ஆவி பறப்பதில் ஆறும் குணத்தினில்
தாவி மணம்வீசி தாகம் அடக்கலில்
களத்தில் நிறைதலில் கவலை குறைத்தலில்
குளம்பியும் ஈசனும் குமரனும் ஒன்றே..
#கலிவிருத்தம்
முருகனும் சிவனும் குளம்பியும் ஒன்று..
ஆவி பறப்பது - புகை பறப்பது.. (குளம்பிக்கு ) இடுகாட்டில் ஆன்மாக்கள் பறப்பது போல் ஆடும் (சிவனுக்கு ) போர்களத்தில் எதிரிகள் ஆவியாகிப் போகுமாறு சமர் செய்யும் (முருகனுக்கு )
ஆறும் குணத்தினில் - சூடிலிருந்து ஆறும்.. (குளம்பிக்கு ) ஆறு உருவத்தில் சுடரினை சுமந்த (சிவனுக்கு ) ஆறு குணங்கள் கொண்ட (முருகனுக்கு )
தாவி மணம் வீசி தாகம் அடக்கலில்.. காற்றிலே மணமானது தாவி வந்து பருகும் இச்சை தந்து ஆற்றுவதில் (குளம்பிக்கு)
பக்தி மணம்வீசி எட்டுவகை தாகம் அடக்கி (முருகன் சிவன் )
களத்தில் நிறைதலில்.. கோப்பையில் நிரம்பி (குளம்பி ) யுத்தகளத்தில் எங்கும் நிறைந்த.. (சிவன் முருகன் )
For tea piriyars
செந்நிறத் துடைத்து செம்பொருட் சாரம்
அந்நியத் துவைக்கும் அரும்பெரும் பானம்
இந்நிலத் துளதோர் இணையிலா பேரும்
தந்திடுந் தேநீர் ஈசனும் முருகே..
செந்நிறத் துடைத்து - செம்மையான நிறம் (தேநீர்)
செம்மேனியன் (சிவன்)
செந்நிற தீயை உடைத்து (முருகன்)
செம்பொருட் சாரம் - காய்ந்த சிவந்த தேயிலை சாரம்.. (தேநீர்)
செம்மையான பொருட்களின் சாரம் அதாவது மூலம் (சிவன்)
செம்பொருளான சிவனின் சாரம் (முருகன்)
அந்நியத்து வைக்கும். - வேறுலகில் லயிக்கும் மாயம் செய்யும்..
அரும்பெரும் பானம் - சிறந்த குடிபானம் .. (தேநீர்) முருகனின் வேல் என்னும் பானம் .. ஈசனின் மாயைகள நீக்கவல்ல பானம்..
இந்த உலகில் இணையில்லாத பேரும் புகழும் தரும்.. தேநீரும் முருகனும் ஈசனும் ஒன்றே.
Post a Comment