சிசம் - வினையம் 2 - பாகம் 3

ஹலோ!  பவி நாளைக்கு காலையில 10 மணிக்கு போஸ்ட்மார்டம் சொல்லிருக்காங்க.. சரி வெச்சிடுறேன் என்றார் வஜ்ரவேல்.

விமல் நாளைக்கு போஸ்ட் மார்டம் நீ போய் ரெஸ்ட் எடு. என்று அவனை அலுவலகத்தில் உள்ளிருந்த ரூமில் அனுப்பிவிட்டு..

கார்த்தி.. என்னடா இது இப்படி நடந்திருச்சு.. நான் எதிர்பாக்கவே இல்லடா..

அண்ணா மர்டர் சிம்டஸ்ம்சே இல்ல எதுக்கு போஸ்ட் மார்டம்.. ?.

இல்லடா பதினஞ்சு நாளைக்கு முன்னாடி யுவா என்ன பாக்க வந்துருந்தா . ஸ்வீட்ஸ் ஓட வந்தா அவ கர்பமா இருக்குறதா சொன்னா..

அவ தற்கொலைக்கு போக வாய்ப்பே இல்ல எனக்கு நல்லா தெரியும். எல்லா பொண்ணுங்களுக்கும் கர்பமா இருக்குறப்ப தற்கொலைக்கான எண்ணமே வந்தாலும் குழந்தையாவது வாழனுமேனு நினைப்பாங்க..  அப்படி இருக்க யுவாக்கு முழுசா தன் குழந்தையை தனியா வளர்க்க தேவையான பணம் இருந்தது. அப்புறம் என்ன காரணம் இருக்கும்னு தெரியனும். 

அத விமலண்ணா கிட்டயே கேட்கலாம் இல்ல.

டேய் எனக்கு சந்தேகமே விமல் மேலதான்டா.. அவன் அங்க இருந்தா எதாவது மாத்தி பண்ணுவானோனு தான் அவன அரஸ்ட் பண்ணவே சொன்னேன்   அதனாலதான் கூட்டிட்டும் வந்தேன்..

அண்ணா நம்ம விமலண்ணா மேலேயா சந்தேகம் அவர பாருங்க அப்படி யாராவது  சொல்லுவாங்களா?..

எனக்கும் தெரியுதுடா.. ஆனா யுவா அன்னைக்கு சொன்ன விசயம் எனக்கு இந்த சந்தேகத்த வர வெச்சிருக்கு..

ஏன் ?.

அன்னிக்கி யுவா என்ன பாக்கவந்தது தான் கர்பமா இருக்குறத சொல்ல மட்டுமில்ல.. அவளுக்கு ஒரு பிரச்சனை நான்தான் காப்பாத்துவேன்னு நம்பி தான் வந்துருக்கா..

அவளுக்கு அடிக்கடி மிரட்டல்கள் போன் மூலமா வந்துருக்கு .  அதுவும் விமலின் குரல்லயே அவனோட போன்ல அவன் ரகசியமா வெச்சிருந்த நம்பர்ல இருந்தே வந்துருக்கு. யுவாவும் முதல்ல நம்பல சில சோதனை பண்ணிதான் நம்ப ஆரம்பிச்சா..  அவன் போன்லயே டைல்டு லிஸ்ட்ல அந்த நேரத்துல யுவாக்கு போன் வந்துருக்கு.. ஆனா வீட்டுக்குள்ள ரொம்ப நல்லவனா நடந்துகிட்டு இருக்கான்  ..  யுவாவுக்கு சந்தேகம் பெரிய தொந்தரவா மாறிடுச்சு.. அந்த நோயை தீர்க்க விடை தேடி என்கிட்ட வந்தா.

முதல்ல நானும் இத நம்பல விமல ரொம்ப நாளா எனக்கு தெரியும் . அவன் அப்படி செய்ய மாட்டான்.. அதவிட அவன் யுவாவுக்கு எவ்வளவு நம்பிக்கையா நடந்துகிட்டான்னு நெனைக்கும் போது.  இத நம்பவே முடியாது..

