எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..

கொஞ்சம் அமைதி
கொஞ்சம் காதல்
கொஞ்சம் சோகம்

தனிமையின் வலி
இயலாமையின் ஏக்கம்
முயற்சித்த துயரம்

கொஞ்சம் இயற்கை
கொஞ்சம் கடல்
கொஞ்சம் பறவைகள்

அருவியின் சப்தம்
ஆற்றினில் ஓடம்
முழுமதி நிலவு

யாரோ ஒருவனின் கூச்சல்
ஏதோ ஒன்றின் அழுகை
எவனோ ஒருவனின் தொழுவம்

கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம்
கொஞ்சம் வறுமையின்பசி
கொஞ்சம் வறட்சியில் தாகம்.

தாமரையின் வாசனை
ரோஜாவின் முள்
மல்லிகையின் காமம்.

இரண்டு காகிதம்
ஒரு எழுதுகோல்
ஒரு கோப்பை தேநீர்.

எழுதினால் கவிதை.
யோசித்தால் கற்பனை
மயங்கினால் போதை.

எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
அந்த பாற்கடல் வாழ்க்கையில்
அமுதம் பிறப்பதற்கு..

0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS