கு தான ஸ்பெஷல் லீவ் குடுத்து பணத்தோட டூர் போக சொல்லி அனுப்பின..
ஆமாம் ஆமாம். ஆனா அவன எப்படி காண்டாக்ட் பண்றது.. ?..
அது என் ரிஸ்க் நீ டென்சனாகாம வந்தவங்கள சமாளி.. என்று என்ட்ரி பெல் அடித்து வரவழைத்தாள்.
ராகேஷ் தேனியின் செழிப்பான கிராமங்களில் ஒன்றில் ... தன் பூர்வீகத்தின்.. மடியில் விடுமுறையை மகனுடன் களித்துகொண்டிருந்தான்.. மகனென்றால் உயிர்.. மனைவியோ இப்போது அவளின் சந்தோசத்திற்கு எல்லையே இல்லை.. எத்தனையோ வருடங்களாய் சமையலறை அடுக்குகளுக்குள் முடங்கி கிடந்தவளுக்கு வெளியுலக பிரவேசம் புது அனுபவம்..
ராகேஷீம் மகன் பூருவும் அருகிலுள்ள வயல்வெளியினை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்... மகன் பூருவின் மகிழ்ச்சியை கண்டு நித்தம் இன்புற்றான்.. இனி வாரம் ஒருமுறை வரவேண்டும் என்று எண்ணினான்.. அதற்குள் செல்போன் ரிங்கிட..
ஹலோ நான் சாரு பேசுறேன் ராகேஷ் ஒரு முக்கியமான ஆர்டர் மித்யுன் நீ வரதுக்காக காத்திருக்கான்.. நாளை நிச்சயம் நீ வர வேண்டும் கம்பனியின் எதிர்காலம் உன் கையில். என்றபடி சாரு சொல்லிக்கொண்டிருக்க ராகேஷின் முகமலர்ச்சி தொட்டாச்சுருங்கி போல் வாடிப்போனது.. மனைவியிடம் மகனிடம் எப்படி இதை தெரிவிப்பது அவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணத்தில் எத்தனையோ சிந்தனைகள்.. பல ஆண்டுக்கு பின் வந்த முதல் டூர் பாதியில் திரும்புவது என்றால்..
பூரு எங்கேயோ போய்விட்டான் என்று பதற்றத்தில் தேடுகையில் தெக்கதோப்பு மாடசாமி எனும் கிழவர் பூருவுடன் பேசிக்கொண்டிருந்தார்.. ராகேஷ் அவர்களை நெருங்க மாடசாமி நெல்லுக்குருவி பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.. அப்பா அப்பா இந்த தாத்தா ஏதோ பேர்ட் எல்லாம் வரும்னு சொல்றாருப்பா என்கிற மகனின் ஆசைக்காக முழு கதையும் கேட்டுக்கொண்டிருந்தான் ராகேஷ்.. இன்னும் மூணு நாள்ல வந்துடும்னு சொன்னார் மாடசாமி.. அப்பா நாம இருந்து பாக்கலாம்பா என்றான் பூரு. ம்ம் என்று வெறித்த மனதொடு ம் கொட்டினான் ராகேஷ்..
மாலை நேரம் சூரியனின் சுந்தர ரூபம் வயல்களில் பிம்பமாய் படர.. அந்த அவசியமான செய்தி அறைகுறையாய் கொட்டப்பட்டது.. மனைவியின் விரக்தியும் வெறுப்பும் வார்த்தைகளால் சுட்டது மகனின் ஏமாற்றம் அழுகையாய் சிந்தியது...
இன்னபிற உணர்வுகள் ஊசலிருந்து விழுந்தாற் போல் கொட்டிவிட .. இறுதியாய் தன் அலுவலே அவசியமாகி. அவன் அதிகாரத்தால் இரவே வீடுவந்தனர்.. மனைவின் சொற்கள் காயபடுத்தவில்லை ஆனால் மகனின் அழுகை ராகேஷை இரவெல்லாம் தூங்க விடவில்லை... மறுநாள் அலுவல்களை முடித்து உடனே விடுமுறையில் செல்லவேண்டும் என்று முடிவுசெய்தான்... அந்த நெல்லுக்குருவிகளை காணும் ஆசை ஒட்டிக்கொண்டது அவனிடம்..
அலுவலகம் அவசர இயந்திரமாய் இயங்கி கொண்டிருக்கிறது. மித்யுன் படபடப்பாய் காத்திருந்தான். அந்த ஜானவியும் காத்திருந்தாள் பதட்டத்தில் சாருவும் பங்கு கொண்டிருந்தாள். உள்நுழைந்தான் ராகேஷ்.. தங்கள் நிறுவனத்தின் பூச்சிமருந்து பொருட்களையும் அதன் ரகங்களையும். அதன் மேல் நடத்தப்பட்ட ஆய்வுகளையும்.. அதன் தரத்தையும் வேதியல் ரீதியிலான விளக்கங்களையும் தந்தான்..
