அலுவலக அறையில் மேசைமேல் கால் போட்டு ரோலிங் சேரில் டிவி பார்த்திருந்தவன் . ரஷ்ய உளவாளியான ட்ராவிஸ் வார்டன் தீர்த்த வழக்குகளை பற்றி ஹென்ரி மெலின் என்கிற எழுத்தாளினி எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தது படித்துக்கொண்டு இருந்தேன் என்பது வரை சரியாக இருந்த நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. என் கால்மேல் கைபட்ட உணர்வில் தான் விழித்தேன்..
கார்த்தி என் காலின் அடியில் இருந்த ரிமோட்டை எடுக்க பார்த்திரக்கிறான். என்ன அண்ணா இப்படி தூங்குறீங்க நான் வந்ததுகூட தெரியலயா?.. என்று கேலித்தான்..
இல்லடா இந்த புக்தான் படிச்சிட்டு இருந்தேன் கன்டென்ட் நல்லா இருக்கு ஆனா எழுதுனவர் அறுவை போல கல்கி நா.பார்த்தசாரதி எல்லாமே பரவாயில்லனு சொல்ற அளவுக்கு அறுவை...
அண்ணா என்ன இப்படி டக்குனு கல்கி நா.பா லாம் வாருரீங்க . இப்புறம் இலக்கிய உலகம் சும்மா விடாது .. அப்படிஎன்ன அவங்க அறுவை.. ?
இப்ப நீ ஒரு கோக் வாங்க நம்ம பக்கத்து தெரு பாய்கடைக்கு போற அவர்கிட்ட அக்கௌண்ட் இருக்குனு வெச்சிக்கோ.. கல்கி எழுதுனா. நீ போற ரெண்டு தெருவுல இருக்குற வீடு வீட்டின் நாய் , ரோடு ரோட்டு நடுவுலகம்பம் கம்பத்துல மூலம் பவுத்திரம் விறைவீக்கம்ங்கிற போஸ்டர்.. பாய்கடை உயரம் பாய் தாடி அவர் உனக்கு முதன்முதல்ல கொடுத்தக்கடன். அவரக்கும் உனக்குமான பழக்கம்னு ஏழெட்டு பக்கம் தாண்டிதான் நீ கோக் வாங்குறதே வரும்.. நா.பா. இன்னும் சூப்பர். இந்த ரோட்டோட வரலாற எழுதி அதுல நீ போய். னு கோக்கோடவரலாற எழுதி அத வாங்குனனு எழுதுவார்.. பின்னாள்ல தான் நா.பா. இந்த விசயங்கள குறைச்சிகிட்டாரு.. அதான் அவர் கொஞ்சம் கதைகள நீட்ட தொடங்கிய காலமா மாறுச்சி..
அய்யோ ஆள விடுங்க எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்.
டேய் நீ லாயர்டா படிச்சே ஆகனும்ங்கிற தொழில் உன்னது.. சரி போ அந்த கூலர்ல வெச்ச கோக்க எடுத்துட்டு வா..
இத எப்ப பாத்தீங்க? நான் வெக்கும் போது நீங்க தூங்கிட்டு தான இருந்தீங்க..
எப்பவுமே தூக்கத்துலகடைசியா தூங்குறது காதுதான்.. சத்தம் போதும் . நீ நடக்குற சப்தம் எனக்கு பழக்கம் அதுவுமில்லாம கூலர திறக்குற சத்தம் வந்துது.. அதுல நீ அதிகமா கோக் தான் வெச்சிருக்க. அதான்..
போதும் போதும் என்றவன் நியூஸை பார்க்க காவிரி ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்வதாக சொல்லி தீர்ப்பை முடித்தது..
அண்ணா என்ன தான் பிரச்சனை இந்த காவிரில.. இவ்ளோ வருசமா வருது ...
கார்த்தி காவிரி கர்நாடகாவுல தொடங்கி தமிழ்நாடு வர நதி . இதன் தண்ணீர நம்பிதான் இங்க பல ஊரு விவசாயம் செய்யுது.. இதுல கர்நாடகா தண்ணி தரமாட்டேங்கிறது தான் பிரச்சனை..
அவன் ஏன் தரமாட்டேங்கிறான்.. ?..
இதுசாதாரண மனுச குணம் டா அத வெச்சி அங்க அரசியல் நடத்துறாங்க அவ்வளவுதான்.. நாம ஏன் அவங்களுக்கு தண்ணீர் தரணும்.. அந்த எண்ணம் தான் அரசியலா மாறுது..
ஏன் தண்ணீர் பத்தாமலா? தருவதில்லை..
இதுவும் வேறொரு காரணம் கார்த்தி..
அப்ப நதிநீர் இணைப்பு தான் சரியான வழியா?.
இல்ல கார்த்தி அது அத விட பெரிய சிக்கல் ஆகிடும்..
ஏன் அண்ணா..
டேய் ஒவ்வொரு தண்ணீரும் ஒவ்வொரு விதம் டா. . அதுபடி வேறமாதிரி மாறும்..
புரியல அண்ணா.
சரி ஒரு தண்ணீர் 40 பர்சன்ட் உப்பு இருக்குனு வெச்சிக்கோ.. அத ஒரு நூறு மில்லி எடுத்துக்கோ 20 பர்சன்ட் உப்பு இருக்குற இன்னொரு தண்ணிர எடுத்துக்கோ ரெண்டையும் ஒன்னு சேர்த்தா.. 200 மில்லிக்கு 60 பர்சன்ட் உப்பு இருக்கும்.. பிரிச்சா 100 மில்லிக்கு 30 பர்சன்ட் இருக்கும் 20 பர்சன்ட் ல பத்து பர்சன்ட் ஏறுச்சு.. அதுல இருக்குற மீன் உடலமைப்பே மாறும்..
ஓ இதுல இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?.. என்றவன் உஸ்ஸிட ..
போன் ரிங்கியது..
ஹலோ , என்றேன்
ஹலோ பவித்ரன் னா? நான் வஜ்ரவேல் பேசுறேன்.. கொஞ்சம் ஆழியார் கார்டர்ன் வர முடியுமா? ப்ளீஸ்..
ஆழியார் கார்டனா? அது நம்ம விமல் வீடாச்சே . ஏன் எதாவது பிரச்சனையா?..
ஆமாம் பவி கொஞ்சம் சீரியஸ் யுவா காட் டெட்..
என்ன?.. அய்யயோ இதோ வரேன்..
என்ன அண்ணா?
டேய் யுவா செத்துட்டாளாண்டா... உடனே வா..
Post a Comment