ஆனா யுவா இங்க இருந்தப்பவே அவளுக்கு அந்த  கால் வந்தது  ஸ்பீக்கர்ல போட்டா.. சத்தியமா விமல் குரல் தான் . சில லட்சம் கேட்டு மிரட்டிருக்கான்.. நானும் சரி அந்த பணம் யுவாவுக்கு பெரிசுல்ல அதனால விமல நேர்ல கூப்பிட்டு குடு என்ன செய்றான்னு பாக்கலாம்.  இவன் நேரடியா கேட்டாலே யுவா தரப்போறா.. என்றேன்..

நான் அதையும் செஞ்சுட்டேன் பவி அவன் நார்மலா இல்ல எங்க எக்குதப்பா மாட்டிக்குவேனோன்னு நான் கர்பமா இருக்குறத சொன்னேன் அவன் சந்தோசப்படல.. அதே சமயம் அவன் ஒரு மெடிக்கல் பார்மஸிக்கு பேசிட்டு இருந்தான் அதற்கு தான் இந்த பணமா இருக்கும்னு நான் நேரடியா கேட்டேன்..அவன் பதிலே சொல்லல..

எனக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு . என்ன எப்படியாவது காப்பாத்து பவி. என்றாள்.

அப்படி நான் காப்பாத்துவேன்னு நம்பினவே இப்படி இறந்து கெடந்தது எனக்கு தாங்க முடியலடா..

சரி தூங்குங்க அண்ணா நாளைக்கு போஸ்ட் மார்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் வாங்கினா தெரிஞ்சிட போவுது..

ம் பாக்கலாம்.. ஆனா மோட்டிவ் இடிக்கிதுடா..

காலை அரசு மருத்துவமனை போஸ்ட்மார்டம் அறை . டாக்டர் வடிவேலன் விநாயகமூர்த்தி. தயாராக இருந்தார். ஆனால் நம்ம மகேஷ் அண்ணா வர காத்திருந்தார். மருத்துவ மாணவ பட்டாளமும் வெளியே நின்றிருந்தது..  நாங்களும் காத்திருந்தோம்.. நாங்கள்ன்னா வஜ்ரவேல். விமல் கையெழுத்து போட்டு பாடிய க்ளைம் பண்ணனும்.  கார்த்தி நான்..

மகேஷ் அண்ணா அவசரமாக வந்தார் அந்த சூப்பர் எக்ஸல் அதிகமான வேகமே 35 கிலோமீட்டர் தான் போகும்.. வேகமாக பார்க்கிங் லாபியில் விட்டுவிட்டு ஓடிவந்தார்.. ரயில்வே கேட்டில் தாமதமாகியதாக சொன்னார்.. உண்மை அவர் வரும் வழியில் தான் ரயில் நிலையம் இந்த தினங்களில் சரக்கு ரயில்கள் தண்டவாளம் மாற்றுவர்..

அவர் உள்ளே போய் விவரங்களை கேட்டுவிட்டு தனது சீருடைக்கு மாறி வந்தார். பவி வா உள்ள போலாம்.. இல்லண்ணா நான் வரல ..

ஏன்டா அன்னைக்கி பெரிய வீரன் மாதிரி வந்த சும்மா வா நான் டாக்டர்ட்ட பேசுறேன்.

இல்லண்ணா . இப்ப வர அவசியம் இருக்காது..

டேய் காரணம் நான் சொல்லுட்டா.. போன முறை மைதிலி யாருன்னே தெரியாதவ ஆனா யுவா உனக்கு பழக்கம் அதான் பாக்க முடியல இல்ல.

ம் ஆமாண்ணா உன்கிட்ட பொய் சொல்ல முடியுமா?.

பரவாயில்ல வா இதெல்லாம் தாண்டினாதான் ஆபிசரா யோசிக்க முடியும். அதுக்காக வாவது பார்த்துதான் ஆகனும் வா. என்றவர் திரும்ப.. டாக்டர் 10 நிமிசம் என்று சைகை காட்டி அவருக்கு தெரிந்தவரோடு கிளம்ப..

மகேஷ்ண்ணா அந்த மருத்துவ மாணவர்களிடம் தான் வந்து அழைக்கும் வரை யாரும் உள்ளே போக வேண்டாம் என்றுவிட்டு.. சரிவா பவி டீ சாப்பிட்டு வரலாம் காலையிலேயே டூட்டிங்கிறதால இன்னும் சாப்பிடல.. சாப்டா ஒத்துக்காது.. முடிச்சிட்டு பாத்துக்கலாம்..

