தானதன தானதன தானதன தானதன தானதன தானதன - தந்ததான..
நீடுவரு பேருதரு நீலகடல் சூழகெடு நீந்திவுயிர் காணமொரு - மங்கையாக
ஈடுயென ஏதுமில ஈகையனை தூயமொழி ஈவுகரை தாவிதுணை - என்றதாயே.
சாடுவினை கேடுபட சாலசிறந் தேணியென சாகுமிவர் வாழவொரு - சிந்தையாவுங்
கூடுவுறை காதலிள வீடுதரு ஞானமொழி காமமத தேசபேத - பந்தந்தீர
ஏடுநிறை பாடமது ஏகநிலை யாகவளர் தேகமதின் மோகமறு - செங்கைசோதி
பாடுமிள பாலனெனை நாடுயருள் கோடிதரும் தீரமொழி ஈரமதை - கண்டயானும்.
பாடுமலர் சூடுமுனை பாடுபுகழ் தேடியடி கூடுகிற பாதையினை - சொல்லுவாயே..
நாடுமொரு மாணவனை நாடுமது நாடும்படி ஈடுயிணை தேடியறி - கின்றதாரோ.
வாடுபவர் வாடலினை காணுகிற நாளைகெட வாளையெடு வாகையது - கொண்டதாயே..
மாடுபுகழ் மாடுவுனை கேடுயென கூறுபவர் கோளைநினைத் தேதினமும் - சந்தமாக.
பாடுகிறேன் பாடஅரும் பாடலுனை பாவமொடு பாவியேனும் பாடுகிறேன் - மற்றயாரை
யானறிய யாதறிய வாதமுடன் பேதமதை போதமதை யானறியேன் - என்றதாலே....
ஊனுருக ஊனுயிரும் ஊடொளியும் தானுருக தானுனையும் நானுருக - கொண்டதாயே..
Post a Comment