குறளும் - 7 பொருளும் - பாகம் 2

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்..

இந்த குறளில் தான் நான் ஒன்றை காட்ட விழைகிறேன். உரைகளில் சிறந்தது எது என்று பல வாதம் வரும் போது நான் பரிமேல் அழகர் பக்கமே நிற்க இந்த குறள் உதாரணம்..

1) சாலமன் பாப்பையா - பிறர் உண்பதையும் உடுப்பதையும் பார்த்தால் அவரை குற்றம் காணும் திறனுள்ளவன் கயவன்.

2) பரிமேல் அழகர் - பிறர் தன் செல்வத்தால் நல்ல ஆடைகளை உடுப்பதையும் நல்ல உணவை உண்பதையும் கண்டு பொறாமையால் அவர் மீது குறையே இல்லாத போதும் குற்றம் காணும் குணமுள்ளவன் கீழ்மகன்..

இதில் இரண்டில் எது நியாயமானது என்று கேட்டால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

இனி நான் 

இந்த குறளில் வள்ளுவன் அளபெடை பயன் படுத்தியிருப்பார் உடுப்பதும் என்பதை உடுப்பதூஉம் என்று இழுக்கிறான் என்றால் விசயம் வைக்கிறான் என்று பொருள்..

3) உடுப்பதும் உண்பதும் கண்டு குறைசொல்வதில் மேன்மக்களும் உண்டு.. ஞானிகளும் உண்டு..  அப்பா பிள்ளையை பார்த்து இப்படி கண்டபடி தின்கிறயே ஒரு நீட்டா இருக்க தெரியுதா உனக்கு என்று திட்டினால் அவர் கீழ்மகனா? . இல்லையே..

டேய் எப்படி சாப்டுறான் பாருஉடா என்று பொறாமை கொள்பவன் தானே கீழ்மகன் அந்த அளபெடை அதனை தனியாக காட்டும் . சொல்லி பாருங்கள் உடுப்பதூஉம்.  யார் கீழ்மகன் என்று பிரிக்க கற்றுதருகிறார்..

4) உடுப்பது உண்பது இரண்டும் அனைவரின் தேவை தான் என்று பொதுவியலாக எண்ணாமல் தனி சொத்தாக கொள்வதே தவறு . இந்த தவறை காண கீழ் இருப்பவனாலே தான் முடியும்.

5) ஆடை உணவு அனுபவிப்பவர் மேல் மக்கள் . அந்த இயலாமையின் காயம் காண்பவர் கீழ் மக்கள் (செல்வத்தில்). இப்படி வள்ளுவன் சொல்ல மாட்டானே .  இருந்தாலும் இப்படி பாக்கலாம்..

6) பிறர் உடுப்பதும் உண்பதையும் பார்த்து பொறாமை படுவதே தவறு . அந்த தவறு கீழ்மக்களிடம் படிந்து படிந்து வடுவாகிவிட்டது. அந்த வடு காணப்பட்டால் அவன் கீழ்மகன் பிறர் மேலானவர் .

7) செல்வந்தர்களிலும் உடுத்தலையும் உண்பதையும் கண்டு எடைபோடுவர் உண்டு அவர் கீழ்மகன் மற்றவர் மேலானவர்.. - பிறர் மேல்..

ஒன்று போலவே இருந்தாலும் வெவ்வேறு நிலையிலானது..

1) கயவன்
2) குற்றம் சுமத்துபவன்
3) யார் கீழ்மகன் என்று காட்டுவது
4)கீழ் இருப்பவன் தான் கயமைத்தனத்தை காட்டும் திறனுள்ளவன்
5) நல்ல உடை உணவு இல்லாத வடு கீழ்மகனின் மனதில் காணலாம்

6) பொறாமை கீழ்மகனின் ஆறா வடு
7) செல்வரிலும் கீழ்மகன் உண்டு..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post