சரி என நானும் கார்த்தியும் வஜ்ரவேலிடம் விமலை விட்டுவிட்டு மகேஷண்ணாவோடு எதிரிலிருக்கும் டீக்கடைக்கு போனோம்.. அன்பு தான் டீ மாஸ்டர் பள்ளித்தோழன். அன்பு மூணு டீ ஒரு பில்டர் சிகரெட் டா.

இத எப்படா ஆரம்பிச்ச..

டேய் எனக்கில்ல அவருக்கு அடிவாங்குவ..

பவி இல்ல சிகரேட் வேண்டாம் அதெல்லாம் விட்டுட்டேன்..

அண்ணா எப்படி அண்ணா அன்னைக்கு வேற மாதிரி பகவத்கீதை எல்லாம் சொன்ன இப்ப என்ன ராமாயணம் படிச்சி திருந்திட்டீயா.?.

இல்லடா பொண்ணு தான் காரணம்..

ஆமா அவ சொல்லி கேட்டியா நீ யாருகிட்ட பொய் சொல்ற ?.

கேட்டுருக்கனும் டா. கேட்டுருந்தா இன்னேரம் என்று விசும்பினார்..

அண்ணா.. அண்ணா என்னாச்சு..?. ஏன் அழற?.

ம்.. இன்னைக்கி இந்த பொண்ணு தெரிஞ்சதால வரமாட்டேங்கிற போன வாரம் என் சொந்த பொண்ணுக்கே தானே போஸ்ட் மார்டம் பண்ணேன் தெரியுமா?. என்றழுதார்..

என்ன அண்ணா சொல்ற விஜயாக்கு என்ன ஆச்சு?. எப்படி இப்படி ஆச்சு?.

விஜயா எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் விளையாட்டு பிள்ளை ஆனா புரிதல் அதிகம் யாருக்கும் குறைவரும் படி நடக்க மாட்டாள் சிறுவயதிலேயே ரொம்ப மெச்சூர்ட் என்று பலமுறை நான் வக்கீல் வெங்கியிடம் சொல்லியிருக்கிறேன். வாரத்தில் 5 முறையாவது பார்த்திடுவேன்...

கடைசியாக காலேஜ் சேர என்னிடம் ஐடியா கேட்டு வந்தாள் நர்சிங் சேரலாமா என்றாள் . இல்ல விஜயா லேப் படி கொஞ்சம் ப்ரீயா இருக்கும் நர்சிங் கொஞ்சம் பிரசர் இருக்கும் என்றேன். 

நல்ல காலேஜா சொல்லுண்ணா எங்க வசதிக்கு..

ஏ பாப்பா காலேஜ் பத்தி உனக்கென்ன கவலை ?..

இல்ல அண்ணா ஏற்கனவே அப்பா கஸ்டபடுது பெரிய காலேஜ் பெரிய பணம்னா இன்னும் கஸ்டபடுமில்ல

சரி பாப்பா பாத்துக்கலாம் நீ அதயெல்லாம் குழப்பிக்காத. உள்ளூர்லயே படிக்கிறமாதிரி பாக்கலாம்.. என்று உள்ளூரில் ஒரு கல்லூரியில் நானே கூடப்போய் சேர்த்தேன்.

அதன் பிறகு அவள் கல்லூரிக்கு செல்வதாலும் நானும் பிற வேளைகளில் மூழ்கிவிட்டதாலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இறந்துவிட்டாள் என்ற தகவல் கூட எனக்கு வராத தூரத்தில் இருந்ததை எண்ணி வருந்தினேன்..