அந்த ஜானவியின் திருப்தியினால் அந்த பெரிய ஆர்டர் இந்த நிறுவனத்திடமே தரப்பட்டது.. ராகேஷ் மிகவும் பாராட்டப் பட்டான். சாருவும் மித்யுனும் கொண்டாடி தீர்த்தனர். ராகேஷ்.. மித்யுனிடம்..
மித்யுன் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்...
சொல்லு ராகேஷ் என்ன விசயம்.. ?..
என் பையன் நேத்து ரொம்பவும் ஏமாந்துட்டான் மிதயுன்..
பசங்கன்னா இப்படி தான் ராகேஷ்.. ஆரம்பத்துல என் பொண்ணு லீனாவும் அப்படிதான் இருந்தாள்.. இப்ப பழகிட்டா. போக போக சரியாயிடும் ராகேஷ்
இல்ல மித்யுன் என் பையன் ஏமாந்து போனது வருத்தமில்ல அந்த ஏமாற்றம் என்மேலான வெறுப்பை வளர்க்குது அதான் சிக்கல்..
சரி நான் என்ன செய்யனும் சொல்லு. .. சாக்லேட் பாக்ஸ் வாங்கிதரவா?..
இல்ல மித்யுன் எனக்கு மறுபடியும் ஒரு வாரம் லீவ் வேணும் நான் பையனோட இருக்க விரும்புறேன் ..
இந்த சமயத்துல நீ இல்லாம எப்படி ? சரி.. நீ என் நண்பன் .. அதுமில்லாம இன்னைக்கி இத்தனை பெரிய கான்ட்ராக்ட் உன்னால தான் கிடைச்சது அதனால ஒரு 4 நாள் எடுத்துக்கோ ராகேஷ்..
தேங்க்ஸ் மித்யுன் என்று கிளம்பினான்..
வீடிற்கு வந்து உடனடியாய். கிளம்பி.. பயணிக்க..
நீங்க எப்பவும் இப்படிதான் திடீர்னுஏதாவது சந்தோஷம் பண்ணிடுறீங்க. என்று கொஞ்சினாள் மனைவி..
மீண்டும் பூர்வீக கிராமம்.. பூருவுடன் ராகேஷின் பிள்ளை கனவுகள்.. பழைய நினைவுகள்.. வயல் நடுவில் இருக்கும் பரண்மேல் பூருவை அழைத்துக்கொண்டு போனான்..
ராகேஷுக்கு கவிதை எழுதவேண்டும் என்று தோன்றியது.. பூருவுக்கு வேற்றுகிரக பிரவேசம் போல பரவசமாய் இருந்தது.. நெல் முற்றிய வாசம் அவர்களுக்கு பிடித்திருந்தது.. அப்போதுதான் ஞாபக சரத்தில் நெல்லுக்குருவியின் எண்ணம் மலர..
காத்திருந்தார்கள்.. மதியமானது .. மாலையானது .. அறையிருள் சூழ் பொழுதாகியும் குருவியின் கீச்சொலிகூட செவிபடவில்லை.. ஏமாற்றத்தோடு வீடுதிரும்பினர் ராகேஷீம் பூருவும்..
இரவு உணவு ருசிக்கவில்லை.. உறக்கம் கூட பிடிக்கவில்லை.. ஏதேதோ எண்ணக்குளத்தில் மயங்கி உறங்கினர்.. காலை கதிரவன் இளஞ்சூட்டு கிரணங்கள் இமைமீது படர உறக்கம் கலைந்தது ராகேஷீக்கு . பூரு இன்னும் எழவில்லை .. கிராமத்து காலையும் குளிர் பிரதேச மாலையும் மிகவும் பிரசித்தமானது. ஆக்சேன் என்னும் மோனா ஆக்சிஜன் தனியாய் திரியும் தருணம்.. தெக்கத் தோப்பு மாடசாமி கண்கலங்கிய படி நகர்வதை கண்டான் ராகேஷ்..
ஓடிசென்று வினவினான் .. ஒத்த பிள்ள இருந்திருந்தா சொத்த விட்டுபுட்டு செத்து போயிருப்பேன்.. இந்த கிழத்த பெத்தவனா நெனச்சி வந்ததெல்லாம் அந்த குருவிங்கதான் வருசநெல்லு வௌஞ்ச நேரம் கறிய சுத்தும் நாயப்போல நிலத்த சுத்தும் நூத்துக்குமேலான நெல்லுக்குருவிக.. கொத்துக் கொத்தா செத்து கிடந்தா இத்துபோன நெஞ்சு வெந்து ஈரம் சொட்டுதய்யா..
என்ன சொல்றீங்க குருவிங்க செத்து போச்சா எங்க? எப்படி? ..
காய்ஞ்சு போன கம்மா பக்கம் போயிபாருப்பா என்று இடிந்து போனவர் நடந்து போனார்.
