கோயிலா? நம்பிக்கையா?

கொரோனா-வை பார்த்து மக்கள் அனைவரும் பயந்து மருத்துவமனையை நோக்கி ஓடுகின்றனர், வழிபாட்டுத் தளங்களை மூடிவிட்டு. இங்கு மக்களின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

சங்கர் தியாகராஜன் - அவர்களால் quora வில் கேட்கப்பட்டது.. 




ஒன்றை தெளிவாக்க விரும்புகின்றேன்.. கடவுள் அறிவியல் என்று ஒன்று உள்ளது .. கடவுள் நம்பிக்கை என்று ஒன்று உள்ளது… இரண்டும் மனிதனின் நிலையை பொறுத்தது.. இங்கு கோயில்கள் கடவுள் அறிவியல் வகையை சார்ந்தது.. மக்கள் ஆலயங்களை விலகினாலும் அவர்கள் வீட்டு பூஜையறையை பூட்டவில்லை.. அது நம்பிக்கை சார்ந்தது.. இன்றும் பல மருத்துவர்கள் தமது இஷ்ட தெய்வத்தை வேண்டியே பணிக்கு செல்கின்றனர்..


கோயில்கள் கடவுளை கொண்டாடும் ஒரு பார்ட்டி பப் போல.. இந்த சமயத்தில் கூட வீட்டில் பார்ட்டி செய்யும் பலரை காணமுடிகிறது..

ஆக கொண்டாட்டங்கள் செய்யும் கோயில் மூடப்பட்டாலும் நம்பிக்கை மாறவில்லை… சில அல்லது பல பகுத்தறிவுவாதிகள் சூழ்நிலையை சாதகமாக பேசிக் கொள்வர். திரு பெரியார் சிலை மீது ஏதேனும் நடந்தாலும் அவர்களும் துடித்துப்போவர்.. அதுவும் ஒருவகையில் இறைபற்று போலத்தான்.

ஆகையால் தலைவன் இல்லாமல் எவனும் இல்லை.நாம் கடவுளை தலைவனாக கொள்கிறோம். அவர்கள் வாழ்ந்து காலத்தால் கொண்டாடப்பட்ட மனிதரை தலைவனாக கொள்கின்றனர்.. இரண்டும் ஒன்று தான். அற்புதம் செய்பவரால் நாம் கவரப்படுகிறோம் என்கிறதுநான்..

ஆக ஆலயங்கள் மூடப்பட்டால் கடவுள்கள் இல்லாமல் போய்விடுவதில்லை. கடவுள் நம்பிக்கையும் அழிந்துவிடுவதில்லை.. மனிதன் குற்றங்களால் நிறைந்தவன் எதிர்வீடு தனிமைபடுத்தப்பட்டால். நம் தெருவாசிகள் அவர்களை நடத்தும் முறையை சொல்லவேண்டியதில்லை.. இந்த குணத்தை கட்டுப்படுத்து ஏதோ ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அதனை எந்த அறிவும் விழிப்புணர்வும் தருவதில்லை. மாறாக நம்பிக்கையே தருகிறது. அந்த நம்பிக்கையூட்ட ஒரு தலைவன் அவசியம்.. கடவுளை எவராலும் ஒழித்துவிடமுடியாது..


நீண்ட பதிலுக்கு மன்னிக்கவும். இந்த எண்ணங்களை தோற்றுவிக்கும் படியான கேள்விக்கு எனது நன்றிகள்..

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post