அவ கேட்டப்பவே செஞ்சிருக்கனும்டா . செய்யாம விட்டு இப்படி விட்டுட்டு போய்ட்டா.. வீட்டுக்கு பாத்ரூம் கட்டுப்பா னு கேட்டா. பணமில்லனு விட்டுட்டேன். கவர்மண்ட் பாத்ரூம் கட்ட குடுத்த காசுல தான் அவ காலேஜ்க்கே பணம் கட்டினேன் . போகணும்னா ஏரிக்குள்ள ஒரு ஓரமா முள்ளுகாட்டுலதான் போகணும்.. எப்பவும் சிலரா போவாங்க.. போனவாரம் சனிக்கிழமை பகல்ல யார்யாரையோ கூப்டுருக்கா. யாருமே வரல. எவ்வளவு நேரம் பொறுக்குறதுனு அவளே தனியா போயிருக்கா. திரும்பி வரும்போது ஒரு நாலஞ்சு தே**** பசங்க அவள ஏரிக்குள்ளயே.. நாசம் பண்ணிட்டு அங்கயே கழுத்த அறுத்து போட்டுட்டு போய்டானுங்க.. சாயந்திரம் வர காணலயேனு தேடிபாக்க கிடைக்கல . ஊர்ல இன்னொரு பொண்ணும் அவ கூட போனவங்களும் பார்த்து சொல்லித்தான் தெரியும்..

இந்த கடவுள் ஆம்பளைக்கும் வலிவந்து தான் சுகம்னு படைச்சிருக்கனும்டா.. போஸ்ட் மார்டம் பண்ணப்ப தான் பாத்தேன் ஒரு அப்பன் எங்கயெல்லாம் பாக்க கூடாதோ அங்கெல்லாம் சிகரட்டால சூடு வெச்சிருந்தானுங்க அத பாத்ததுக்கு அப்புறம் சிகரெட்ட பாத்தாலே அதான் ஞாபகம் வருது.. அவனுங்களுக்கு சுகம் தான் முக்கியம்னா பலபேரு அதுக்குனு இருக்காங்க ஆனா இவனுங்களுக்கு அதவிட இப்படி டார்ச்சர் பன்றதுக்கு தான் பிடிச்சிருக்கு..

ஒரு அப்பனா என்னால அடக்கம் மட்டும் தான் பண்ண முடிஞ்சது. அவனுங்கள ஒன்னும் பண்ண முடியல. அவனுங்க யாருனும் தெரியும்.. ஆனா கேஸ்ல முள்ளு கிழிச்சி செத்துப்போய்டானு முடிச்சிட்டாங்க.. அழுவறத விட நான் என்ன பண்ண முடியும்..

அண்ணா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல.. அவங்கள தெரிஞ்சுமா சும்மா விட்ட. கொன்னு போட்டுருக்கனுமில்ல

என் பொண்ணே போய்ட்டா . அவங்கள கொன்னு என்ன மாறிட போகுதுடா..

நீ இப்படி மாறுவனு நான் நெனைக்கலண்ண விஜயா நல்ல பொண்ணு அவள அப்படி பண்ணவங்கள  விடக்கூடாது.

டேய் விடுறா இந்த பணத்துகிட்ட நாம எப்பவும் ஜெயிக்க முடியாதுடா..

இன்னுமா உனக்கு அந்த எண்ணம் வரல . நீ பெத்த பொண்ணுக்கு இப்படி ஆனதுக்காக நீ செஞ்சா அது தப்புதான்.. நீ பெக்காத பொண்ணுக்கு இப்படி ஆகாம  காப்பத்துனா அது தர்மம். நீ சொன்னியே கீதை அதுவும் இதத்தான் சொல்லும். கர்மம் இது இதவிட்டுட்டு போறதும் பாவம்தான். 

ம் .. சரி நான் என்ன பண்ணனும்.. ?..

இப்ப இந்த போஸ்ட் மார்டம் பண்ணு அத நான் பாத்துக்குறேன்.. கார்த்தி அந்த பசங்க யாருனு கண்டுபிடிச்சு வை..

டீ குடித்து முடித்து நாங்கள் சென்ற போது டாக்டரும் வந்திருந்தார். மகேஷ் அண்ணா உள்ளே போய் சுத்தமாக அறையை கழுவிவிட்டு டெட்டால் பொட்டு துடைத்து . முன்பே யுவா உடலில் உள்ள பொருட்களை கழட்டி விட்டு.. அவள் காலை தொட்டு வணங்கி விட்டு மாணவர்களை உள்ளே அழைத்தார்.. வெளியில் இருந்து பார்த்த எனக்கு அது ஒரு ஆலயத்தில் அர்சகர் செய்யும் செயல்கள் போல தான் இருந்தது..

என்னையும் உள்ளே அழைத்தார் இல்லை என்றேன்.. வலுக்கட்டாயமாக அழைத்து போனார்.. சரியென மாஸ்கும் உள்ளே ஒரு கர்சீபில் கொஞ்சம் சென்ட்டும் அடித்துக்கொண்டு உள்ளே இருந்தேன்.