கம்மா பக்கம் சென்றான் ராகேஷ்.. தெனம் நீந்தி வௌாண்ட இடம் வெறுங்கரடா கிடப்பத பாத்து வருந்தினான் .. மதகுபக்கம் ஆழம் அதிகம்னு போனதில்ல அவன் இப்போதெல்லாம் அங்குதான் கிரிக்கட் வௌயாட்டு நடக்குது.. மதகு பள்ளத்தில் நூறா இரநூறான்னு தெரியாதபடி குருவி பிணங்கள் .. இந்த இடத்துக்கு குருவிகள் வந்த காரணம் அவனுக்கு புரிந்திருந்தது.. ஆராய்ந்து பார்த்ததில் ஒருகுருவியின் அலகுக்குள் நெல்லொன்று இருந்தது. நெற்பயிற் மேல் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்துதான் காரணம் என்று சந்தேகித்தான்..
சில குருவிகளின் உடல்களை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தபோது ஒரு செய்தி வந்தது.. தெக்கத் தோப்பு மாடசாமி விஷமருந்தி தற்கொலை. அதிர்ச்சி அவனை அலைகலைக்க தொடங்கியது..
பூருவிற்கு நடந்தவை புரிந்துகொள்ள முடியவில்லை.. அவன் இன்னும் சின்னப்பிள்ளை.. மாடசாமியின் இறுதி ஊர்வலம் முடிந்ததும்.. அவசர அவசரமாக சென்னை வந்தான் ராகேஷீம் மனைவி மகனும்..
அவன் ரகசியமாய் எடுத்துவந்த துருப்புகள் சில அலுவலக R&D இல் அவனுக்கான தனியறையில் அடுக்கினான். சில இறந்த குருவியின் உடல்கள்.. சில நெற்பயிர்கள் .. கொஞ்சம் நிலத்து மண்.. கடைசியாய் மாடசாமியை பற்றி ஊரில் விசாரித்த தகவல்கள் குறிப்பு..
ஆய்வுகளை தொடங்கினான்.. நெற்பயிர் மேலிருந்த எனாமலை(உமியை ) பிரித்து அதன் மேலிருந்த ரசாயன கலவையும் இறந்த குருவியின் ரத்தம் குடல் மற்றும் இதர பாகத்தின் ரசாயன கலவையும் பிரித்தறிந்து. கண்டதில் பூச்சிமருந்தின்்தாக்கம் குருவியினுள் இருந்தது..
Paraffin peroxidase , neonicotinoids அதிகம் கலந்த பூச்சிமருந்துகள் எதுவென தேடினான்.. திடீரென யோசித்தவன் மாடசாமியின் குறிப்புகளில் ஆராய இவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் பூச்சி மருந்துதான் பயன்படுத்த பட்டதென அறிந்தான்..
தனது கம்பனி சாம்பிள்களை ஆராய neonicotinoids சதவிகித அளவில் மிக அதிகம் இருப்பதை கண்டான்..
மித்யுன்..
அட ராகேஷ் வாவா எப்படி இருந்தது ட்ரிப் எல்லாம்..
வந்து உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்..
சொல்லு ராகேஷ்...
நாம அன்னிக்கி கிடைச்ச ஆர்டர தள்ளிப்போடணும் நம்ம ப்ராடக்ட்லநிறைய தப்பிருக்கு.. உடனே மாத்தியாகனும்..
என்ன சொல்ற நீ?..
ஆமாம் மித்யுன் இந்த ப்ராடக்ட்ல neonicotinoids ரொம்ப அதிகமா இருக்கு.. அத பயன் படுத்தினா பூச்சிகள் இறக்கும்ங்கிறதெல்லாம் சரி.. ஆனா அது மனிதனுக்கும் ஆபத்தானது.. இந்த கேமிக்கல் ரத்தத்தல கலந்து அங்கங்க உப்பு மாதிரி தேங்கும் அது ரத்தநாளத்துல புற்றா வளரும் நோயாளியோ மருத்துவரோ தெரிஞ்சிக்க முடியாது.. ஆனாஉயிர் பலியாகும்..
மித்யுன் முகம் மாறியது.. மேலும் நடந்தவற்றை எல்லாம் ராகேஷ் கூறினான்..
சிறிது நேரம் கழித்து சாரு உள்ளே வந்தாள்.. டேபிள் ட்ராயரை அலசியவள்.. மித்யுன் இந்த பிஸ்டல்ல இருந்த ஒரே ஒரு புல்லட்டயும் காணோம்.. என்று கேட்க..
சாரு R&D ல ஆள் தேவைனு விளம்பரம் குடு..
ஏன் ராகேஷா . இதோட ஆறு பேராச்சு மித்யுன்.. விசயம் வெளிய போகலயானு விசாரிச்சுடு..
ஆட்கள் தேவை..
பிரபல வேதியல் நிறுவனத்தில்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைக்கு
நல்ல திறமையுள்ள வேதியியல் நிபுணன் தேவை..
தொடர்புக்கு
த.பெ. எண் 16
சென்னை..
என்னும் விளம்பரத்தை படித்துக் கொண்டிருந்தான் மற்றொரு ராகேஷ்...
Post a Comment