குறளும் 7 பொருளும் - 1

எனக்கு எப்பவும் ஒரு நம்பிக்கை உண்டு.. சொல் என்பது மந்திரம் .. அவசியமில்லாமல் சொல் தோன்றுவது தவறு என்ற எண்ணம் 

பழந்தமிழர் காலத்திலேயே இருந்தது..

அந்த விசயத்தில் எம்மான் வள்ளுவர் மிகவும் சிக்கனக்காரர் . ஒருசொல் அவசியமின்றி சேர்க்க மாட்டார்.. அப்படிபட்டவர் குறளில் 7 சொற்கள் அல்ல அல்ல 7 சீர்கள் வைக்கிறார் என்றால் ஒரு கருத்தை சொல்லவா? என்றால் அவருக்கது அதிகம் .

உதாரணத்துக்கு ஒருகுறளை பிரித்து காட்டுகிறேன்.

உழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்..

குறளின் கருத்தென்ன? ஊழ் பெரிய வலிமையானது. என்பது தானே . அதை முதலிரு வார்த்தையிலேயே வைத்துவிட்டாரே.. அப்ப மீதம் இருப்பது எதற்கு? ஒரு சொல் வீணாய் சேர்க்காதவர் நான்கு சொற்கள் சேர்ப்பாரா?. என்ற கேள்வியில் பிறந்தது எனக்கொரு புரிதல். 7 சீர்  7 பொருள் என்கிற கணக்கு..

உடனே கோபித்து கொள்ளாதீர்கள் . முன் உரை செய்வர் அனைவரும் எனக்கு குருவிற்கு இணையானவர்களே..

ஒரு மனிதர் தன் தொழிலை மகனிடம் விட்டுவிட்டு ஓய்கிறார். மகன் தொழிலை விரித்து கட்டமைத்து தன் மகனிடம் தருகிறார். இந்த பேரன் என்ன செய்ய வேண்டும் தொழிலை நடத்துவதோடு நிறுத்திக் கொள்வதா? தொழிலை வளர்ப்பதா?.. வளர்ப்பதை தானே செய்ய வேண்டும்!.

அப்படித்தான் இதுவும் வள்ளுவன் உரை ஆசிரியரிடம் தந்தார் உரையாசிரியர் விவரித்து நம்மிடம் தந்தார் நாம் வளர்க்க வேண்டுமல்லவா?..

சரி ஒரு குறளுக்கு நமது அறிவை பொருத்து பல பொருள்கள் பிடிபடும். அப்படியாக குறளுக்கு 7 பொருள் உண்டு என்கிறேன் நான்.. இதற்கு முன் வந்த உரைகளை மீற வேண்டும்..

உதாரணக்குறள்..

ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்..

இதற்கு உரையாசிரியர்களே இரு பொருள் தருகிறார்கள்...

1) முவ மற்றும் கலைஞர் - பிறருக்கு உதவி வாழ்பவனே உயிர் வாழ்பவன் மற்றவன் செத்தாக கருத வேண்டும்..

2) பரிமேல் அழகர் - உலகத்தோடு ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவனாகிறான். ஒத்து போகாதவன் செத்தவனாக கருதப்படுவான்...

இனி நான்.

3) ஒத்தது அறிவான் - பிறருக்கு ஏற்றது அறிந்து உதவி வாழ்பவனே உயிர் வாழ்வதாக கருத வேண்டும். பிற உயிரின் தேவை துன்பம் அறியாதவன் செத்துவிட்டதாக வைத்துக் கொள்..

4) உயிரின் உணர்ச்சிகளை புரிந்து நடப்பவனே உயிரோடு இருப்பதாகும். உயிரின் உணர்வுகளை உணராதவன் செத்த பிணமாக தான் இருப்பான்.

5) உயிர்களின் தேவை அறிந்து அதன்படி நடப்பவனே உயிராக கருதப்பட வேண்டும். அவ்வாறு நடக்காதவனுக்குள் உயிர் இருக்காது.. இருந்திருந்தால் தேவையை உணரும் ஆற்றல் இருந்திருக்கும் என்கிறார்..

6) நடைமுறைக்குள் உலக வழக்கத்துள் ஒன்றி வருபவனே.நிகழ்காலத்தில் உயிர் வாழ்வான் மற்றவன். செத்தாருள் (இறந்த காலத்துள்- முன்னவர்களுள் - பழமையானவர்களுள் ஒருவனாக ) வைக்கப் படுவான் ..

7) ஊரோடு ஒத்துபோக தெரிந்தவனை மட்டுமே ஊர் வாழவிடும் . மற்றவனை ஊர் செத்தவர்களில் ஒருவனாக சேர்த்துவிடும்..

எல்லாம் ஒன்றுபோலவே தோன்றும் ஆனால் ஒவ்வொரு பொருளும் வெவ்வேறானவை..

1) உதவுதல்
2) ஒன்றாக இணைதல்
3) ஏற்றது அறிதல்
4) உணர்வுகளை உணர்தல்
5) தேவைக்கேற்ப நடத்தல்
6) நடைமுறையில் இருத்தல்
7) ஒத்துபோதல் (அட்ஜஸ்ட் )

இப்படி எல்லா குறளும் 7 பொருளாகும் .. நீங்கள் விரும்பும் குறளை அனுப்புங்கள் புரிந்து கொள்ளலாம்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post