மாணவர்களுக்கு வடிவேலன் டாக்டர் விளக்கத் தொடங்கினார்.. போஸ்ட் மார்டம் அறையை பொருத்தவரை இது பிணம் அல்ல. இதற்கு கேனவர் என்று பெயர்.

மாணவர்கள் கற்றுக்கொள்ள தரப்படும் உடல்களுக்கும் கேனவர் என்றுதான் பேர்..

கேனவர் நேம் யுவா . இது ஒரு பெண் . பொதுவா பிரேத பரிசோதனை ல 5 வகை உண்டு அது இறந்தவர் மேல நமக்கோ போலீஸ்க்கோ உள்ள சந்தேகம் பொருட்டு   பிரிப்பாங்க..

1) நோய் - இறந்தவர்  நோயின் காரணமா இறந்தாரானு பாக்கனும் எந்த மாதிரியான நோய் என்று குறிப்பிடனும். இதுல பெருசா மாரடைப்பு. கேன்சர். மூளைச்சாவுனு அதிகமா வரும் சில கேஸ்ல வேற சிலதும் வரலாம்.

2) விபத்து - விபத்துன்னா வாகனத்துல மாடில இருந்து விழுந்தா அதுமாதிரி. அதுல காயங்கள் அதன் ஆழம் எந்த காயம் உயிர் பிரிய காரணம்னு பார்க்கனும்

3) தற்கொலை - தற்கொலைக்குனு சில பிரபல வழிகள் இருக்கு அதுல எதுனு பார்த்து . அதன் அடிப்படையில் காரணங்கள கண்டுபிடிக்கனும். இதுல சில சமயம் தற்கொலையா கொலையாங்கிற சந்தேகமும் இருக்கும் அதுக்கும் பதில் சொல்லனும்

4) கொலை - அடித்து கொல்வது குத்தி கொல்வதுனு நிறைய வகையில கொலைகள் நடந்திருக்கு சினிமாலயே நிறைய பார்த்துருப்பீங்க அதுபடி கொலையாளியின் பலம். ஆயுதம் . அவன் கைரேகை. டிஎன்ஏக்கான எதாவது  கிடைக்குதான்னு பார்க்கனும்.

5) இதுதான்னு சொல்ல முடியாதது - எப்படி இறந்தார்னே சொல்லமுடியாத மாதிரியான இறப்புகள் . இதுல என் அனுபவத்தில இந்த வகை ரெண்டு முறை வந்தது அதில் ரெண்டுமே மாரடைப்பாக தான் இருந்தது..

சரி மகேஷ் நீ கட் பண்ணிட்டு கூப்பிடு நான் ரெண்டு நிமிசத்துல வந்துறேன். ஸ்டூடெண்ட்ஸ் வெய்ட் பார் சம் மினிட்ஸ் என்று நகரும் போது.. நான்.

டாக்டர். இறந்து 12 மணிநேரத்துக்கு மேல இருக்கும் இன்னமும் இந்த உடல் வியர்க்குதே எப்படி.? என்று கேட்டேன்.  மாணவர்கள் யார்ரா இவன் என்பது போல முரைத்தனர்.

சிம்பிள் இட்ஸ் கால்ட் போர்ட் மார்டம் ஹைப்பர்தெர்மியா (post mortem hyperthermia) .. சில கேஸ்ல இது வரும்.. என்றபடி வெளியே போனார்.

மகேஷ் அண்ணா யுவாவின் வியர்வையை துடைத்துவிட்டு லோசன் தடவிய போத அவள் இடை மேலிருந்த ஆடையை எடுத்தார்.. அவளது பெண்ணுறுப்பில் ரத்தத்திட்டு இருந்தது..

அண்ணா இது ஏன் ரத்தம்.?.

டேய் இதெல்லாமா கேட்பா பொம்பள பிள்ளைங்க எல்லாம் இருக்குதுங்க. இதுதான்டா அந்த மாசத்துல மூனு நாள் டையபர் விசயம். இது கூடவா தெரியாது

அண்ணா எனக்கு அதுதெரியும் ஆனா யுவா கர்பமா இருக்கா சாரி இருந்தா எப்படி மென்ஸ்சுரேஷன் வரும்...?.

