அழகுகள் நிறைந்த அந்த விருந்தாவனத்தின் தோட்டத்தில் நானும் அந்த மாயனான கண்ணனும் உலவிக் கொண்டிருக்கையில் நடந்த உரையாடல்கள்..
நான் : கண்ணா எனக்கொரு விடயத்தை சொல்... எப்படி எப்போதும் நீ் மட்டும் ஆனந்தமாக இருக்கிறாய்..?..
கண்ணன் : நண்பா நீ வாழ்கிறாய் நான் வாழ்க்கையை நடத்துகிறேன்..
நான் : புரியவில்லை கண்ணா விளக்கமாக சொல்..
கண்ணன் : தோழா நீ ஒன்றை உணர்வாயாக .. வாழ்க்கை என்பது அனுபவங்களின் கூடு.. நான் அனுபவங்களை சுகிக்கிறேன்..நீ அனுபவங்களை உன் விருப்பத்திற்கு மாற்ற நினைக்கிறாய்..
நான் : அனுபவங்களை விருப்பதிற்கு மாற்றவதில் என்ன பிழையுள்ளது கண்ணா.. ?.. நான் விரும்பும் படி வாழ எனக்கு உரிமையில்லையா?..
கண்ணன் : உரிமையானது உண்டு நண்பா.. உனக்கு எத்தனை உரிமையுண்டோ அதே அளவு உரிமை மற்றவர்க்கும் உண்டு.. உன் வாழ்க்கை என்பது நீ மட்டுமேவா இருக்கிறாய்?.. தாய் தந்தை சகோதர சகோதரிகள் நண்பர்கள் உறவுகள் மனைவி மக்கள் என பன்முனையில் பின்னபட்டிருக்கிறாய்... நீ உன் விருப்பத்தை அவர்களிடம் திணிக்கிறாய்.. அவர்களின் பக்கத்தில் உனக்கான சாதகத்தை எதிர்பார்க்கிறாய்..
நான் : குழப்பமாக இருக்கிறது கண்ணா.. விளக்கமாக சொல்லேன்..
கண்ணன் : தந்தைக்கு நீ கடமைபட்டவனாகிறாய்.. அவரது ஆணைகளை விருப்பமின்றி செய்தாலும் வருத்தம் கொள்கிறாய்... ஆனால் உன் மனைவியும் மக்களும் உன் விருப்பப்படி நடக்க விரும்புகிறாய் அவர்கள் செய்யாவிடில் வருந்துகிறாய்.. பின் எப்படி ஆனந்தம் கொள்வாய்.. .?.
நான் : நான் தந்தைக்கு கட்டுபட்டு இருந்தபோது என் மகன்/மகள் எனக்கு கட்டுபட வேண்டுமென எண்ணுவதில் என்ன குறையுண்டு கண்ணா?..
புன்னகையுடன் கண்ணன் : நீ உன் தந்தைக்கு நல்ல மகனாயிருந்திருந்தால் உன் மக்கள் உன் பேச்சை தட்டமாட்டார்கள்..
நான் : அதெப்படி.. ?..
கண்ணன் : ஒரு நல்ல தந்தைக்கு நல்ல மகனாக இருந்தவன் அவனை அறியாமலே நல்ல தந்தையாகிறான்.. எப்படி ஒரு சிறந்த குருவின் சீடன் சிறந்த ஞானம் பெறுகிறானோ அதுபோல்.. நல்ல தந்தைக்கான குணம் அவனுக்கு இயல்பிலேயே அமைந்துவிடுகிறது..
நான் : இதுவிருக்கட்டும் கண்ணா.. நான் கீதையை பலர் சொல்ல கேட்டபோது இந்த கேள்வி என்னுள் முளைத்தது.. மொத்த கீதோபதேசமும் ஒருகணத்தில் நடந்தேறியது என்கின்றனர் இது சாத்தியம் தானா...
சிரித்த கண்ணன் : நண்பா சற்றே யோசி நான் ஏன் கணப்பொழுதில் சொல்ல வேண்டும்.?.. யுத்த சமயத்தில்.. சங்கு முழங்கினாலும் சேனாதிபதியின் ஆணையில்லாது ஒருவரும் நகர மாட்டார் .. அந்தபுறம் பீஷ்மரை நம்பி தான் படையே இருந்தது. இந்த பக்கம் அர்ஜீனனை நம்பிதான் படையிருந்தது.. இதில் எனக்கு நிறையவே நேரமிருந்ததே..
நான் : வாழ்க்கையில் நிறைய பேர் பின்னப்படுகிறார்கள்.. ஞானிகள் முனிவர்கள் இப்பின்னல்களை களைந்து விடுகின்றனர்.. அவர்கள் எளிதாக இப்பிரச்சனைகளில் விடுபட்டுவிட்டனர்.. நானும் அவ்வழியில் சென்று விடுபடலாமல்லவா..?..
கண்ணன் : அவ்வழியில் விடுபடலாம் நண்பா ஆனால்.. இல்லறம் விடுத்து சென்றால் அதுவும் சுயநலமாகிறது .. நீ ஒருவன் தந்தையாக தமையனாக ஆசானாக இருக்கும் பொழுது உன்னொருவனின் ஒழுக்கமானது அவர்களையும் ஒழுக்கமாய் மாற்றும்..
நான் : துறவறம் செல்வதும் சுயநலம் என்றானால் கண்ணா தர்மம் என்பதும் சுயநலம் என்றாகுமல்லவா?...
கண்ணன் : இல்லை நிச்சயமாக இல்லை.. எப்போது ஒரு தர்மம் சுயநலமாகிறதோ அக்கணமே அது அதர்மமாகிறது நண்பா...
நான் : எனில் தர்மம் என்பது என்ன? எது தர்மத்தின் முழுவுருவம் ? விளக்கமாக சொல் கண்ணா..
கண்ணன் : விளக்குகிறேன் .. அதற்கு முன் நீ சிலவற்றை அறிய வேண்டியது அவசியம்.. அவற்றையும்..
விளக்குகிறேன்.. ...
(தொடரும்.... இவ்வுரையாடல் வடிவ கட்டுரை பகவத் கீதையை போலவே 18 அத்தியாயங்களை கொண்டது ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு நிலையாக தொடர்கிறோம்.. )...
Post a Comment