இருக்கா தான் சரி டா..

ஒருவேளை இறந்ததும். பனிக்குடம் உடைந்து எதாவது?.

இதுக்கு வாய்ப்பிருக்குடா 50 50 தான்.

இல்ல. கொண்டுவரும் போது வயிற்றில் அழுத்திருந்தா உடைஞ்சிருக்கும் என்றான் மாணவனில் ஒருவன்.. நல்ல பையன்.

வழக்கம் போல மகேஷ் அண்ணா கழுத்தின் நரம்புகளை பிடித்து பார்த்துவிட்டு.. டேய் பவி கழுத்துல எதும் டவுட் இல்ல என்று கழுத்திலிருந்து கத்தியால் ஜாலியாக வயிறுவரை வந்தவர் அங்கேயே நிறுத்திவிட்டார் எப்போதும் இடைவரை வருபவர் வயிற்றினில் நின்றது புதியது..என்று பார்த்திருந்தேன்.. மாணவர்களை தூரம் நகரச்சொல்லி.. என்னையும் நகரச்சொன்னார்.. நகர்ந்தபின் பேசிக்கொண்டே கைகளை உள்ளே விட்டு சில இடங்களில் இழுத்தார்...

கிராமத்துல ஒரு நம்பிக்கை உண்டு தெரியுமாடா பவி?..

ம். அந்த சுமைதாங்கி கல் தான. அண்ணா. கர்பிணிகளா இறந்த அவங்க நினைவா வைப்பாங்க . அது ஒரு ஐதீகம்னு சொல்வாங்க..

ஐதீகம் எல்லாம் இல்லடாநம்பிக்கை தான்..

ஆமா அவள் ஆத்மாவா திரிஞ்சா அவள் வயிற்றின் பாரத்தை சுமக்க ஒரு கல் வைப்பாங்க. அதாவது மற்ற கர்பிணிகளுக்கு அப்படி ஆகாம இருக்க இவ தான் காப்பாத்தனும்னு ஒரு நம்பிக்கை இதுல அந்த கல்கிட்ட கர்பிணிகள்  உட்கார கூடாது. சின்ன பசங்க போகக்கூடாது பயங்கரமா கட்டுக்கதை சொல்லுவாங்க..

எப்பவாவது உன் கேஸ்ல கர்பிணிய அடக்கம் பன்றத பார்த்துருக்கியா?.

இல்லண்ணா முடிஞ்சவரை எரிச்சுடு வாங்க அதுக்குமே ஒரு கதை சொல்லுவாங்க. பிறக்காமலே இறந்துபோற குழந்தை வேற உடம்புக்கு வெரித்தனமா அலையும்னு சொல்வாங்க..

எப்பவுமே கர்ப்பிணி அடக்கம் பண்ணும்போது குழந்தைய தனியா எடுக்க மாட்டாங்க.. குழந்தை  பிறந்து உயிர் வாழும்ங்கிற கட்டம் வந்தாதான் பிரிப்பாங்க.. யுவா எத்தனை மாசம்?

ரெண்டற மாசம் னு நினைக்கிறேன்.

ம் வேதாளம் மாதிரி இருக்கும் இப்ப..

பசங்களா . புள்ளைங்களா  இந்த பேய் பிசாசுக்கு பயம்னா ஒரு பத்து நிமிசம் வெளிய இருக்கிங்களா?.  என்றார் மகேஷ் அண்ணா.

இருவர் மட்டும் தான் வெளிய போனாங்க.. .

மகேஷ் அண்ணா யுவாவின் வயிற்றுக்குள் கைவிட்டு அவளது கருப்பையை வெளியே எடுத்து மெல்ல வயிற்றின் மேல் வைத்தார். பவி நகரு என்றார்.. எனக்கே கொஞ்சம் நடுக்கம் வந்தது அந்த சிவப்பில் பார்க்க அருவருப்பும் பயமும் வந்தது.. மெல்ல கட்டரை கருப்பையின் நடுவில் ஓரமாக வைத்தழுத்தியும்.. டம் என்ற சப்தத்துடன் பாடிக்கு மேல் மாட்டியிருந்த லைட் அடிபட்டு என் கால் வரை ரத்தமும் திரவமுமாய் சிதறியது. லைட்டிலிருந்து யுவா வயிற்றில் விழுந்த அந்த சிறு சதை துடித்தது.

பாதி மாணவர்கள் அலறினர் மற்றவர்கள்  பக்கத்தவரை கட்டிக்கொண்டு கத்தக்கூட முடியா நிலையில் திகைத்திருந்தனர்.. 

பசங்களா கொஞ்சம் வெளிய போங்க நான் க்ளீன் பண்ணிட்டு கூப்புடுறேன் என்று அவர்களை அனுப்பினார் மகேஷ் அண்ணா..

அவர் அந்த திரவத்தை ஒரு கெமிக்கல் டியூபில் வைத்து. அந்த சதையினை ஒரு ட்ரேவில் வைத்து விட்டு இப்போது இடை வரை அறுத்துவிட்டு . அந்த தரையினை தண்ணீரால் கழுவிட்டு. யுவாவின் கழுத்தில் கைவிட்டு அடி நாக்கை கொத்தாக பிடித்து எடுத்து அவள் காலுக்கு இடையில் போட்டார் . பவி பசங்கள வர சொல்லு.. நான் போய் கூட்டி வந்தேன்.. 

அவர்கள் ஏன் இப்படி ஆச்சு? என்று கேட்டனர். மகேஷ் அண்ணாவோ அது ஒன்னுமில்லப்பா உடம்ப அடக்கம் பன்றவரைக்கும் அந்த உயிர் உடம்பயே சுத்திகிட்டு இருக்கும் . இப்ப அது வயித்துல இருக்குற குழந்தைய நாம பிரிக்குறோம்ங்கிற ஆத்திரத்துலயும். பிறக்கவே இல்லயேங்கிற ஆதங்கத்துல இந்த குழந்தையின் உயிரும் ஆக்ரோசமா வெளிய வரும் அதான்..

ஐய்யய்யோ அப்ப இங்க பேய் இருக்கா? .என்று மாணவர்கள் கேட்க

அதிலென்ன சந்தேகம் நீங்களே பாத்தீங்கல்ல. எப்படி நடக்குது. பயப்படாதீங்க நான் அதெல்லாம் மந்திரிச்சு வெச்சிருக்கேன்.. என்றார்..

மாணவர்கள் பயந்ததை பார்த்து . அட ஏன் அண்ணா பாவம் படிக்கிற பசங்க ஏன் வெளையாடுறீங்க . அவங்களுக்கும் தெரிய வேண்டாமா?..

தம்பிங்களா  அதெல்லாம் ஒன்னுமில்ல .. இறந்த உடனே உடம்பு தன்னை தானே அழிச்சுக்க துவங்கும். அதுல எல்லாமே மக்க ஆரம்பிச்சுடும்.. அப்படி மக்கும் போது நம்ம குடல்ல வயித்துல எல்லாம் சுரபிகள் சுரந்து வாயுவா மாறிடும். அது மாதிரி கருப்பை தன் நீர் தன்மைய இழக்கும் போது சில வாயுக்கள வெளியிடும் அந்த வாயுவும் பனிக்குடத்துக்குள்ள வாயுவும் சேர்த்து ஒரு பலூன் மாதிரி ஆகிருக்கும் இப்ப அண்ணா பளேட் வெச்சதும் அந்த வாயுக்கள் வெடிச்சுருச்சு அவ்ளோதான்.. நார்மலா நம்ம வயித்துல சுரக்குற ஆசிட் நாம இறந்தபின்னாடி முழுசா சுரந்து கேஸா மாறி வயிறு வெடிச்சிடும் அதுதான் பாடி டீகம்போஸிங் மெத்தடே அதேதான் இங்கயும்..

ம் . சரிடா முழு பாடத்தையும் நீயே எடுத்துடு அந்த டாக்டர் வர மாதிரி தெரியல..

அண்ணா எனக்கென்ன தெரியும் ..  நீங்க வேற .

டேய் தெரிஞ்சத சொல்லு மத்தத அவங்க வேற கேனவர் வரும் போது படிச்சிக்கட்டும்.. சரி உனக்கு என்ன டவுட்டு என்ன சாம்பிள்ஸ் வேணும்?.

சரி சொல்றேன்.  அண்ணா..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post